தினகப்ஸா வழங்கும் செய்திகள் : வாசிப்பது பரிமளா சிறியசாமி

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

சொதப்பப்பா


(வேண்டுகோள்: இந்த செய்திகள் அனைத்தையும் சன் டிவி பாணியில் கூவிக் கூவி படிக்கும்படி வாசகர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மூண்டிவியின் செந்தமிழ் புரியாதவர்களுக்கு, அடைப்புக் குறிக்குள் விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளன. )

பம்பம்பம்பம்…

வணக்கோம்.

மூண் செய்தீகாள்… தலாய்ப்புச் சேய்தீகாள்…

சென்னாயில் மாண் திருட்டூ… மாண் கோள்ளைக்காரர்கள் காய்தூ… (அதாவது சென்னையில் மண் திருட்டு.. மண் கொள்ளைக்காரர்கள் கைது)

வீட்டால் ஈரூந்தா பேண்ணீடாம் கழூத்தை சரசரவென்றூ அறுத்து வயிற்றீல் குத்தீ காலீல் வேட்டா கொலாய்…

ஏந்த சாயா கடாய் சீறந்தா கடாய்… மூண் செய்திகளூக்காக மாக்களீடம் காரூத்தூ காணிப்பூ

சாதம் சாப்பிட்டால் ஆபாத்தூ… உடானே மரணாம்..

சாட்டசபாய்யில் ஜெயலலிதாஆஆ தூம்மினார். கருணாநிதீ கண்டானாம்..

தீரூச்சீயீல் வெய்யீல்… மாக்காள் பாதாறி ஓட்டாம்…

பம்பம்பம்பம்….

சென்னாயில் மாண் திருட்டு… மாண் கோள்ளைக்காரர்கள் காய்தூ… (ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இடுப்பில் ஒரு கை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கேடியை தள்ளுகிறார். கேடி தடுமாறி நடக்கிறார்)

போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னால் இருக்கும் மூண் டிவி, பிச்சை டிவி, தோல்வி டிவி போன்றவை எழுதிய மைக்குகளில் பேசுகிறார்.

இங்க வந்து பாருங்க… மண் திருடுராங்க… மண் அதாந்… மண்… அதத் திருடுராங்க… புடிச்சிட்டோம்… அது என்னன்னா… (பாதியிலேயே அவர் பேசுவது வழக்கம்போல் வெட்டப்படுகிறது)

அடுத்த செய்தி வாசிப்பாளர்: கோடம்பாக்கம் பாலத்துக்குக் கீழ் ஈருக்கும் குடியிருப்புகளில் ஒரு பெண் தன்னந்தனியே ஈருக்கும் சமயம் பார்த்து சில திருடர்கள் புகுந்து பெண்ணை கழுத்தை சரசரவென்று அறுத்து, வயிற்றில் குத்தி காலில் வெட்டி கொலை செய்தார்கள்.

( காமிரா வீட்டு சுவரில் இருக்கும் ரத்தத்தைக் காண்பிக்கிறது. பிறகு இறந்திருக்கும் பெண்ணின் கழுத்தில், அவரது வயிற்றில், பிறகு அவரது காலில் இருக்கும் ரத்தக்களறியை காட்டுகிறது… உங்களுக்கே ராத்திரி தூக்கம் வராத அளவுக்கு செய்தி. உங்கள் குழந்தைகள் அதனை பார்த்து பேஸ்து பிடித்தால் போல விழிக்கின்றன. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டால் மூண் செய்திகள் மீது வழக்குத் தொடர தயாராக இருங்கள்)

அய்யோ அய்யோ அய்யோ என்று ஒரு பெண்மணி கதறிக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸ்காரர் பிணத்தின் காலை உதைத்து தள்ளி இடம் பண்ணிக்கொண்டு உள்ளே செல்கிறார். பெண்மணி மீண்டும் அய்யோ அய்யோ அய்யோ என்று கதறுகிறார். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஓ என்று ஒப்பாரி வைக்கிறார். அய்யோ அய்யோ கொன்னுபோட்டாங்களே, நாசமாப் போவாணுங்க.. பேமானிங்க நல்லா யிருப்பாங்களா.. அய்யோ அய்யோ.. அய்யோ.. நேத்து ராத்திரி நான் புள்ளைக்கிட்ட சொல்லிட்டுத்தானே போணேன். இப்படி போயிட்டாளே மவராசி… அய்யோ அய்யோ… (இன்னும் சில நிமிஷங்கள் இவர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவது காட்டப்படுகிறது)

விளம்பரங்கள் அரைமணி நேரம் ஓடுகின்றன..

இடையே… யாரால் ஏன் எப்படி என்ன யாருக்கு என்று தலைப்புகள்..

நான் ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி…

யார் சொன்னது ?

விடை இன்னும் சில மணிநேரத்தில்…விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

மீண்டும் விளம்பரங்கள்…

நான் ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி…

யார் சொன்னது ?

ரஜினிகாந்த்

பம்பம்பம்…

ஏந்த சாயா கடாய் சீறந்தா கடாய்… மூண் செய்திகளூக்காக மாக்களீடம் காரூத்தூ காணிப்பூ

இன்று திருச்சிராப்பள்ளி நகரில் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 35 சதவீத வாக்குப் பெற்று மூன்றாவது இடத்தில் ருப்பது தில்லைநகரில் ருக்கும் முனிசாமி டாக்கடை

அடுத்து 45 சதவீத வாக்குக்கள் பெற்று இரண்டாவது இடத்தில் ருப்பது ரயில்நகரில் இருக்கும் சேக்பாய் டாக்கடை

அடுத்து 50 சதவீத வாக்குக்கள் பெற்று முதலாவது இடத்தைப் பிடித்திருப்பது ரயிலடி நாயர் டாக்கடை…

நாயர் சொல்கிறார். ‘ஞான் நல்லா டா போடும் சாரே… மூண்டாவிக்கி ரொம்ப சிலாக்கியமாயிட்டுண்டு… ‘

பக்கத்தில் இருப்பவர், ‘நாயர் டாயிலெ என்னா கலக்குறார்னு தெரிலை… டா குடிக்கலைன்னா கையும் காலும் ஆடுதுடோய் ‘

பம்பம்பம்பம்….

சாதம் சாப்பிட்டால் ஆபாத்தூ… உடானே மரணாம்.

பம்பம்பம்பம்….

இன்னும் சில மணி நேரங்களில்…

இன்னும் ஒரு அரைமணி நேரம் விளம்பரங்கள்…

பம்பம்பம்பம்….

சாதம் சாப்பிட்டால் ஆபாத்தூ… உடானே மரணாம்.

கடையில் சாதம் சாப்பிடும் ஒருவரை காட்டுகிறது காமிரா.. அவர் கையில் சாதம் வழிவதை முழங்கையிலிருந்து உள்ளங்கை வரைக்கும் அவர் நக்குகிறார்.

பரிமளா சிறியசாமி: சாதாம் ரூசீயாகத்தான் ஈருக்கிறது ஆனால் ஆதில் ஆபத்து இருக்கிறதூ.. மூண் செய்திகளுக்காக உட்டலக்கடி உமேஷ் வழங்கும் சிறாப்புச் செய்தீ.

உட்டலக்கடி உமேஷ் : நம்மில் பலர் சாதம் சாப்பிடாமல் இருக்கமுடியாது. ஆனால், சாதம் சாப்பிட்டால், வாந்திபேதி, சார்ஸ், எய்ட்ஸ் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ வியாதிகள் வர வாய்ப்பு இருப்பதை நாம் அறியவேண்டும்.

மீசை முளைக்காத பையன் ஒருவன் வெள்ளைக்கோட்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். கீழே ‘சீமாச்சு.. உணவுநிபுணர் ‘ என்ற பெயர்கள்.

‘சாப்பாட்டில சாதம் சேர்க்காம சாப்பிடணும்.. சாதம் சாப்பிட்டா செத்து போயிடுவாங்க.. சாதம் சாப்பிடலைன்னாலும் செத்து பொயிடுவாங்க… அதனால சாதம் சேத்துக்கக்கூடாது ‘ என்று மூண் செய்திகள் என்று எழுதப்பட்ட ஒரு மைக்கில் பேசுகிறான். ‘சரியாச் சொல்லிட்டனா அங்கிள் ‘ அத்தோடு அவரது பேட்டி வெட்டப்படுகிறது.

உட்டலக்கடி உமேஷ் : நம்மில் பலர் சாதம் சாப்பிடாமல் இருக்கமுடியாது. ஆனால், சாதம் சாப்பிட்டால், வாந்திபேதி, சார்ஸ், எய்ட்ஸ் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ வியாதிகள் வர வாய்ப்பு இருப்பதை நாம் அறியவேண்டும். தமிழ் நாட்டில் சாகும் எல்லோருமே சாதம் சப்பிடுபவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மூண் செய்திகளுக்காக உட்டாலக்கடி உமேஷ்.

பம்பம்பம்பம்….

இனி கருணாநிதி செய்தி . இன்று கருணாநிதி பற்றி ஏதும் செய்தி இல்லை.. என்று யாரும் எண்ணிவிடலாகாது. ஜெயலலிதா சட்டசபையில் தும்மியதால் சட்டசபையின் பாரம்பரியம் கெட்டு விட்டது என்று கருணாநிதி கவலையுடன் அறிக்கை விட்டிருக்கிறார். அவருடைய அறிக்கையில் அவர் தெரிவித்தது : ‘ நான் ஐம்பது வருடங்களாய்த் தும்மி வந்திருக்கிறேன். ஆனால், சட்டசபையின் கண்ணியத்தை காப்பாற்றும் பொருட்டு, வேட்டியை அவிழ்த்திருக்கலாம், அடி உதையில் இறங்கியிருக்கலாம், புடவையை இழுத்திருக்கலாம், மைக்கைப் பிடுங்கிக் கடாசியிருக்கலாம், ஆனால் தும்மியதே இல்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். ஜெயலலிதா அம்மையார் தும்மியதன் மூலம் சட்டசபையின் கண்ணியம் கெட்டுவிட்டது என்பதால் அவர் மன்னிப்புக் கோரும் வரையில் போராடுமாறு எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் சட்டசபைக்குச் செல்லவில்லையே தவிர என் நினைவும், மனமும், பேனாவும், கையெழுத்தும் சட்டசபையிலேயே இருக்கிறது என்று தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். கருணாநிதி சட்டசபைக்குச் செல்லவில்லை என்று கயவர்கள் தான் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவார்கள். ‘

இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

பம்பம்பம்பம் ….

தீரூச்சீயீல் வெய்யீல்… மாக்காள் பாதாறி ஓட்டாம்…

(திருச்சி சின்னக்கடை வீதியில் மிளகாய் மலை மீது இன்னொரு மூட்டை மிளகாயைக் கொட்டுகிறார்கள். அருகே பஸ் வரக் காத்திருக்கும் மக்கள் ஓடுகிறார்கள். )

தீரூச்சீயீல் வெய்யீல்… மாக்காள் பாதாறி ஓட்டாம்…

பம்பம்பம்பம்….

இன்றாய்யா வான்னிலாய் (இதுவரை கூவல்.. இதற்குப்பின், மய்யமய்யமய்யா மய்யமய்யமய்யா என்ற கரிசனத்துடன் வானிலை படிக்கப்படும்)

இன்று திருச்சியில் மிதமானது முதல் சற்று மிதமானதுவரை வெப்பம் இருக்கும். தமிழ்நாட்டிலும் அதன் கடற்கரைப் பகுதிகளிலும் ஆங்காங்கே சிறு தூரலாகவும், மிதமாகவும் பலத்த இடி மின்னலுடனுனோ மழையோ அல்லது ஆட்டோ சாக்கடை மீது செல்வதால் சாக்கடை தண்ணீரோ உங்கள் மீது தூவப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்..

24 மணிநேரமும் இது போல கண்றாவிகளைப் பார்க்க, கொலைத் தமிழைக் கேட்க, பதட்டச் செய்திகளை உடனுக்குடன் கேட்டு கலவரம் அடைய இதற்கென்றே இருக்கும் மூண்நியூஸ் சேனலை பார்க்கவும்…

***

அடுத்த வாரம், முன்னாள் நடிகை குந்தளாவின் மகள் மந்தளா சமையல் செய்வது எப்படி என்று பண்ணித்தமிழில் எக்ஸ்ப்ளையின் பண்ணி, குக் பண்ணி, ஷோ பண்ணி, ஸ்பீக் பண்ணுவார்.

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா