காலச்சுவடு – மாத இதழாகிறது

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

அறிவிப்பு


அன்புடையீர்,

வணக்கம்..

காலச்சுவடு மே 2004 (இதழ் 53) முதல் மாத இதழாக வெளிவருகிறது.

1987இல் துவங்கப்பட்ட காலச்சுவடு ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் 1994 இலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருகிறது. காலாண்டு இதழாகத் துவங்கிய காலச்சுவடு 2000த்தில் இருமாத இதழாகி தற்போது மாத இதழாக மாற உள்ளது.

இதழின் உள்ளடக்கம், பங்களிக்கும் படைப்பாளர்கள், உலகளாவிய விநியோகம், விற்பனை என அனைத்துத் தளங்களிலும் எளிய ஆனால் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காலச்சுவடு கண்டுவருகிறது. ஒரு வேகத்தில் துவங்கி பின்னர் இறங்குமுகமாகப் பயணிப்பதே தமிழ் தீவிர இதழ்களின் நூற்றாண்டுகால வரலாறு. இந்தப் பொதுப்போக்கிற்கு மாறாகத் தொடர்ந்து வளர்ச்சியை கண்டுவரும் இதழ் காலச்சுவடு.

எங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் மிக அவசியம்.

காலச்சுவடு மாத இதழில் பால் சக்கரியாவும் யு.ஆர். அனந்தமூர்த்தியும் பத்தி (column)எழுத உள்ளனர். இவற்றைக் கவிஞர் சுகுமாரனும், கவிஞர் நஞ்சுண்டனும் முறையே மலையாளத்திலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தமிழாக்கம் செய்து தருவார்கள். பிற மொழிப் படைப்பாளிகள் ஒரு தமிழ் இதழுக்காகப் பத்தி எழுதுவது இதுவே முதல் முறை. அம்பையின் புதிய பத்தியும் துவங்க உள்ளது. கனடாவிலிருந்து அ. முத்துலிங்கமும் கவிஞர் சேரனும் தொடர்ந்து பங்களிப்பார்கள். ஈழத்திலிருந்தும் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்தும் தமிழர் புலம் பெயர்ந்த பிற நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியான பங்களிப்புகள் இடம்பெறும். உலகத் தமிழரின் தீவிரச் செயல்பாட்டுக் களமாகக் காலச்சுவடு இயங்கும்.

பிரெஞ்சின் சமகாலப் படைப்புகளை செவாலியே ஸ்ரீராம் அறிமுகம் செய்ய உள்ளார். தமிழ் ஊடகங்கள் பற்றிய விமர்சனம் தொடர்ந்து இடம்பெறும். இன்னும் பல புதிய பகுதிகள், புதிய அழுத்தங்கள், புதிய முகங்கள், புதிய வடிவமைப்புடன்- சமகாலத்துடன் இன்னும் நெருக்கமான தீவிரமான உறவுகொள்ளும் முகமாக – காலச்சுவடு மாத இதழாகிறது.

காலச்சுவடின் ஆயுள் சந்தாதாரராக இணைந்து எங்கள் முயற்சியை ஆதரிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அல்லது ஐந்தாண்டு சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் தற்போது சந்தாதாரராக இருந்தால் எங்களிடம் எஞ்சியிருக்கும் தொகை போக மீதமுள்ள தொகையை அனுப்பினால் போதுமானது.

உங்கள் நண்பர்களையும் காலச்சுவடின் சந்தாதாரராக இணைத்து உதவுங்கள். உங்கள் தொடர்ந்த ஆதரவு காலச்சுவடுக்கு இன்றியமையாத பலமாக இருக்கும்.

தோழமையுடன்

(கண்ணன்)

பதிப்பாளர் – ஆசிரியர்

புதிய சந்தா விபரம்

ஆண்டுச் சந்தா ரூ. 140

இரண்டாண்டுச் சந்தா ரூ. 240

ஐந்தாண்டுச் சந்தா ரூ. 600

மாணவர் ஆண்டுச் சந்தா ரூ. 75

ஆயுள் சந்தா ரூ. 2500

அயலில் வாழ்பவர்களுக்கு

ஆண்டுச் சந்தா ரூ. 600

இரண்டாண்டுச் சந்தா ரூ. 1000

ஐந்தாண்டுச் சந்தா US$ 75

ஆயுள் சந்தா US$ 250

—-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு