கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

கோச்சா (எ) கோவிந்த்


தன்னம்பிக்கையா.. ? தான்-நம்பிக்கையா… ?

ஜெயலலிதாவிற்கு இருப்பது தன்னம்பிக்கையா.. ? தான்-நம்பிக்கையா… ? என்று தெரிந்து விட்டது அவருக்கு தற்போது.

எது எப்படியோ-

நான் காத்திருந்தது தென்சென்னைக்கு மட்டும் தான்.

கூட்டணி வலிமை தெரிந்தது தான். ஆனாலும் ஒரு சந்தோஷ எதிர்பார்ப்பு – தென்சென்னை பற்றி…!

ஏன்.. ?

இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள், தென்சென்னையில் இந்துக்களும், பிறாமணர்களும் தி.மு.க-விற்கு டி.ஆர்.பாலுவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று.

ஜெ சொல்லி விட்டால் யாராக இருந்தாலும் வாக்களிப்பார்கள் எனும் கொச்சை நினைப்பு வேறு.

மின் பிம்பங்கள் தயாரிப்பில், ‘கதையல்ல நிஜம் ‘ வந்து கொண்டிருந்தது விஜய் டிவி-யில். ஒரு இதய நோயாளிக்கு பணம் தேவை அறுவைச் சிகிச்சை செய்ய..! என்று அறிவித்தனர்.

பேட்டி ஒளிபரப்பான ஒரு மணி நேரத்தில் மின் பிம்பங்கள் அலுவலகம் வந்த நபர், ஒரு மஞ்சள் பையில் போட்டு ரூபாய் 40,000/- தந்து சென்றார்.

அது கொடுத்தவர் யார் என்று சொல்லக்கூடாதென்ற கட்டளை வேறு.

அதனால், நல்ல மனம் படைத்தவரிடம் இருந்து என்று மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் அந்த மனிதன் வெற்றி பெற வேண்டும் என்று என் மனம் தினம் துதித்தது.

வாருங்கள் , டி.ஆர்.பாலு அவர்களே,

தென்சென்னைத் தொகுதி உங்களிடம் உரிமையுடன் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

நாங்கள் மறக்கவில்லை, கல்லூரி கட்டிடத்தின் அவசியம் கண்டு நீங்கள் போராடி ஜெயித்தது கண்டு.

கடற்கரைக் காக்க வேண்டிய பணி தொடரட்டும்.

—-

திருந்துவாரா ரஜினி…. ?

யாராயிருப்பினும் சரி, மக்கள் தங்கள் மேல் வைக்கும் நம்பிக்கையை தங்களது சுயநல அபிலாஷைகளுக்கு சாதகமாகத் திருப்பிய போதெல்லாம் அவர்களுக்குத் தோல்வி தான் கிடைத்திருக்கிறது.

ரஜினியின் குணம் சுயநலத்தின் உச்சமானது என்றும், தனது பட வருமானங்களுக்காகத் தான் அவர் அரசியல் பிரச்சனைகளை உபயோகிக்கிறார் என்றெல்லாம் பலரும் சொன்ன போது, திமுக, தமாகா நம்பாமல், தாங்களுக்கு மக்கள் கொடுத்த இமாலாய வெற்றியைக் கூட ரஜினியின் வலிமை எனக் கொச்சைப் படுத்தி மக்களை வேதனைப் படுத்தியது.

இதோ இன்று, 6தொகுதிக்கு அவர் கொடுத்த வாய்ஸ் 40க்கும் என மக்கள் எடுத்துக் கொண்டு விடை கொடுத்து உள்ளனர்.

இனியாவது ரஜினி புரிந்து கொள்ளட்டும். தனது தன்னம்பிக்கை, ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையின் வகையறா என்று.

இனியாவது ரஜினி மக்களின் வேதனைகளைப் புரிந்து கொண்டு, மக்களின் எரியும் பிரச்சனையில் குளிர் காய முயற்சிக்க வேண்டாம்.

ரஜினியின் சில அனுகுமுறை ஜெயலலிதாவை ஞாபகப்படுத்துகிறது. மக்கள் இவர் விஷயத்தில் இப்போதே உஷாராவது நலம்.

வாழ்த்துக்களுடன்

கோச்சா (எ) கோவிந்த்

gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா (எ) கோவிந்த்

கோச்சா (எ) கோவிந்த்