சமாதானத் தூதுவர்கள்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.


போரில்லாது உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்று அனைவரும் இன்றைய காலத்தில் விரும்புகின்றனர். உலகம் இதுவரை உலகப்போர்களினால் பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. உலகப் போர்களினால் ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து மீள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளில் போரின்றி அமைதி நிலவ அனைவரும் தங்களால்இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். போரினைத் தவிர்க்க சமாதானத் தூதுசென்ற நிகழ்வுகள் பல பண்டைய இலக்கியமான புறநானூற்றில் காணக்கிடக்கின்றன.

போர் நிகழ இருக்கும் நிலையில் மன்னர்களுக்கிடையில் தூது சென்று அப்போரினைத் தடுத்து நிறுத்திய நிகழ்வுகளை நினைவூட்டும் பாடல்கள் புறநானூற்றில் அதிகம் காணப்படுகின்றன. புலவர்கள் பா¢சில்களுக்கு மட்டுமின்றி, மக்கள் அமைதியுடனும், போரின்றியும் வாழவேண்டும் என்று கருதி சமாதானத் தூதுவர்களாகச் செயல்பட்டனர். மன்னர்களுக்கிடையில் தூது சென்று போரைத் தொலைத்து அமைதியை நிலைநாட்டினர். இங்ஙனம் தன்னலமின்றிப் புலவர்பெருமக்கள் செயல்பட்டமையை புறநானூற்றுப் தூதுப்பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. தொல்காப்பியர்,

“ஓதல் பகையே தூதிவை பிரிவே”

“ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”

எனத் தூது பற்றி எடுத்துரைக்கிறார். அக்காலத்தில் தூதின் காரணமாகப் பிரவு நிகழும் என்பதையும் அந்தணரும் தூது செல்வதற்குரியவர் என்பதையும் இதிலிருந்து நாம் உணரலாம். இதனை,

“ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே

நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் செல்லலும்

வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை

என்றன்றி மீண்ட திலர்” (புறம்.172)

என புறப்பொருள் வெண்பாமாலையும்,

“வேத மந்தர் வேந்த ரென்றிருவர்க்குந்

தூது போதற் றொழிலுரித்தாகும்”

என்று நம்பிஅகப்பொருளும் நவில்கின்றன.

தூதென்பது ஒருவர் தம்முடைய கருத்தை வேறொருவருக்கு இடை நின்ற ஒருவர் வாயிலாகக் கூறி விடுப்பது. அரசர்கள் பகையரசர்கள் பாலும், புலவர்கள் உபகாரிகளின் பாலும், தலைவி தலைவன் பாலும், தவைன்மணத்தின் பொருட்டுத்தலைவியைச் சார்ந்தோர் பாலும் ஊடலை நீக்கும் பொருட்டுத் தலைவியின் பாலும் தூதுகளை அனுப்புதல் மரபு என்று தூது குறித்து தமிழ்த்தாத்தா உ.வே.சா. குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் தோன்றிய தூது இலக்கியங்கட்குரிய வித்து புறநானூற்றிலேயே இடப்பெற்றுள்ளது நோக்கத்தக்கது. இதுவும் அகநூல்களில் இடம்பெற்ற¨வுயும் பின்னர்த் தோன்றிய தூது இலக்கியங்கள் வளர்வதற்கு உரமாயின.

ஒளவையார் அதியமான் நெடுமானஞ்சியிடம் அன்பிற்குரிய நட்பினராக விளங்கினார். அதியனுக்கும், தொண்டைமான் இளந்திரையனுக்கும் இடையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அவரகளுக்கிடையில் போர்ஏற்படும் சூழல் உருவானது. இதனையறிந்த ஒளவையார் போர் நிகழாது தடுத்து நிறுத்துவதற்காக அதியனின் தூதராக தொண்டைமான் இளந்திரையனிடம் சென்றார். தூது வந்த ஒளவையை தொண்டைமான் அழைத்துச் சென்று தனது படைக்கலக் கொட்டிலைக் காட்டினான். அவன் செருக்கினை அழிக்க நினைத்த புலவர், “மன்னவனே! நினது அரண்மனையில் உள்ள படைக்கலங்கள் யாவும் மயில் வீலி அணியப்பெற்று, மாலை சூட்டப்பெற்று, நெய் பூசப்பெற்று அழகுற மிளிர்கின்றன. ஆனால் அதியமானின் வேல்கள் நாளும் பகைவரைப் போரில் குத்துதலாற் அழகும் நுனியும் சிதைந்த காரணத்தால் கொல்லனின் உலைக்களத்தில் குவிக்கப்பெற்றுள்ளன” (புறம்.95) என்று கூறி நாளும் போர் செய்து பயிற்சிபெறும் அதியனிடம் படைக்கலன்களை வ¨த்து அழகு பார்க்கும் நீ எவ்வாறு போரிட்டு வெல்வாய்? இயலாது மன்னவனே! எனும் கருத்தைத் தொண்டைமானின் உளம்கொள்ளும் வகையில் குறிப்பால் எடுத்துரைத்துப் போரினை விலக்கி அமைதியை ஏற்படுத்தினார். பெண்பாற் புலவராக இருந்தாலும் மன வலிமையுடன் நடந்து, சிறப்பாகச் செயல்பட்டு, கொடிய போர் ஏற்படாது தடுத்து, நாட்டில் அமைதிநிலவச் செய்தது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

சோழ நாட்டை இருவர் ஆண்டனர். காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகரகக் கொண்டு சோழநாட்டின் ஒருபகுதியை நலங்கிள்ளிளூம்டூ உறையூரைத் தலைநகராகக் கொண்டு நெடுங்கிள்ளியும் ஆண்டனர். அப்போது படைபலத்துடன் நலங்கிள்ளி உறையூரைக் கைப்பற்ற எண்ணிவந்து அந்நகரை முற்றுகையிட்டான். மன்னன் நெடுங்கிள்ளிடூ கோட்டையினுள் அடபட்டுக் கிடந்தான். எதிர்த்துப் போரிட வெளியில் வரவில்லை. இதன் காரணமாகக் கோட்டைக்குள்ளிருந்த மக்கள் மிகவும் வருந்தினர். மக்களின் துன்பம் மிகவும் அதிகா¢த்தது. இதனைக் கண்டு மனம் வருந்திய மக்களின் சார்பாகவும் அவர்களின் துயா¢னைத் துடைக்கவும் இருவேந்தா¢டையே பகைவிலக்கி நட்பினை ஏற்படுத்துவதற்காகவும் நலங்கிள்ளியிடம் சமாதனத் தூது சென்றார். அவர் நலங்கிள்ளியிடம்,

“மன்னனே நின்னுடன் போரிட வந்திருப்பவன் பனம்பூமாலை அணிந்த சேரனுமல்லன்; வேப்பம்பூமாலையணிந்த பண்டிய மன்னனுமல்லன். உனது மாலையும், அவனது மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்படனவேயாகும், உமதுள் யார் தோற்றாலும் தோற்பது உமது குடியே. போரெனில் ஒருவர்க்கு வெற்றியும் மற்றவர்க்குத் தோல்வியும் ஏற்படுவது இயற்கை. எவ்வாறு இருவரும் வெற்றி பெறஇயலும்? உமது குடிப்பெருமைக்க உமது எசய்கை தகுதிபடைத்ததன்று. நீங்கள் கொண்ட இம்மாறுபாடு உம்போன்ற பிற மன்னர்க்கு மகிழ்ச்சியைத் தரும். எனவே மன்னவனே! போரைத் தவிர்ப்பது உமக்குப் பெருமை தருவதாகும்” என்று கூறுகின்றார். இதனை,

“இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்

கருஞ்சினை வேம்பின் றொ¢யலோ னல்லன்

நின்ன கண்ணியு மார்மிடைந்தன்றே நின்னொடு

பொருவோன் கண்ணியு மார்மிடைந்தன்றே

ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங்குடியே

இருவீர் வேற லியற்கையு மன்றே அதனாற்

குடிப் பொருளன்று நுஞ்செய்தி கொடித்தேர்

நும்மோரன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி யுவகை வெய்யுமிவ் விகலே” (புறம். 45)

என்ற பாடல் தெளிவுறுத்துகிறது. இருபெரு மன்னர்க்குமிடையில் நிகழவிருந்த பெரும்போர் இதனால் தடுத்து நிறுத்தப்பட்டது. மக்கள் மகிழ்சியடைந்தார்கள்.

இருப்பினும் இருவா¢டமும் பகையுணர்ச்சி மறையவில்லை. நெடுங்கிள்ளி ஆவூர் சென்றபோது அங்கு சென்று நலங்கிள்ளி அவனை வளைத்துக் கொண்டான்.இது கோவூர்க்கிழருக்க மனத்துயா¢னைத் தந்தது. நெடுங்கிள்ளிடம் சென்று அவனுக்கு அறிவுரை கூறினார். அதில்,

“மன்னவனே! யானைகள் கயத்தின்கண் படியாமலும், நெய்க்கவளமும் கிடைக்கப் பெறாமலும் நிலத்தில் புரண்டு பசியின் மிகுதியால் இடி முழங்குவது போன்று பிளிறுகின்றன. பாலின்றிப் பச்சிளங்குழந்தைகள் அழுகின்றன. பெண்கள் தலையில் சூடப் பூவின்றி வெறுந்தலைகளை முடித்துக்கொள்கின்றனர். மனைகளில் உண்ணுவதற்குநிரின்றி மிகவும் துயரெய்தி ஓலமிடுகின்றனர். இவற்றையெல்லாம் செவிமடுத்தும் துளியேனும் நாணமின்றி நீ இங்கு இனிதாக வீற்றிருப்பது மிகவும் கொடுமையாகும். கிடைத்தற்கா¢ய வலிய குதிரையையுடைய தோன்றலே! அறவொழுக்கத்தைப் போற்ற எண்ணுவாயாயின் நின் கோட்டையன்றோ எனச் சொல்லித்திறந்துவிடுவாயாக! அன்றி வீரமுடையவனாக இருந்தால் போரிட்டுத் திறப்பாயாக! இவ்வாறு அறனும் மறனும் இன்றிக் கோட்டைக்குள்ளிருந்து கதவுகளைத் தாளிட்டு ஒரு புறத்தே ஒதுங்குதல் நாணத்தக்கதாகும்.

இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம்படியா

……… ……… ………. ………….. ……….. ..

நாணுத்தகவுடைத்துதிதுகாணுங்காலே” (புறம்,44)

என்னும் பாடலில் புலவர் மொழிகிறார்.

போரை விலக்குமாறு முன்பு கூறிய புலவர், நெடுங்கிள்ளியிடம் சென்று போர்புரிந்திடுக அதன் காரணமாகக் கோட்டையைத் திறந்திடுக. இல்லையேல் அடைத்திருப்பதை அகற்றிடுக எனக் கூறியுள்ளது சிந்தனைக்குரியதாகும். புலவர், உள்ளம் வருந்தியுள்ளார் என்பதை இதன்வழி அறியமுடிகிறது. முன்பு போரை விலக்கியவர்கள்இன்று நம்சொற்கள் மறந்து போர் புரியவந்துள்ளனரே என வருந்தியிருக்கலாம்.நலங்கிள்ளி போரிட்டு வெற்றியோ தோல்வியோ தழுவினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலாவது அகன்றுவிடும் என்று கருதியிருக்கலாம். இல்லையெனில் இதனைக்கேட்டு நலங்கிள்ளியின் மனம் மீண்டும் திருந்தலாமெனத் தீர்மானித்திருக்கலாம். எவ்வாறாயினும் மாறுபட்ட மன்னர்களின் உள்ளங்களை மாற்றியமைத்து நல்வழிப்படுத்திச் சோழர்குலப் பெருமையைக் கோவூர்க்கிழார் நிலைநாட்டியுள்ளது போற்றுதற்குரியதாகும்.

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து, நெடுங்கிள்ளியிடம் இளந்தத்தன் என்னும் புலவர் வறுமையின் காரணமாக பா¢சில் வாங்குவதற்கு வர அப்புலவரை ஒற்றரெனக் கருதி நெடுங்கிள்ளி கொல்வதற்குத் துணிந்தான். அதனைக் கண்ட கோவூர்கிழார் இளந்தத்தனின் தூதுவராக மாறி அப்புலவரைக் காத்தார். நெடுங்கிள்ளியிடம் சென்று,” உண்மையுடையோரை நினைத்துப் பழுமரம் நாடிச் செல்லும் பறவையினம்போல அரிய வழி பலவும் கடந்து வருவர் பா¢சிலர்கள். தம் தகுதிக்கேற்பப் பாடிப் பெற்ற பா¢சிலால் மகிழ்ந்து, சுற்றம் தழுவி அப்பொருளைப் பிற்காலத்திற்கென்று பாதுகாவாது உண்டு, பிறர்க்கும் உள மகிழ்வுடன் வழங்குபவர் பா¢சிலர். தம்மைப் புரப்போரால் பெறும் சிறப்புக்காக இவ்வாறு வருந்துவதே பா¢சிலர் வாழும் வாழ்க்கையாகும், பிறர்க்குக் பொடுமை செய்ய அறிந்தவரோ என்றால் இல்லை! கல்விப் பெருமிதத்தால் தம்மொடு மலைந்தோர் நாணக் கல்வியால் வென்று தலைநிமிர்ந்து அவ்விடத்து இனிதாக ஒழுகுபவர் இவர், மன்னவனே! இவரும் உயர்ந்தம புகழுடன் நிலமாளும் உம்போன்றே சீரும் சிறப்பும் செம்மையும் உடையோராவர்.இதனை நன்கு உணர்வாயாக! (புறம்.47) என்று கூறி இளந்தத்தனைச் சாவிலிருந்து காப்பாற்றி உயிர் காத்த, புலவருக்காகத் சமாதானத் தூதுசென்ற சான்றோராகக் கோவூர்க்கிழார் விளங்குகிறார்.

சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவன் மலையமான் மக்களை யானைக் காலால் இடறி அழிக்க முற்பட்டபோது, அக்காட்சியினைக் கண்கொண்டு காணப்பொறாத கோவூர்க்கிழார் மலையமான் மக்கள் சார்பில் சோழமன்னனிடம் தூது சென்று,

“நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்

இடுக்கண்பலவும் விடுத்தோன்மருகனை

இவரே புலனுழு துண்மார் புன்கணஞ்சித்

தமது பகுத் துண்ணுந்தண்ணிழல் வாழ்நர்

களிறுகண்டழூஉ மழாஅன் மறந்த

புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி

விருந்திற் புன்கணோவுடையர்

கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே” (புறம்.46)

என்று எடுத்துரைத்து அவர்களை விடுவிக்கின்றார். புலவர் முதலில் பிற உயிர்களுக்கும் துன்பம் விளைவிக்காத மரபில் வந்தவன் நீ! அதனால்இவர்களைக் கொல்வது முறையன்று! மேலும் அச்சிறுவர்கள் வறுமையை அழிக்கம் மன்னனின் வழித் தோன்றல்கள். எனவே அவர்களை கொல்லக் கருதும் உனது எண்ணம் தவறானதாகும். ஏதும் அறியா இளஞ்சிறார்களைக் கொல்லுதலும் உனது தகுதிக்கு இழுக்காகும். தம்மைக் கொல்ல வந்த யானையைக் கண்டு அழுகை நீங்கினர் என்பதால் அவர்கள் விளையாட்டுப் பருவத்திலுள்ளார்கள் என்பதைக் குறிப்பால் புலப்படுத்தி மலையமான் மக்களைக் காத்தார் புலவர். அதுமட்டுமன்றி சோழனைக் கொலைப் பழியிலிருந்தும் காத்தார்.

கோப்பெருஞ்சோழன் கல்விக் கேள்விகளில் சிறந்தவன். அவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அப்போது அவனை அவன் பெற்ற மைந்தர்கள் எதிர்த்துப் போர்புரிய முற்பட்டனர். இதனை எதிர்பார்க்காது மன்னன் திடுக்கிட்டு, சினமுற்று, தன்னை எதிர்த்த தன் மைந்தர்களுடன் போரிட முற்பட்டான். இதனை அறிந்த புல்லாற்றூர் எயிற்றியனார் அப்போர் நிகழாதவாறு தடுத்தல் வேண்டுமெனக் கருதி கோப்பெருஞ்சோழனிடம் சமாதானத் தூதுவராகச் சென்று, “போரில் பகைவரையும் அவரது படைகளையும் அழித்து, பெற்ற வெற்றியுடைய மன்னனே! உன்னுடன் போருக்கு வந்தவர்கள் சேர பாண்டியர்கள் அல்லர். அவ்விருவருக்கும் நீ பகைவனுமல்லன்.நீ இவ்வுலகில் புகழை நிலைநிறுத்திப் புகழுடம்பு எய்தினால் உன்னால் விடப்பட்ட அரசு உனது மைந்தர்களுடையதே. அதனை உணர்வாயாக. புகழை விரும்புவோனே! உனது மைந்தர்கள் உன்னால் போரிலே தோற்கடிக்கப்பட்டால் உனது அவர்க்கன்றி யாருக்குக் கொடுப்பாய்? அதே சமயத்தில் நீ அவர்களிடம் தோற்றால் உனது பகைவர் மகிழும் வண்ணம் பழியை இவ்வுலகில் நிலை நிறுத்துவாய். ஆதலால் உனது போர் வெறி உன்னை விட்டு நீங்குவதாக! விண்ணவர் விருந்தினராக விரைந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்வினை செய்ய விரைந்தொழுகுவாயாக!உனது உள்ளம் வாழ்வதாக!” (புறம்.213) என எடுத்துக்கூறி அவனை நல்வழிப்படுத்தினார். கோப்பெருஞ்சோழனும் போரைக் கைவிட்டு அரசினை வெறுத்து வடக்கிருந்து உயிர்விட்டான். இதனை வரலாறும் எடுத்தியம்புகின்றது.

அரசர்கள் புலவர்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்ளாத போதும் புலவர்கள் தூதுவர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். தமிழ் வாழ தான் வாழ்ந்த தண்டமிழ் வள்ளல் குமணனுக்கும் இளவல் இளங்குமணனுக்கும் பகைமை ஏற்பட்டு,குமணன் காட்டிலே வாழ்ந்து வரும்போது, புலவர் பெருந்தலைச் சாத்தனார் கண்ணுற்று மிகவும் வருந்துகின்றார். வந்துள்ள புலவா¢ன் வறுமையினைப் போக்கக் கருதிய குமணன் அந்நிலையிலும் வழியினைக் கண்டு, தனது வாளைப் புலவா¢டம் எடுத்துக் கொடுத்துத் தன்னைக் கொன்று தன் தம்பியிடம் கூறிபொருள் பெற்று பல காலம் வாழுங்கள் என்று மோழிகின்றான். தமிழ் வாழ குமணன் வாழ வேண்டும் என்று உணர்ந்த புலவர் அவ்வாளினைப் பெற்று அவா¢டம் விடைபெற்றுக்கொண்டு குமணனது தம்பி இளங்குமணனிடத்து வந்து அந்நிகழ்ச்சியைக் கூறகின்றார். குமணன் வேண்டாதபோதும் அவனது தூதுவராகப் புலவர் செயல்படுவது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அவர் இளங்குமணனைப் பார்த்து,

“மன்னனே! எப்பொருளும் நிலைத்து நறிற்காத இவ்வுலகில் நின்று நிலவ எண்ணியோர் தம் புகழைப் பாரிடத்தில் உலவ விட்டுத் அவர்கள் மறைந்துவிட்டனர். கொடுத்தறியா குணம் படைத்தப் பெருஞ்செல்வர் இத்தன்மையை அறியவில்லை. யானைகளைப் பாவலர்க்குப் பா¢சிலாக மிகவும் கொடுத்த வள்ளலைக் கண்டு நான் பாடி நின்றேன். அவனோ பெருமை பெற்ற பா¢சிலன் பயனின்றி வாடிவருந்தி வெறுங்கையுடன் திரும்புதல் நாட்டை இழந்ததைக் காட்டிலும் மிகவும் இழிவானதாகும் எனக் கருதி தன் தலையை எனக்குத் தரும் பொருட்டு வாளை என்னிடம் தந்தான். எனக்குத் தருதற்கு அவ்விடத்தில் தன்னைக் காட்டிலும் மிகச் சிறந்த பொருள் வேறொன்றும் இல்லையாதலால் தனது வாளைத் தந்தான். அத்தகைய சிறந்த உனது தமையனைக் கண்டு வெற்றி மிக்க உவகையோடு உன்னிடம் வந்தேன்”(புறம். 165) என்று கூறினார். இதனைக்கேட்ட இளங்குமணன் மனம் திருந்தி தனது அண்ணன் குமணனை அழைத்து வந்து அவனை மீண்டும் அரசனாக்கினான். அண்ணன்-தம்பி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்த புலவா¢ன் செயல் போற்றுதற்குரியதாக அமைந்துள்ளது.

சோழன்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரினை முற்றுகையிட்டிருந்தான். அப்போது அவனிடம் ஆலத்தூர் கிழார் தூது சென்று,

“அடுநை யாயினும் விடுநை யாயினும்

. ……………………………………

மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே” ( புறம்.36)

என்று எடுத்துரைத்தார். அவர் சோழனைப் பார்த்து, மன்னவனே! கொல்லாயாயினும் அவற்றால் உனக்கு வரும் உயர்வினை யான் சொல்ல வேண்டாம். நீயே அறிந்து கொள்வாய். சிலம்ம் வளையலும் அணிந்த மகளிர் பொன்னால் செய்ய்ட்ட கழற்காய கொண்டு உயர்ந்த எக்கர்கண்ணே இருந்து விளையாடும் ஆன் பொருநையின் வெண்மணல் சிதற, உன் வீரர் கொல்லன் அரத்தால் கூர்மை செய்யப்ட்ட கோடாலி கொண்டு வெட்டுதலால் பூ நாறும் நெடிய கெம்புகள் நின்ற நிலை கலங்கி விழுமாறு சோலைகள் தோறும் காவல்மரங்களை வெட்டுகின்றனர். வெட்டும் ஒலி தன்னுடைய ஊரின்கண் காவல் மிகுந்த நெடுமதில் ஆழ்ந்த அரண்மனையில் சென்று ஒலிக்கும் ஒலியினைக் கேட்டும் மானமின்றிப் போர் செய்யத் துணிவின்றி இனிதாக இருக்கம் வீரமற்ற சேரனுடன், முரசொலிக்க நீ போரிட்டாய் என்பது கேட்டார்க்க நாணம் தரும் செயலாகும். னெவே கிள்ளவளவனே! நீ எண்ணியதைச் செய்வாயாக!” என்று தெளிவுறுத்துகின்றார். பகைவர் நிலையை எடுத்துக்கூறி போர் செய்ய வேண்டாம் எனப் போர் விலக்கம் செய்ய முற்படுகின்றார் புலவர்.

பகைவர் நாட்டில் புகுந்து அவர்களது காவல் மரங்களை வெட்டிக்கொண்டிருந்த பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடத்தில் காரிக்கணணனார் தூது சென்று, “மன்னவனே! வல்லவராயினும் வல்லாதாராயினும் உன்னைப் புகழ்ந்து நிற்பார்க்கு நெடியோன் போன்று துணை நின்று புரக்கும் புகழ் அமைந்த மாறனே! ஒன்று கூற விருப்பமுடையேன். உனது பகைவர் நாட்டைக் கொள்ளுங்காலத்து விளை வயலை வேண்டுமானாலும் கொள்ளையிடுக. பொ¢ய ஊர்களை எரியூட்டுக. மின்னொத்த உன் வேலால் பகைவரை அழித்தாலும் அழிக்க. காவல் மரங்களை மட்டும் வெட்டுதலைத் தவிர்ப்பாயாக! அவை இள மரங்கள் நின் யானைகள் கட்டுதற்குத் தறியாக அவை பயன்படாது” (புறம்.57) என்று எடுத்துரைத்து போரினை விலக்குகின்றார். மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்பதனை இப்பாடல்வழி புலவர் தெளிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இங்ஙனம் பண்டைப் புலவர்கள் அரசர்களிடையே தூது சென்று, போர்களை விலக்கி நாட்டில் அமைதி நிலவும் வண்ணம் செய்தனர். அரசர்களிடையே நிலவிய பகையை விலக்கி அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ புலவர்கள் வழி செய்தனர். மனவேற்றுமைகளை மறந்து மனிதநேயத்துடன் அனைவரும் வாழ தங்களால் இயன்றவரையிலும் புலவர்கள் அரும்பாடுபட்டனர். பா¢சில் பெறுவது மட்டும் தங்களது நோக்கமாகக் கொள்ளாது உலகில் மாந்தர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு வாழத் தொண்டு செய்தனர். உலகில் அனைவரும் சமாதான சகவாழ்வு வாழப்புலவர்கள் சமாதானத் தூதுவர்களாகச் செயல்பட்டனர். அவர்களுக்கு மக்களின் நலவாழ்வு ஒன்றே குறிக்கோளாக இருந்தது. அனைவருக்கும் நீதி கிடைத்திட வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டனர். மன்னர்கள் அறம் தவறி தவறிழைக்க முயன்றபோது அவர்கள் மனதில் படும் வண்ணம் உலகியல் நீதிகளை எடுத்துரைத்து அவர்களைத் திருத்தினர். மன்னர்களும் தங்களின் தவறினை உணர்ந்து புலவர்களின் அறிவுரைகளைக் கேட்டு மனந்திருந்தி வாழ்ந்தனர்.

Malar.sethu@gmail.com

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.