42

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

சம்பத் ரங்கநாதன்


டக்ள்ஸ் ஆதாம் ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதினார்.அதில் மனிதர்கள் இறுதி விடையை கன்டுபிடிக்க ஒரு அதி அற்புத க்ம்ப்யூட்டரை தயார் செய்கிறார்கள்.கோடிகணக்கான டாலர் செலவில் செய்யபட்ட அந்த அறிவியல் அற்புதத்திடம் ‘வாழ்வின்,ப்ரபஞ்ஜத்தின் மற்றும் அனைத்துக்குமான இறுதி விடையை கண்டுபிடிக்க சொல்கிறார்கள்.

இது என்ன சாதாரணமாக நடக்கக்கூடியதா ?ஆனால் அந்த கணிப்பொறியும் சாதாரணமானது அல்ல.அது விடையை தேட தொடங்கியது.இது வரை எத்தனை மனிதர்கள் வாழ்ந்தார்களோ,என்ன என்ன பதிவு நடந்ததோ அத்தனயயும் ஆய்வு செய்தது.வருடஙகள் உருன்டோடின,நூற்றாண்டுகள் கடந்தன.மனித இனம் பொறுமையாக காத்திருந்தது.

கம்ப்யூட்டரை இயக்க கோடி கோடியாய் பணம் செலவானது.நூற்றான்டுகள் ஆயிரம் ஆண்டுகளாகின,லட்சம் ஆண்டுகளாகின.இறுதியில் 70 லட்ச்சம் ஆண்டுகளுக்கு பிறகு பதில் வரப்போகும் தேதி வந்தது.மனித இனம் ஆவலோடு கூடி நின்றது. இறுதி பதில் வந்தது

’42 ‘.

அவ்வளவு தான்.வேறு ஒன்றும் கம்ப்யுட்டர் சொல்லவில்லை.

’42ஆ ?அப்படி என்றால் என்ன ? ‘ என்று கூவினார் ஆராயிச்சியாளர்.

‘இறுதி விடை ‘ என்று பதில் அளித்தது கம்ப்யூட்டர்.

அனைவரும் தலையில் கை வைத்துகொண்டு உட்கார்ந்துவிட்டனர். 42 என்பதை வைத்துகொன்டு என்ன செய்வது என்றே யாருக்கும் தெரியவில்லை.ஆனால் அது தான் இறுதி விடை என்று கம்ப்யூட்டர் சத்தியம் செய்தது.

மெதுவாக ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘ஆமாம் ,வாழ்வின் இறுதி விடை,இறுதி விடை என்றீர்களே,அதற்கான கேள்வி என்ன ‘ என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை.கம்ப்யுட்டருக்கும் தெரியவில்லை.பதில் கையில்

உள்ளது.ஆனால் கேள்வி என்ன ?

—-

இது நிறைய பேர் வாழ்க்கையில் நடப்பது தான்.பதில் தேடுபவர்கள் உலகம்

முழுவதற்குமான விடையை தேடுவார்கள்.அந்த விடை உலகம் முழுவதற்க்குமான அனைத்து கேள்விக்கும் இறுதி பதிலாக இருக்கவேன்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.கடைசியில் பதிலும் வைத்திருப்பார்கள்.நாம் யார் என்பதை நம்க்கு சொல்கிறோம் என்பார்கள். ‘உண்மை என்ன ?மனிதன் பிறந்ததின் நோக்கம் என்ன ?எதற்காக மனிதன் வாழ வேன்டும்.என்ன செய்தால் அந்த நோக்கம் நிறைவேறும்,என்ன செய்தால் நிறைவேறாது ‘ என்று சொல்வார்கள்.

அனைத்து மதங்களும் செய்தது இதைதான். ஒவ்வொரு மதத்தை உருவாக்கியவர்களும் ஒவ்வொரு இறுதிவிடையை கண்டுபிடித்தார்கள்.மனித இனத்தின் அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை எழுத்து பதில் ஒன்றை விடையாக கொடுத்தார்கள்.

எதாவது மதகுருவிடம் போய் உலகில் உள்ள எந்த பிரச்சனையையும் சொல்லி பாருங்கள்.ஒரே பதில் தான் வரும். ‘இந்த பிரச்சனை தீர ஒரே வழி என் கடவுள் தான்.அவர் கொடுத்த புத்தகத்தில் இருப்பது போல் எல்லாரும் நடந்தால் உலகில் எந்த பிரச்ச்னையும் வராது ‘ என்பார்

42 என்ற பதிலுக்கும் கடவுள் என்ற பதிலுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

மதங்கள் செய்த தவறு மனித வாழ்வின் லட்சியம் என ஒன்று உள்ளது என நம்புவது தான்.இதுதான் அந்த லட்சியம் என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு 42ஐ நம் மீது திணிக்கின்றன. ‘இதுதான் நீ கண்டுபிடிக்க வேண்டிய இறுதிவிடை,உனக்காக நான் இதை கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்.நீ தேடவேண்டிய அவசியமே இல்லை.தேடினாலும் நீ கண்டுபிடிக்கப்போகும் இறுதிவிடை இதுதான்.நீ கொடுத்துவைத்தவன். உனக்காக ஒருவர் விடையை முன்னமே கண்டுபிடித்து வைத்திருக்கிறார் ‘ என சொல்லி ஒரு 42ஐ நமக்கு தருகின்றன.

42 சரியான பதில் இல்லை 57 தான் சரியான பதில் என இன்னொரு மதம் சொல்கிறது.42 vs 62, 256 vs 17 என மிகப்பெரும் யுத்தங்களும் மூள்கின்றன.வெட்டுகுத்து நடக்கிறது.பல கோடி பேர் சாகிறார்கள்

எல்லாரும் ஒரு 42ஐ தரும் போது நானும் ஒரு 42ஐ தருகிறேன்.

மனித வாழ்வின் லட்சியம் என எதுவும் இல்லை.

மனித இனம் என்பது குரங்கு,நாய்,பூனை போன்ற இன்னொரு இனம் தான்.

ஒரு வகையான ஸிம்பன்ஸி குரங்கினம் தான் மனிதன்

உடல் தான் ஆத்மா.சாவுதான் மோட்சம்.செத்ததுக்கு அப்புறம் ஒண்ணும் இல்லை.மறு உலகம்,சொர்க்கம்,நரகம் என்பதெல்லாம் உடான்ஸ்.

இதுதான் என் 42.

—-

doctorsampath@gmail.com

Series Navigation

சம்பத் ரங்கநாதன்

சம்பத் ரங்கநாதன்