பிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue


——————————————————————————————–

‘Annual program without frontiers ‘ என்ற பெயரில் அமெரிக்காவிலும்,

இன்னும் மற்ற பல நாடுகளிலும் சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குறும்பட

விழா ஒவ்வொரு வருடமும் செம்மையாய் நடக்கிறது. இந்த விழாவானது பிலடெல்பியாவிலும்

சிறப்பாய் நடந்து முடிந்தது. 2003 ஆம் ஆண்டு நடந்த விழாவில், அருண் வைத்யநாதனின்

BR(A)ILLIANT எனும் நகைச்சுவைக் குறும்படமும் OFFICIAL SELECTIONல் ஒன்றாய்த்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அருண் வைத்யநாதன், நியூயார்க் பிலிம் அகாடெமியில் திரைப்படம்

எடுப்பதைப் பற்றிய குறுகிய காலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர். இது பற்றி அவர்

கூறுகையில், ‘மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி இது. நியூஜெர்சி மற்றும்

இதர நெருங்கிய மாநிலங்களில் வசிக்கும் திரைப்பட ஆர்வமுள்ளவர்கள், எதிர்கால முயற்சிகளில்

கை கோர்ப்பார்களேயானால் இன்னும் சிறப்பாய் இருக்கும். திண்ணையில் வெளியாகும் இந்தச்

செய்தி அதைக் கண்டிப்பாய் செய்யும் என்றும் நம்புகிறேன் ‘ என்று தெரிவித்தார்.

BR(A)ILLIANT படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள்

நடிப்பு :- மைக், தினார்த்தே

ஒளிப்பதிவு :- டேவிட் எல்லிஸ்

படத்தொகுப்பு :- சொட்டிரிஸ் சாரலம்பாஸ்

உதவி ஒளிப்பதிவு :- நெரியா லந்தா

இசை :- ஸ்ரீீகாந்த் (STUDIO 1234)

எழுத்து மற்றும் இயக்கம் :- அருண் வைத்யநாதன்

தயாரிப்பு:- ரஜிதா அருண்

விழா தொடர்பான இணைய செய்தி

———————————————–

http://www.2003selection.philadelphia.festivalinfo.info/

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு