இனியதாசன்
விளம்பரங்கள் அதிகமில்லா வெட்டவெளிப்பட்டிமன்றம் விறுவிறுப்போடு தொடங்கியது எங்குமில்லை இங்கு நம் சிங்கப்பூரில்தான்.
தமிழ்த்தாகம் பருகும் தணியாத மோகத்தில் மக்கள் கூட்டம் திரண்டுவந்து சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை!
அறிவிப்பாளர்: கால்பந்து கிரிக்கெட் விளையாடிய திடலில் இன்று தமிழ் விளையாடப்போகிறது என்று அற்புதமாய் அறிவித்தார்.
14.04.2007ன் மாலைப்பொழுதில் தமிழ்ப் புத்தண்டை வரவேற்று தரப்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சியன் ஆரம்பமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடவந்த செல்வி குமுதாவின் குரல் அமுதமாய் இனித்தது.
பாடல் முடிந்து ஆடல் �யாதும் ஊரே யாவரும் கேளீர்� என்று தொடங்கியது ஆடல்கலைஞர்கள் தமிழ் என்று பொறித்த கொடியேந்திக் பாட்டியதைப் பார்த்து மக்கள் பரவசமடைந்தனர். ஆட்டத்தில் அரங்கம் மட்டும் அதிரவில்லை அவ்வட்டாரமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.
மகிழ்ச்சியை நிர்ணயம் செய்வது குடும்பச்சூழலா? வெளிச்சூழலா? என்று நடுவர் திரு சாலமன் பாப்பையா தொடங்கியதும் ஓரே மகிழ்ச்சியை காணமுடிந்தது.
சுpங்கை மக்கள் இவர் மூப்பையா என எண்ணினர்: ஆனால் அவர் தமிழ்காப்பையா என்பது போல் நனி சிறந்த தனி நடையில் நயம் பிறக்கும் வாசம்தாங்கி வந்தாங்கே போனாங்கே என்று விளித்தபோது கேட்போர் கிரங்கினர். நகைச்சுவையில் நனைந்தனர். சுனாமியை மேற்கோள்காட்டி பண்பாட்டுச் சீரழிவு ஜரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கையை மெல்ல மெல்ல அடைந்துவிட்டது. இது தமிழகத்தையும் தாக்கும் அபாயம் உள்ளது என்று நாசூக்காய் உணர்த்தினார்.
குடும்ப சூழலே எனும் அணியின் முதல் பேச்சாளர் திரு பொன்.மகாலிங்கம் பேசியபோது பணமே வாழ்க்கையல்ல: பணமும் வாழ்க்கைக்கு தேவை மனம் பண்பட்டால் மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சி குடும்பத்தில் உண்டென்று கூறி இலக்கிய சான்றாக �சிறு�கை� அளாவிய கூழ்� என்பதை விவரித்தார். அவரது பதிவுகள் எல்லாமே போற்றுதலுக்கு உரியதாகி நடுவர் மனதையும் நறுக்கென்று கவ்வியது.
வெளிச்சூழல் அணியின் முதல் பேச்சாளர் திரு ஜெகதீசன் பேசியபோது பணம்தான் மகிழ்ச்சியை நிர்நணயிக்கிறது அது வெளிச்சூழலில் கிடைக்கிறது. என்பதை வலியுறுத்திப்பேசி தான் முதன்முதலில் பட்டிமன்றத்தில் பேசுகிறேன் என்று அவர் சொன்னாலும் முத்திரை பதித்து சென்றார்.
குடும்பசூழலே எனும் அணியின் இரண்டாம் பேச்சாளர் திரு முகமது கஸாலி பேசியபோது சாப்பாட்டு இலையில் தலைமுடி கிடந்தாலும் பங்கஜம்: பரவாயில்ல தலையில இருந்தாலும் அழகுதான் இப்ப இலையில் இருந்தாலும் அழகுதான் என்று நகைச்சுவை உணர்வோடு குற்றத்தை புரியவைக்கவேண்டும். அங்கு எல்லையில்லா மகிழ்ச்சியை பிணைப்பை அது உருவாக்கும் என்று அனுபவப்பூர்வமாக பேசி அசத்தினார்
வெளிச்சூழலே அணியின் இரண்டாம் பேச்சாளர் திருமதி
விஜி பேசியபோது: நடுவரை பார்த்து நீங்க வெளிச்சூழலில் பேசினாத்தான் மகிழ்ச்சி கிடைக்கும் குடும்பத்தில் பேசினா இப்படித்தான் சொல்வார்கள் வந்துட்டாருய்யா! வந்துட்டாரு என்ற போது: சாலமன் பாப்பையா வைகைப்புயல் வந்துட்டாரு! என்று சமயோசிதப் புத்தியால் சமாளித்து மிகுந்த நகைச்சுவையை விதைத்து அனைவரையும் வியக்க வைத்தது
குடும்பசூழலே எனும் அணியின் இறுதிப் பேச்சாளர் பேசுவதற்கு முன்னாலே பெரிய மகிழச்சி ஆரவாரம் ஏனெனில் தமிழ்க் குயிலல்லவா! ஆம் திருமதி மீனாட்சி சபாபதி அவர்கள் தன்னுடைய பாணியில் எதிர் அணிக்கு சார்ந்து பேசுவதுபோல் பேசி எல்லோரையும் குழப்பிவிட்டு இறுதியிலே குடும்பசூழலே என்று தன் அணிக்கு பலம் சேர்த்து பலரின் பாராட்டையும் பெற்றார்.
வெளிச்சூழலே அணியின இறுதிப்; பேச்சாளர் திரு சோமசுந்தரம் பேசியபோது கணவன் மனைவி உறவுகள் இன்று சரியில்லை. சுpல குடும்பங்களில் தூங்கி விழிப்பதே முதலில் பிள்ளைகள் தான் பிறகுதான் பெற்றோர்கள் என்றும் குறைகளை படம் பிடித்துக்காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டு முடிவு சொல்வதற்குமுன் திரு சாலமன் பாப்பையா வெளுத்து வாங்கினார். இரு அணிகளுக்கும் சாதகமான பல கருத்துக்களை பேசினார். அப்போது எங்கள் தமிழகத்தில் அதிகாலையில் பெற்றோர்கள் விழித்துவிடுவோம் அதிலும் பெண்கள்தான் அதிகாலையில் விழிப்பார்கள். அதனாலே அங்கே அவர்களை லெட்சுமி என்று மதிக்கிறோம் என்று கூறி நமது பண்பாட்டை பின்பற்றுங்கள் என்பதை சொல்லாமல் சொன்னது சுவையிலும் சுவையாய்த் தோன்றியது.
பின்னர் எவ்வளவுதான் வெளிச்சூழல் மகிழ்வை அளித்தாலும் சிறு சிறு சண்டையில் பிணக்குகள் வந்து பின் கூடும் குடும்பத்தில்தான் கூடுதல் மகிழ்ச்சி ! இதை வள்ளுவரின் வரிவாயிலாக சொல்லி குடும்பச்சூழலே என்று முடித்தார்.
மக்களும் மனதில் அசைபோட்டுக் கொண்டே மெல்ல மெல்ல கலைந்தனர். தமிழ்புத்தாண்டு இனிதே வரவேற்பு பெற்றது.
அன்புடன்: இனியதாசன்
eniyadasan@yahoo.com
- காதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!
- 7 th FILCA International Film Festival
- தமிழரைத் தேடி – 2
- தங்கம் வாங்குவது பாவச்செயல்- பசுமைத் தாயகம்
- அற்றைத் திங்கள்
- சுழல்
- கோடை விடுமுறை (சிறுவர் பாடல் )
- நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.
- தனியறை: 1
- கருப்பை கவிதைகள் அல்லது சொற்களின் இடைவெளி தமிழ் பெண்கவிதையின் அடையாளம்
- கவிதைகள்
- சொட்டும் மழையிலும் சுவைத்தார்கள் தமிழை!
- தமிழ் இணையமும் நாட்டுப்புறவியலும்: முனைவர் மு.இளங்கோவன் முன்வைக்கும் கருத்தாடல்
- அந்த நாள் ஞாபகம் – பாட்டும் நானே!பாவமும் நானே!!
- சிவாஜி – சிறப்புப் பார்வை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 16
- கடிதம்
- ஹெச்.ஜி.ரசூல் – அரபு மார்க்சியம் நூல் அறிவிப்பு
- இலை போட்டாச்சு ! 26 – பாசிப்பருப்புக் கதம்பக்கூட்டு
- பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்
- அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்
- அலைகளின் விளிம்பில்
- ஹைக்கூ
- அருள்வாக்கு
- இரவில் காணமுடியாத காகம்
- பெரியபுராணம்– 130 : 49. அதிபத்த நாயனார் புராணம்
- கவிதைகள்
- மலையாளக் குடிவார மசோதா – பெரியார்
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 4
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:9)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 7
- மடியில் நெருப்பு – 35