இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

திலகபாமா


சனிக்கிழமை காலை 9. 30 மணிக்கு பட்டிவீரன்பட்டியில் எ ? . எம் . கே திருமண மண்டபத்தில் ?இது வரை கவிதை ? எனும் தலைப்பில் கானல் காட்டில் நடைபெற இருந்த கருத்தரங்கிற்கு என வருகை தந்திருந்த அறிஞர்களும் கவிஞர்களும் விமர்சகர்களும் மாணவர்களும் உள்ளூர் ஆர்வலர்களும் வந்து சேர செளந்திரபாண்டியனார் கருத்தரங்கம் துவங்கியது . துவக்க நிகழ்வாக கவிதை வாசிப்பில் வத்தலக்குண்டு பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த கவிஞர்கள் கவிதை வாசித்தனர் . பல்வேறு தளத்தின் வெளிப்பாடக கவிதை இருக்க செளந்திரபாண்டியனார் பற்றிய சிறப்புரையை எழுத்தாளர் மாலன் அவர்களும் எழுத்தாளர் பொன்னீலன் அவர்களும் பகிர்ந்து கொண்டனர் .

மாலன் தன் பேச்சில் எதை படிக்கிறீர்கள் என்பதைவிட அதை எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். இலக்கியம் வாழ்க்கை பாடப்புத்தகங்களுக்குள் இல்லை .பாடப்புத்தகங்களுக்கு வெளியே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு .எல்லாவற்றுக்கும் அடிப்படை இதுதான் என்று நினைக்கின்றேன் . எதை வேண்டுமானால் எழுதுங்கள் ஆனால் அதன் பலன் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் எதை எழுத வேண்டும் என்ற தெளிவான திடமான பார்வையை சமூகம் தரும் . வாழ்க்கையை வாழ்க்கையை பாதிக்கின்ற சமூகத்தை வரலாற்றுப் பார்வையுடன் பார்க்கின்ற தீட்சண்யம் இன்று இல்லை . மாலன் அவர்களைத் தொடர்ந்து பொன்னீலன் அவர்களும் செளந்திரபாண்டியனார் பற்றிய வரலாற்றுத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

செளந்திரபாண்டியனார் வரலாறு இந்த மண்ணின் வரலாறு . உங்கள் மண்ணின் வரலாறு . அன்னாரின் சுயமரியாதை வெளிப்பாடு செயல்பாடு அரசியல் இயக்கம் நட்புறவு துணிவு சாதி தாண்டிய பார்வை போன்ற பல்வேறு விசயங்களும் பேசப்பட்டன . நிகழ்வில் பங்கு கொண்ட இளைய தலைமுறையினருக்கு அரிய தகவல்களையும் ஊக்கமூட்டும் பேச்சாகவும் இருவரது பேச்சும் இருந்தது.

இந்த நிகழ்வில் கவிஞரும் சுற்றுபுறச் சூழல் ஆர்வலருமான வைகைச் செல்வி தனது :வானகமே வையகமே ? எனும் சுற்றுபுறச்சூழல் இதழ் மாலன் அவர்களால் வெளியிடப்பட்டு கவிஞர் பழமலய் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது .

பெரும்பாலும் வரலாறுகள் எழுதப்படுகின்றன . வாழுகின்ற வரலாறாக 40 ஆண்டு கால இலக்கிய உலகின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற கனகசபாபதியின் துணைவியார் திருமதி லட்சுமிி அம்மாள் அவர்களுக்கு இந்த அரங்கில் ?இலக்கிய வரலாறு ? எனும் கெளரவம் அளிக்கப்பட்டது .

நிகழ்வில் ‘கவிதை என்பது யாதெனில் ‘ எனும் தலைப்பில் காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள் உருவாக்குகின்ற போக்குகளை வன்மையாக கண்டித்தார் கவிஞர் வெண்மணி அவர்கள் . நிகழ்வு திரு . முல்லை நடவரசு அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது திலகபாமா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது .

mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா

திலகபாமா