தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்

This entry is part of 39 in the series 20060512_Issue

சூபி முகமது


தமிழ் தொழுகை குறித்த விவாதத்தில் மொழி பற்றிய குர்ஆனின் அணுகுமுறை என்பதே முஸ்லிம்களுக்கு உணர்த்துதல் என்பதான அடிப்படைச் சார்ந்ததாகும். தமிழ் தெரிந்த முஸ்லிம்களுக்கு வெறும் அரபு மொழி உச்சரிப்பு எந்த புரிதலையும் ஏற்படுத்துவதில்லை. எனவே உச்சரித்தல் x உணர்த்துதல் இருவித கருத்தாக்கங்களில் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட நோக்கமும், தமிழில் தொழுகை நடத்துதல் என்பதும், ‘உணர்த்துதல்’ சார்ந்த அம்சங்களையே கொண்டுள்ளன.
மேலும் 6666 வசனங்கள் கொண்ட திருக்குர்ஆன் ஐவேளை தொழுகை உள்ளிட்ட தராவீஹ், ஜும்மா மற்றும் இதர பல தொழுகைகளின் போது சூரத்துல் பாத்திகா வசனம் ஓதியபின் துணை சூராவாக திருக்குர்ஆன் வசனங்களும் ஓதப்படும்.
மாதிரி 1
திருக்குர்ஆன் லஹப் அத்தியாயம் 111,
அழியட்டும் அபூலஹபின் இருகரங்கள். அவனுமே அழியட்டும்!
அவனுடைய பொருளும் அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது.
அதி சீக்கிரத்தில்த அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அடைவான்.
விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான் (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்)
மாதிரி 2
அல்பகறா அத்தியாயம் 2. வசனம் 222
(நபியே) மாதவிடாயைப் பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது அசுத்தமான ஓர் உபாதை எனவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை அணுகாதீர்கள்…
மாதிரி 3
அல்பகறா அத்தியாயம் 2 வசனம் 223
உங்கள் மனைவிகள் உங்களுக்குரிய விளைநிலம்.
உங்கள் விளைநிலத்தில் நீங்கள் விரும்பியவாறு சென்றுஉங்களுக்கு முற்படுத்திக்தி கொள்ளுங்கள்.
மாதிரி 4
அன்னிஸாஉ அத்தியாயம் 4. வசனம் : 3
உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ மும்மூன்றாகவோ
நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம்… நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால்
ஒரு பெண்ணையே அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அடிமை பெண்ணையே திருமணம்
செய்து கொள்ள வேண்டியது …..
தமிழில் தொழுகை நடத்துவதற்கு வகாபி மறுப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஒருவேளை இப்படியான திருக்குர்ஆனிய சில வசனங்களை எப்படி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி சொல்வது என்ற தயக்கமாக இருப்பின் அல்லாவின் வார்த்தைகள் தான்
அவை என்ற வகையில் அந்த தயக்கத்தை விட்டொழிக்க முயல வேண்டும் இவ்வசனங்கள் சொல்லப்பட்ட சூழலையும் கருத்திற்கொள்ள வேண்டும். என்பதே எனது வேண்டுகோள்.
————-
tamilsufi@yahoo.com

Series Navigation