கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
சூபிமுகமது
திண்ணை இணைய இதழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஒரு ஜனநாயகபூர்வ படைப்பாளி கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்.
கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராக கொண்டு இயங்கும் உயிர்மை இதழில் மே2007 அவரது ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
அக் கட்டுரையின் தலைப்பு இஸ்லாத்தில் குடி கலாசாரம் மெளனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள் என்பதாகும்.
இக்கட்டுரை திருக்குரான் பிரதியில் குடிபற்றிய வசனங்களை மறு வாசிப்பு செய்திருந்தது.
ஹதீஸ்களிலும் , உலக அளவிலும் அரபுநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குடி பற்றிய கருத்துக்கள் எதிரும் புதிருமாக பேசப்படுவதை அக்கட்டுரை மிகுந்த சிரத்தையோடு பதிவு செய்திருந்தது. இக்கட்டுரைக்காக அவர் வாழும் ஊரின் உலமா சபை அவரை காபிர் என பத்வா வழங்கி வன்முறை செய்துள்ளது. காபிர் என்பது அவரை இஸ்லாத்திலிருந்து மத விலக்கம் செய்வதாகும். இப்படி ஒரு பத்வாவை வழங்க இந்த முல்லாக்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
தொடர்ந்து அவர் வாழும் ஊர்ஜமாத்து அவரை நிர்வாக பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தள்ளதாக தெரிகிறது.
ஒரு இஸ்லாமிய சித்தாந்த கருத்தை விவாதிக்கும் ஜனநாயகமற்று இப்படி ஒரு படைப்பாளியை பழிவாங்குவது என்ன வகை நியாயமோ…
தற்போது அவரது ஜமாத்து அவரை ஊர்விலக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குடிபற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதிய ரசூலை தண்டிக்கும் இந்த முல்லாக்கள் ஜமாத் நிர்வாக அதிகாரத்தின் பீடங்கள் மது குடிக்கும் முஸ்லிம்களை கட்டிவைத்து ஹதீஸ்களின்படி எண்பது சாட்டையடிகள் கொடுக்கத் தயாரா…
மனிதாபிமான ஜனநாயக எண்ணம் கொண்ட படைப்பாளிகள் இந்த வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பார்களா…
tamilsufi@yahoo.com
(இந்தக் கடிதம் பெற்றவுடன் ஹெச் ஜி ரசூலுக்கு எழுதி இது உண்மையா என்று கேட்டிருந்தோம். அவர் எழுதிய ஆங்கிலக் கடிதம் இது :
Dear Thinnai editor
I have received your forwarded article. It is true- more than that I was debarrred and excommunicated from my APMA jamath with my wife and my two daughters from 12-07-2007.
Now I have filed a suit before the court of Honourable district munsif , Padmanabapuram against the APMA executives for the unlawful unconstitutional act of Oorvilakku.
If possible kindly make the correction in the sufis article and publish it in thinnai.
I will write these matters in detail to Thinnai readers very soon. It is a part of my demacratic struggle made in the Islamic cultural field.
Thank u
Razool
ரசூல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரசினைகளுக்கு சுமுக தீர்வு காண இஸ்லாமியத் தலைவர்கள் தலையிட்டு உதவுவார்கள் என்று நம்புகிறோம்.)
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- போதி
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- அழகிய சிங்கரின் கவிதைகள்
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- பெண்கள்
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கடிதம்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்