கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

வஹ்ஹாபி



நவம்பர் 16, 2006 திண்ணை இதழில் இடம் பெற்றிருந்த எனது கடிதத்தில் நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம்.
நல்ல முடிவு!
இந்தக் கடிதத்தின் இறுதில் ‘திண்ணையில் வஹ்ஹாபி’ என்றொரு சுட்டி இருக்கும் . அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும்.
அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன.
“சமாதிகளைக் கட்டிக் கொண்டு ‘பண்பாட்டு ‘ முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன?
இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு?”லிருந்து தொடங்கி, ‘வெற்றிலைப் பிள்ளை’ வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த ‘முலையறு சபத’த்தை மறந்து விடவேண்டாம்!
என்று நான் கேட்டிருந்தேன். சுட்டி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80611164&format=html
எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாத, கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டியாகிப் போன சூபி, உலகம் இருண்டு விட்டதாகப் புலம்புகிறார்.

அப்ரஹாவின் யானைப்படையைப் பறவைகள் அழித்த அதிசயம், வெறும் மூடநம்பிக்கையன்று. மாறாக, பதிவு செய்யப் பட்ட வரலாறு. எமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ஆண்டுதான் அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற ‘யானை ஆண்டு’.

சென்ற வாரத் திண்ணையில் சூபியின் கடிதமும் அதற்கான (ஹமீது ஜாபரின்) பதிலும் ஒரே இதழில் வெளிவந்ததும் ஓர் அதிசயமே!

இன்னொரு அதிசயமும் உண்டு!

அதுதான் சூபி என்னும் காவியை ஹமீது ஜாபர் இனங் கண்டு கொள்ள இத்தனை காலம் எடுத்துக் கொண்டது!

பிப்ரவரி 24, 2006 திண்ணை இதழிலேயே ‘சூபியின் முகமூடி மட்டும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தில் (சுட்டி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80602249&format=html) அந்த முகமூடியைச் சற்றே நீக்கிக் காட்டியிருந்தேன்.

பின்னும்,

ஜூலை 6, 2006 திண்ணை இதழில் வெளியான ‘நியாயமான கேள்விகள்’ என்ற தலைப்பில் (சுட்டி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80607075&format=html) நான் எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளில்

திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா?
நான்: என்ன சொல்றீங்க?
நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே!
நான்: எப்படிச் சொல்றீங்க?
நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது.
நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்?
நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா … திண்ணை பப்ளிஷ் செய்யுமா?

என்று சூபியின் முகமூடியை முற்றிலும் கிழித்திருந்தேன்.

பொத்தென்று வந்து விழுந்த அந்தப் பூனைக்குட்டிதான் இப்போது கோரைப்பாயென்று நினைத்துக் கொண்டு மாமலையைப் பிராண்டுகின்றது.

எனது பழைய பதிலையே பதிவு செய்கிறேன்:
பெரிய-கொடிய மிருகங்கள் எல்லாம் மோதிப் பார்த்த மலைதான் குர்ஆன். அதில் மோதிச் செத்துப் போன மிருகங்களின் உக்கிப்போன எலும்புகள் அம்மலையின் அடிவாரத்தில் இன்னும் எஞ்சிக் கிடக்கின்றன. கழிவிடக் கொசுக்களின் கடிக்கெல்லாம், மலை அசைந்து கொடுத்து விடாது.

ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி