என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

ஜெயமோகன்


என்னுடைய அனைத்து சிறுகதைகளையும் உயிர்மை பதிப்பகம் நூலாகக் கொண்டுவருகிறது. சிறுகதைகள் ஒரு தொகுதியாகவும் குறுநாவல்கள் ஒரு தொகுதியாகவும் வெளிவருகின்றன.

பொதுவாக நான் படைப்புகளை சேர்த்து கோப்புகள் செய்வதில் அக்கறை எடுப்பவனல்ல. அத்தகைய ஒழுங்கு என் இயல்பில் இல்லை. ஆகவே பல கதைகள் தவ்றி விட்டன. சில நண்பர்கள் சேர்த்து அளித்த கதைகள் மட்டுமே இதுவரை தொகுப்பாகி உள்ளன.

உயிர்மை பதிப்ப்கம் கடுமையான உழைப்பின் மூலம் பல கதைகளை தேடி எடுத்து ஏறத்தாழ முழுமையாகவே தொகுப்புகளைக் கொண்டுவருகிறது . இப்போது இரு கதைகள் மட்டும் தவறிவிட்டன. ஒன்று அம்மன் மரம். பாலசங்கர் என்ற பேரில் வெளியானது. இன்னொன்று பூமியின் முத்திரைகள். ஜெயமோகன் என்ற பேரில் வெளியானது. இரண்டுமே கணையாழி இதழில் வெளியாயின. 1994 ல் முதல்கதையும் 1992ல் இரண்டாம் கதையும் பிரசுரமாயின என்பது என் எண்ணம். இக்கதைகள் கிடைக்கவில்லை.

கணையாழி இதழை நடத்தியவர்கள் இதற்கு உதவ முன்வரவில்லை, கணையாழியில் வெளியான விஷயங்களை தொடர்ந்து தொகுப்புகளாக்கி அதில் எழுதுபவர்களுக்கே தெரியாமல் நூலாக்கியும்கூட . இதழ் தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர் .அவர்கள் இதை ஒருவகை அதிகாரமாக கருதுவதனால் உதவ மறுத்துவிட்டனர்.

ஆகவே வழக்கம்போல வாசகர்கள் மற்றும் நண்பர்களிடம் விண்னப்பிக்கிறேன் . இக்கதைகள் கைவசம் உள்லவர்கள்

ஜெயமோகன்

93, சாரதா நகர்

பார்வதிபுரம்

நாகர்கோவில்

629003

என்ற விலாசத்துக்கு அல்லது உயிர்மை விலாசத்துக்கு அனுப்பி உதவினால் நன்றியுள்லவனாக இருப்பேன்

ஜெயமோகன்

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்