உயிர்மைக்கு ஒரு கடிதம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue


நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த செப்டம்பர்2003. தொடங்கப்பட்ட உயிர்மை மாத இதழ் பரந்துபட்ட பங்களிப்புகளுடன் ஒரு சர்வதேச தமிழ் சஞ்சிகையாக பரிணமித்து வருகிறது. உலகெங்கிலிருந்தும் தமிழில் எழுதும் நண்பர்கள் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சமூகவியல், மானுடவியல் சார்ந்த தங்கள் ஆக்கங்களையும் எண்ணங்களையும் இன்னும் விரிவான தளத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என உயிர்மை விரும்புகிறது.

இது தொடர்பாக உயிர்மை ஒரு புதிய பகுதியை தொடங்குகிறது. அயலில் இருக்கும் நண்பர்கள் தங்களைப் பாதித்த எதையும் பிறரோடு உரையாடுவதற்கான பகுதி இது. உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு சம்பவம், ஒரு பயம், ஒரு அவமானம், ஒரு குற்ற உணர்ச்சி, ஒரு மன நெகிழ்ச்சி, ஒரு புத்தகம், ஒரு பயணம், ஒரு சந்திப்பு, ஒரு நிகழ்ச்சி, ஒரு பத்திரிகைச் செய்தி ஒரு மர்மம் என எதைப்பற்றியும் நீங்கள் அடையக்கூடிய சலனத்தை உயிர்மைக்கு ஒரு கடிதமாக எழுதுங்கள். உயிர்மை அவற்றை தனது சாத்தியங்களுக்கு உட்பட்டு பிரசுரிக்கும். அனுபவம் மற்றும் சிந்தனையின் உக்கிரமான தெறிப்புகள் உள்ள ஒரு பகுதியாக மலர உங்கள் பங்கேற்பு உதவும்.

400 சொற்களுக்கு மிகாமல் TSCU_Inaimathi அல்லது Bamini எழுத்துருக்களை பயன்படுத்தி உங்கள் கடிதங்களை அனுப்பலாம். பிற எழுத்துருக்களை பயன்படுத்தி எழுதுபவர்கள் அந்த எழுத்துருக்களையும் இணைத்து மின்னஞ்சல் செய்யுங்கள். அனுப்பவேண்டிய முகவரி uyirmmai@yahoo.co.in

மிக்க நன்றி

அன்புடன்

மனுஷ்ய புத்திரன்

ஆசிரியர்

உயிர்மை

Series Navigation

உயிர்மை

உயிர்மை