வெங்கட்ராம கிருஷ்ணகுமார்
‘காபி குடிடா ! ‘ கண்ணா, என்று இறந்த என் அம்மா கூப்பிடுவது இன்னும் என் காதில் விழுகின்றது.
சிறு வயது முதல் காபி குடிக்கின்றேன், என்று கேள்வி பட்டவுடன் என் நண்பர்கள் அப்ப பீர் குடிக்க எப்ப கற்று கொண்டாய் என்று கலாய்த்தார்கள். பால் குடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவனை, அப்பா உறிஞ்சிக் குடிக்கும் காபியை உதாராணம் காட்டி, பால் குடிக்கச் செய்து போராடி தோற்றவள் என் அம்மா ! பார்த்தாள் ! பாலில் கண் முன்னால் சின்ன காபிப் பொடியைத் தூவியோ அல்லது சிறிது ‘டிக்காக்க்ஷன் ‘ போட்டு வெள்ளையைப் பழுப்பு நிறமாக்கி, ஏமாற்றுவாள். இப்போது என் மகனுக்கும் மனைவி அப்படியே செய்கிறாள். அதானால தான் என்னவோ, காபி குடிக்காத மகளைக் காட்டிலும் மகன் சுலபத்தில் எதையும் புரிந்து கொள்ள மாட்டான்.
அப்ப ஏமாந்து குடித்து, மூளை அவ்வப்போது மந்தப் பட்டு பிறகு, காபி குடித்து ‘ஷோக்கா ‘கிவிடும்.
காலையில் எழுந்தவுடன் காபி. பிறகு படிப்பு. பிறகு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. மாலை பள்ளி திரும்பியவுடன் காபி. பிறகு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா ! என்று என் அம்மா என்னை வளர்த்தாள்.
வீட்டில் யாராவது செத்தால், ஒப்பாரி முடிந்து ஒரு ‘காபி ‘. காரியம் பார்த்து விட்டு ஒரு ‘காபி ‘. குதூகூலமாக அரட்டைகள் முடிந்து ‘காபி ‘. சீட்டுக் கச்சேரிகள் முடிந்து ‘காபி! ‘. வெற்றிலைக் குதப்பி முடித்து விட்டு தடித்துப் போன நாக்கில் சூடாக மெதுவாக உறைக்கும் காபி. சிகெரெட் குடிப்பதற்கு முன் காபி. காட்பரீசின் சாக்லெட் விளம்பரத்தில் “முத்து பாஸாயிட்டால் கொண்டாடு!” என்பதைப் போன்று பாஸானால் காலேஜ் காண்டினில் காபி. பெயிலானாலும் அதே கதி தான்.
இட்லிக் குப் பின் காபி. தோசைக்குப் பின் காபி. சரவணா ஸ்டோர்ஸின் எவெர்சில்வர் டம்ளரில் காபி. நாயர் கடையின் அனைவரி எச்சலையும் கழுவாத மொழுகேறியிருக்கும் பீங்கான் கோப்பையில் காபி.
நாய் போன்று தட்டில் ஊற்றி உறிஞ்சிக் காபி! மற்றும், ஆபிஸ் பாய் வைத்து போகும் கண்ணாடி டம்ளரில் காபி! நாயர் கொடுத்த ஈ விழுந்த காபியில் ஈயைத் தூக்கி போட்டு காபி குடிப்பதும் உண்டு. மனைவி போட்ட காபியில் முடி விழுந்தால், காபியைத் தூக்கிக் கொட்டி ஆண்திகாரம் காட்டுவதற்கும் காபி.
ஒரு நாள் மனைவியிடம் “என்ன தான் இருந்தாலும் அம்மா மாதிரி காபி போடத் தெரியலை” என்றதற்காக எனக்குத் தண்டனையாக வீட்டுக் காபி ஒரு வாரத்திற்கு இல்லை. நானே இடித்து, பில்டரில் போட்டு, கள்ளிச் சொட்டுப் பாலை விட்டு, தக தக வென்று ஆற்றி குடிக்க ஆசை தான். அது அம்மாவின் காலத்தோடு சரி. நானும், என் மனைவியும் ஓடியாடி வேலைகள் செய்வதால், வந்தது “இன்ஸ்டன்ட் காபி!”. காபி கொட்டைகளைக் கடையில் தான் தரிசிக்கிறோம்.
முக்கியமாக கம்பெனி மீட்டிங் மற்றூம் அரசியல் கூட்டங்களுக்குப் போகுமுன் கள் அல்லது காபி தேவை !. காபியில் இருக்கும் கெஃபைன் மூளையில் உள்ள அடினோசைன் ரிசெப்டாரகளைத் தூண்டி நரம்பு செல்களின் செயலைத் தூண்டுகின்றன. அப்பாடா ! கடினமான ஒரு செய்தியை எழுதியாயிற்று! மறுபடியும் மூளை மந்தமாகிவிட்டது. ஒரு “காபி போடணும்!”.
அடிக்கடி தொலைக்காட்சியில் செல்வி, கோலங்கள், ஆனந்தம் போன்ற மெகா சீரியல்களைப் பார்த்து காபி அல்லது மது பருகவேண்டும். புகழ் பெற்றத் தமிழ் துப்பறியாளர் சங்கர்லால் தேநீர் மற்றும் பருகுவார் மற்றும் காபி பருகுவதில்லை என்று தமிழ்வாணன் அடிக்கடி எழுதும் செய்தியும் என் மனதில் வந்து போனது. ஒரே மாதிரி “பால் ஊற்றி சக்கரர போட்டு” காபி பருகுவதில் தமிழர்கள் செய்வதையேத் திருப்பிச் செய்யாமல் வனிலா, ஸ்டிராபரி, பால் கலக்காமல், சக்கரை போடாமல், எஸ்பிரசோ, கொக்கோ போன்று “கண்டதையும்” கலந்து பருகித் தொலைத்தால் காபி கடைகள் சக்கை போடு போடும். அத்துடன் குஷ்பூ, சுகாசினி, மற்றும் செருப்பு, துடைப்பம், கொம்பு, வெள்ளம், வறட்சி, கிரிக்கெட், கலவிக் கல்வி, தங்கர் பாச்சான், மன்னிப்பு, சூர்யா கைது, போன்ற செய்திகளை தினத்தந்தி, மாலை முரசுகளில் காபியுடன் படித்தால் ஆனந்தம் இருக்கவே இருக்கின்றது.
நாயர் டா, பன் கொடுப்பான், ஆனால் காபியுடன் பிஸ்கட் மட்டுமே கொடுப்பான். காபியின் சுவை அறிந்தவன் அவன். ஸ்டார்பக்ஸ் போன்ற சர்வ தேச பன்னாட்டு நிறுவனக் காபிக் கடைகளில், காபியுடன் சுவை கலந்த மெல்லிசை, வல்லிசைகள் ஸ்டாரியோக்களில் கசியும். அழகான கல்லூரிப் பெண் ஒயிலார்கள், மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாட வந்து காபி பருகும் அழகை கவிஞர் வாலி தான் அழகாகப் பாட முடியும். ஆனால் காபியின் விலை நாயர் கடை போன்று பன் மடங்கு அதிகம். சென்னையில் 15 ரூபாயிலும் காபி கிடைக்கும். 150 ரூபாயிலும் கிடைக்கும். அடப் பாவி, மூன்று டாலருக்கு ஒரு காபி அமெரிக்காவில் விற்கின்றான். சென்னையிலுமா ?. விலை அதிகம் இல்லை பிரதர்! மூன்றே டாலர் தான். தனியாக சக்கரை பாக்கெட்டுக்கள், பால், கிரீம்கள் இருக்க நாமே கலந்து கொள்ளலாம்.
நாயர் போட்ட சக்கரை, அவன் கலக்கும் பால் , அவன் கொடுக்கும் கப் ஆகியவற்றிகு ரூபாய் 15 போதும். வீட்டில் காபி போட்டால் 15 ரூபாய்க்கு மூன்று நாளைக்கு 6-7 கப் குடிக்கலாம். வெளியே காபி குடித்து காசைச் சீரழிக்காதே என்று செவியில் மோதும் என் மனைவியின் கட்டளைகள் “குடி குடியைக் கெடுக்கும்” போன்று இருந்தாலும் காபி ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ரொம்பவும் கெட்டு போகாமல், அவ்வப்போது மூளைச் சலவை செய்யும் அதற்கு நான் அடிமை தான் !
தீபாவளி, பொங்கல் சமயம் போது அனைவருக்கும் காபி டம்ளர், காபிக் கோப்பை, காபி பில்டர், காபி பொடி போன்று பரிசு வாங்கி கொடுத்து சமாளித்துவிடலாம். பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு கடலை போட அவர்கள் அம்மாக்களுக்கு காபிப் பொடித் திரித்து, ஐஸ் வைக்கலாம். ஐஸ் காபி கூட நன்றாக இருக்கும். தெரியுமா ?. இந்தக் கட்டுரை எழுதியதற்குச் சன்மானமாக ஒரு காபி இலவசமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், டயோட்டா கார் கிடைத்தாலும் கிடைக்கும்!. அதனால் தான் காபி குடித்தவுடன் மளமள வென்று எழுத வருகின்றது.
முத்தம் கொடுக்கப் போகும் முன்னால் மட்டும் எனக்கு ‘காபி இல்லை! ‘. எவ்வளவு பெண்கள் அதை “காபி குடித்த பின்” ரசிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெண்களில் காபியைக் குடித்தே வாழும் பெண்களும் உண்டு. என் அக்கா, தங்கைமார்கள் எல்லாம் நின்றால் காபி, நடந்தால் காபி, எழுந்தால் காபி, படுத்தால் காபி என்று வாழ்பவர்கள். வெற்று வம்பு பேசும் போது கூட இடையே “காபி!”. சிலர் காபி மட்டும் குடித்து உடலை இளைக்க வைப்பார்கள். “கண்ட இடத்தில் வாங்காதீங்க !” என்று மனைவி தரும் காபியை நான் அலுவுலகம் போகும் போது பிளாஸ்கில் ஊற்றிக் கொண்டு செல்வேன். ஆனால் நண்பருடன் கூவமருகே இருக்கும் பெட்டிக் கடையில் நாயர் காபி சாப்பிட்டுவிட்டு, ஒரு “தம்” பற்றவிட்டால், அதன் சுகம், மணம் அனைத்தும் மேலுலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். நான் மேலுலகம் போகும்போது என் வாயில் பாலூற்றாமல் காபி ஊற்றினால் மிக நன்றாக இருக்கும்.
http://www.newscientist.com/article.ns ?id=dn8401
Coffee hit jump-starts short-term memory
Coffee improves short-term memory and speeds up reaction times by acting on the brain’s prefrontal cortex, according to a new study.
Researchers used functional magnetic resonance imaging (fMRI) to determine how coffee activates different areas of the brain in 15 volunteers.
“Caffeine modulates a higher brain function through its effects on distinct areas of the brain,” explains Florian Koppelstயூtter, who carried out the research with colleagues at the Medical University at Innsbruck, Austria.
Prior to testing, the group fasted for 4 to 6 hours, and abstained from caffeine and nicotine for at least 24 hours. Then they were then given either a cup of strong coffee – containing 100 milligrams of caffeine – or a caffeine-free placebo drink. After 20 minutes all participants underwent fMRI scans while carrying out a memory and concentration test. A few days afterwards the experiment was repeated under the same conditions but each received the other drink.
Executive memory
During the memory tests, participants were shown a fast sequence of capital letters, then flashed a single letter on a screen and told to decide quickly whether this letter was the same as the one which appeared second-to-last in the earlier sequence. They had to respond by pressing a “Y” for yes or “N” for no button.
“The group all showed activation of the working memory part of the brain, ‘ Koppelstயூtter explains. ‘But those who received caffeine had significantly greater activation in parts of the prefrontal lobe, known as the anterior cingulate and the anterior cingulate gyrus. These areas are involved in ‘executive memory ‘, attention, concentration, planning and monitoring. ‘
“This type of memory is used when, for example, you look up a telephone number in a book and then mentally store it before dialling,” he adds.
Pick-me-up
Koppelstயூtter stresses that the study is preliminary and that he has yet to discover how long the memory effects last or what other effects coffee has on brain function. He adds that the long-term impact of caffeine use is also an important consideration.
But he says the study shows that coffee has an effect on specific brain regions involved in memory and concentration that tallies with anecdotal evidence of the drink ‘s “pick-me-up” effect.
Caffeine is known to influence adenosine receptors which are found throughout the brain on nerve cells and blood vessels. It is thought that the drug inhibits these receptors and that this excites the nerve cells in the brain. “This may be the mechanism involved,” suggests Koppelstயூtter.
The research was presented at the annual meeting of the Radiological Society of North America.
—-
Krishnakumar_Venkatrama@CSX.com
- திரைப்படம்:சாபமும், அபயமும்
- S ஷங்கரநாராயணனின் உரை
- குறும்பட நாட்கள் அழைப்பிதழ்
- கண்ணகி கற்பு / செருப்பும் துடைப்பக்கட்டையு ம் = நம் கலாச்சாரம்
- இம்மொபைல் ஆக்கும் மொபைல்!
- காபி
- ‘அடியோர் பாங்கினும்.. .. ‘
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VIII
- 42
- விம்பத்தின் இரு விழாக்கள் : எழுத்தாளர் சந்திப்பும் குறுந்திரைப்பட விழாவும்
- தனுஷ்கோடி ராமசாமி
- நான் கண்ட சிஷெல்ஸ் – 1. பயணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-6)
- பெண்கள் சந்திப்புமலர் 2004 ஒரு பார்வை
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள் -8
- மழை
- தேவதை உறக்கம்
- கீதாஞ்சலி (51) உன் காதல் என் மீது ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 67 – அப்பூதி அடிகள் நாயனார் புராணம் தொடர்ச்சி
- யார் அனாதை
- அயோத்திதாசர் ஈ. வே.ரா நிலைப்பாடு: சிவக்குமார் எதிர்வினையின் தூண்டுதலால் எழும் சில சிந்தனைகள்
- குழப்பமேதும் இல்லை
- கருணாநிதி கிளம்பிட்டார்யா… கிளம்பிட்டார்யா…
- தமிழக தத்துவங்களின் பன்முகம்