மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

கோவிந்தசாமி


மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)

இலங்கை எங்கே இருந்தது?

வால்மீகி ராமாயணத்தின்படி “மேருமலையின் முறிந்த சிகரம் ஒன்று தெற்குச் சமுத்திரத்தின் கரையில் உள்ளது. அது மூன்று உச்சிகளை உடையது. திரிகூடமலை என்று பெயர் பெற்ற அதன் மேல் தேவ தச்சன் ஓர் அழகிய நகரை உண்டாக்கினான். கடலையே அகழியாக மாற்றிக்கொண்டான்.” ஆதலால் இலங்கை என்பது ஒரு நகரத்தையும் தீவையும் குறிக்கும். இது தற்காலத்திய இலங்கை என்றே கொள்வோம். திரிகூடமலை திரிகோண மலையா? அனுமன் புறப்பட் இடத்தின் latitude 8 (பாகை)Deg N, longitude 80 Deg E. ஆனால் Mr M.D Mallikarjuna Rao என்னும் ஆராய்ச்சியாளர் அனுமன் விசாகபட்டணம் அருகில் உள்ள மஹேந்திரகிரியிலிருந்து இந்தோனேஷியாவிலுள்ள ஸுந்தா தீவுகளை மைநாகம் (அந்தமான்-

நிக்கோபார்) வழியாகத் தாவி ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கையை அடைந்தான் என்று கூறியுள்ளார். (Ref: Date of Ramayana – Sapta Rishi Era and ancient historical Dates).

அனுமன் செல்லும் வழியில் :

1 கயிலையில் உமையொரு பாகனைக் கண்டு வணங்கினான்.

2 ஹேமகூடத்தில் செல்வக் கடவுளரை வணங்கினான்.

3 மேருவின் மீது சென்றான்.

4 வடமலைக்கு உம்பர் சென்றான்.

5 நாவலம் பெருந்தீவு (பூமி) என்று பெயர் வருவதற்குக் காரணமாகிய கடவுள்

மாமரத்தைக் கண்டான்.

6 அந்த மேருவின் உச்சியில் பிரமனைக் கண்டான்.

7 திருவொடும் இருந்த மூலத் தேவையும் (திருமாலை) வணக்கம் செய்தான்.

8 சேயிழை பாகத்து எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான். (முதலில் கண்டது உருத்திரனை. இப்பொழுது பார்த்தது சதாசிவனை என்று விளக்கம்

கொடுக்கப்பட்டுள்ளது)

9 இந்திரனைக் கண்டான்.

10 மேருவின் சிகர வைப்பில் திசைக் காவலர் எண்மர் நின்ற தன்மையும் கண்டான்.

மேருவின் மீது இக்கடவுளர்கள் உளர் என்று சாம்பன் முன்பு கூறவில்லை.

நான் எழுப்பிய கேள்விகளுக்கான விடைகள் என்ன என்று நோக்குவோம்.

போர் நிகழ்ந்தது எந்தப் பருவத்தில்? முனைவர் தெ.ஞானசுந்தரம் இராமன் இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டது பங்குனி உத்திரம் அன்று என்கிறார். அவர்களது திருமண நாளும் அதுவே என்றும் திருமணநாள் பரிசாகச் சீதையை ராமன் சிறை மீட்டான் என்றும் கூறினார். ஆனால் வட இந்தியாவில் தஸராவை (விஜயதஸமி)இராமன் அயோத்திக்குத் திரும்பிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இராமாயண காலத்திலே உத்தராயனம் சித்திரை மாதம் ஒன்றாம் நாள் நிகழ்ந்தது. இராமன் பிறந்தது சித்திரை மாதம் ஒன்பதாம் நாள். தற்காலத்தே இது மார்கழி 7 ல் (Dec 21) நிகழ்கிறது. இதனைத் தவறாக நாம் தை 1ல் கொண்டாடுகிறோம்.

சாயனத்தை (precession of Equinoxes) இங்கு விளக்கவேண்டியுள்ளது. பூமி தன்னைத்தானே மற்றும் anticlockwise direction ல் (அப்ரதக்ஷணமாக) சுற்றுகிறது. அதன் அச்சு (axis) clockwise direction ல் ஒரு வருடத்தில் 50.35 விகலை (arc seconds) சுற்றுகிறது. þ????? பருவங்கள் 72 வருடங்களில் ஒரு நாள் முன்பாக தொடங்கும். அதாவது þராமாயண காலத்தோடு ஒப்பிட்டால் உத்தராயணம் சித்திரை 1ல் þருந்து மார்கழி 7 க்கு முன்னேறியுள்ளது, அதாவது சுமார் 110 நாட்கள் முன்பாக பருவங்கள் தொடங்குகின்றன. இந்த கணக்கின் படி இராமாயணம் நிகழ்ந்தது 8000 ஆண்டுகளுக்கு முன்பு என்று கணக்கிடப்படுகிறது.

ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டத்தில் இராமன் அயோத்தி திரும்பி முடி சூடிய பின் பங்குனியும் þளவேனில் காலமும் வந்தன என்று கூறப்பட்டுள்ளது. இவற்றின் படி போர் நிகழ்ந்த போது சூரியனின் கிராந்தி (declination) சுமார் 23.5 Deg தெற்கு.(Tropic of Capricorn- மகரரேகை மேலோ அதற்கு வெகு அருகிலோ) அனுமன் கிளம்பியது இரவிலே. வான்மீகத்தில் “அந்த இரவு நேரத்தில் திடீரென்று ஆடவே நகர மக்கள் பீதி கொண்டு அரைத் தூக்கத்தில் எழுந்து வெளியே ஓடி வந்தனர்” என்றுள்ளது. கம்பராமயணத்தில் அனுமன் கிளம்பிய வேகத்திலே மரங்கள் வடக்கு நோக்கிச் சரிந்தன என்றுள்ளது. ( due to his supersonic speed and low pressure created behind him). அனுமன் வடக்குநோக்கிச் சென்றான் என்பது உறுதி.. அவன் வடக்கு நோக்கி ஒரே தீர்க்காம்சத்தில் (same Longitude/Time zone) சென்றிருந்தால் அதாவது 80 பாகை கிழக்கில், மறுநாள் காலையிலே தான் சூரியனப் பார்த்திருக்க முடியும். ஆனால் அனுமன் ‘ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி அல்லின் பாதியால்’ துன்பம் அகற்ற எண்ணினான். வால்மீகி ராமாயணத்தில் கூறியபடி ஸஞ்ஜீவி பர்வதம் இமயமலைக்கும் கயிலைமலைக்கும் இடையில் இருந்திருந்தால் (அவ்விரு மலைகளும் நமக்கு இக்காலத்தே தெரிந்தவையே என்று எடுத்துக் கொண்டால்) மறு நாள் காலையில் தான் சூரியோதயத்தை அனுமன் பார்த்திருக்கமுடியும். ஆனால் அன்று இரவே ஸஞ்ஜீவி மலையை எடுத்துக்கொண்டு அவன் திரும்பி விட்டானே? எப்பொழுது எங்கே அவன் சூரியனைப் பார்த்தான்? அனுமன் ஸஞ்ஜீவி மலையைக்கொண்டு வர எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு? ஒட்டக்கூத்தர் கூறுவது பின்வருமாறு:

அருமாதவத்தின் முனிவாவுரைக்கின

அனுமானை ஒக்குமவர் ஆர

செருவார் சிலைக்கை யிளையோனை மிக்

திறல் வானரப்படையொடும

மருவார் மயக்க வடமேருவுக்க

வடபால் மருத்துமலை கொண்ட

ஒருநாழிகைக்குள் வருவார் ஒருத்தர

உளரோ சகத்தினில் இனியே?

அனுமன் கிளம்பி ஒரு நாழிகைக்குள் சூரியன் உதித்திருக்கவே முடியாது.

அனுமன் சென்ற தூரம் எவ்வளவு? முன்னே கூறியபடி இலங்கையிலிருந்து மருத்துமலையின் தூரம் 87200 யோசனை என்று கொள்வோம். முன்புள யோசனையெல்லாம் என்று கூறப்பட்டதற்கு வெவ்வேறு பொருள்கள் கொண்டால் இந்த அளவு மாறுபடும். ஒரு யோசனைக்கு 100 கல், 9 கல், 40 மைல், 4.5 மைல் அல்லது 2.25 மைல் என்று வெவ்வேறு அளவுகள் கூறப்பட்டுள்ளன. þவற்றுள் மிகக்குறைந்த 2.25 மைலை எடுத்துக்கொண்டாலும் மொத்ததூரம் 87200 x 2.25 = 196,200 மைல். இது பூமியின் சுற்றளவைப்போல் சுமார் 8 மடங்கு. கூறப்பட்ட தூரங்களும் நாடுகளும் மலைகளும் கற்பனையென்றே கொள்வோம் ஆனால் கம்பர், வால்மீகி கூறாத ஒரு நிகழ்ச்சியினை ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோற்றமளிக்கும் வகையில் ஏன் கூறினார் என்று சிந்தித்ததன் விளைவைக் கீழே காணவும்.

அனுமன், சூரியனும் சந்திரனும் செல்லும் பாதையைக் (Ecliptic Plane)கடந்து சென்றான் என்றுள்ளது. மருத்துமலை சூரியமண்டலத்திற்கு வெளியே உள்ளது என்று ஜாம்பவான் கூறவேயில்லை.

நிற்க, சூரியன் தெற்கிலே மகரரேகையின் மீதோ அதற்கு வெகு அருகிலோ இருந்த போது 66.5 வடக்கு பாகையைக் (Degree)கடந்து வடக்கே (Arctic Circle) வடதுருவம் வரை சென்றாலும் சூரியனைப் பார்க்கவே முடியாது.

அனுமன் சென்றது வடக்கு நோக்கி. அவன் வட துருவத்தை நெருங்க நெருங்க வட திசையில் மீதமுள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. நாம் நிலத்தின் மீது வடதுருவத்தை நோக்கிச் சென்றால் வடதுருவத்தைச் சேர்ந்த பின் வடக்கே இல்லை. ஒரு அடி மேலே சென்றாலும் செல்லும் திசை தெற்கு தான். இதைத் தான் கம்பர் திசை சுருங்கச் செல்லும் கடுமையான் என்று குறிப்பால் உணர்த்தியுள்ளார். நாம் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி உலகை எவ்வளவு முறை சுற்றினாலும் திசை சுருங்காது. ஏனென்றால் கிழக்கோ மேற்கோ இன்னும் மிச்சமிருக்கும். அனுமன் சென்றதோ வடக்கு நோக்கி, அதுவும் விண்ணீன் மீது. அவன் வடதுருவத்தைக் கடந்து சென்றபோது நிகழ்ந்தது என்ன?

அத்தடம் கிரியை (துருவத்தை) நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் þருள் நீங்கியதைக் கண்டான். சோதியான் “மேல் திசையில்” (மேற்கிலே) உதயம் செய்தமையைக் கண்டான், மனவருத்தம் கொண்டான்.

சிறிது நேரம் மனத்தடுமாற்றம் கொண்டாலும் ஆய்ந்து உண்மையை உணர்ந்து தெளிந்தான். அவன் உணர்ந்தவை என்ன.

1 ‘கதிரின் செல்வன் மேல் திசை எழுவான் அல்லன்’ : அவன் சூரியன் “மேற்கில்” உதிப்பதைக் கண்டான். இதற்கு விளக்கம் என்னவெனில் அவன் இலங்கையிலிருந்து கிளம்பும் போது அவனது இடது பக்கம் மேற்கு. சூரியன் மறைந்தபின் இரவிலே அவன் கிளம்பினான். அவன் சூரியன் தனது இடது கைப்புறம் உதிப்பதைப் பார்த்தான். அது மேற்குத்திசை என்று சில நொடிப்பொழுது (கம்பர் ஒரு பாட்டெழுதும் காலம்) கலங்கினான். அவன் சென்றது மேற்கு அரைக் கோளத்திற்கு மேலே. (western hemisphere) அவன் கிளம்பியபோது இருந்த மேற்கு கிழக்கு ஆகி விட்டது. ஆதலால் கதிரவன் எழுந்தது கீழ்த்திசையில் தான் என்று உணர்ந்தனன்.

2 ‘விடிந்ததும் அன்று’ : இங்கே விடிந்து விட்டது ஆனால் இலங்கையில் விடிந்ததும் அன்று என்று பொருள்.

3 ‘மேரு மாற்றினன்’; மேரு (வட துருவம்) திசைகளை மாற்றினான். வடக்கு தெற்காகியது; மேற்கு கிழக்காகியது.

4 “ வடபால் தோன்றும்” ; இத்தகைய திசை மயக்கம் மேருவை நோக்கிச் சென்று மேலும் தொடர்ந்து சென்றால் தோன்றும். மேருவிற்கு வடபால் இல்லையாதலால் அதற்கு அப்பால் என்று நான் பொருள் கொண்டேன்.

5 ‘மறைகள் வல்லோர் சாற்றினர்” ; மேருவைக் கடந்தால் என்ன நிகழும் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

முன்னே கூறியபடி அவன் தெற்கு நோக்கிச் சென்று மறுபடியும் Artic Circle (66.5 Deg. N) க் கடந்து Canada மீது (100 பாகை மேற்கிலே) சென்றபோது தான் சூரியன் உதிப்பதை பார்த்திருக்கமுடியும். இலங்கையில் சூரியன் மறைந்த போது 100 பாகை மேற்கு, 8 பாகை வடக்கு அக்ஷாம்சத்தில் (8 Deg N Latitude) சூரியன் உதித்திருப்பான்.இந்த இடம் வட அமெரிக்கவிக்குத் தெற்கில் பஸிபிக் பெருங்கடலில் உள்ளது.அனுமன் சென்று கொண்டிருந்ததோ இதற்கும் வடக்கிலே வெகு தொலைவிலே (சுமார் 66.5 Deg க்கு வடக்கே) . வடதுருவத்தையும் தான் கடந்து விட்டதைக் கவனியாத அனுமன்,சகலகலா வல்லவனாயிருந்தும் சிறிது குழப்பமடைந்தான். ஆனால் சிறிது நேரத்திற்குள் “கதிரின் செல்வன் மேற்கிலே உதிக்கமாட்டானே, இது கிழக்கு தான். (என் இடக்கைப்பக்கம்); மேற்கல்ல; திசைகளை மேரு மாற்றினன்; இங்கே விடிந்தது; ஆனால் இலங்கையில் விடிந்ததும் அன்று; சாத்திரம் வல்லோர் þத்தகைய திசை மாற்றத்தைச் சாற்றினர்” என்றுணர்ந்து தெளிந்தான். உணர்ந்தான் என்று கம்பர் கூறுவதிலிருந்து அனுமனுக்கு இது முன்பே தெரியும் என்பது புலனாகின்றது. எந்த சாத்திரத்திலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை ஆராயுமாறு அறிஞர்களை வேண்டுகிறேன்.

சாத்திரங்களில் கூறப்பட்டவையாவும் பொய் என்று கூறும் ஒரு கும்பல் தமிழ் நாட்டில் உள்ளது. கம்பர் கூறியவை எல்லாம் பொய் என்று ஒதுக்கிவிடலாமா. வால்மீகி கூறாதவற்றை அவர் ஏன் சொன்னார், பூமி உருண்டை வடிவிலுள்ளது, வடதுருவத்திற்கு அப்பாலும் நாடுகள் உள்ளன என்று தெரிவிக்கவே கம்பர் பூகோள அறிவை வாசகர்களுக்குக் கூறுவதற்காக இந்த நிகழ்ச்சியைப் புனைந்துரைத்தார் போலும்.

மேற்கத்திய நாடுகளில் கி.பி 15 ம் நூற்றாண்டு வரை இந்த அறிவு þல்லை.

கம்பர் கூறிய நாடுகளும் மலைகளும் புராணங்களைத் தழுவி கூறப்பட்டுள்ளன. லிங்க புராணத்தையும் அக்னி புராணத்தையும் படித்த பொழுது þந்த நாடுகளும் மலைகளும் எவை என்று உறுதியாக அறிய முடியவில்லை. மஹாபாரதக் காலத்தே வாழ்ந்து அதை எழுதிய வியாஸரே பதினெட்டுப் புராணங்களையும் எழுதினார் என்று கூறப்படுகிறது. அக்னி புராணத்திலும் ஜெயதேவர் தியாகராஜர் பாடல்களிலும் புத்தர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்றுள்ளது. அவ்வாறாயின் இவை புத்தர் காலத்திற்குப் பின் எழுதப்பட்டவை என்றாகிறது. புத்த, சமண மதங்களின் பரவுதலைக் கட்டுப்படுத்த குப்தர் காலத்திலே (கி.பி 5 ம் நூற்றாண்டுக்குப் பின்) இவை எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு. அறிஞர்கள் இதை ஆராய வேண்டுகிறேன்.

கோவிந்தசாமி

கோயம்புத்தூர்


sgovindaswamy@gmail.com

Series Navigation

கோவிந்தசாமி

கோவிந்தசாமி