அன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

பாவண்ணன்


‘ாஜி கருண் யக்கத்தில் மோகன்லால், சுகாசினி போன்றோருடைய நடிப்புடன் 1999 ஆம் ஆண்டில் வெளியான வானப்பிரஸ்தம் என்னும் மலையாளத் திரைப்படம் மிக முக்கியமான ஒரு வரவாகும். காலம் முழுக்க அவமானங்களையும் கசப்புகளையும் விழுங்கியபடி அன்புக்காக ஏங்கியவண்ணம் காலத்தைத் தள்ளும் ஓர் ஆணும் ஒரு காவியத்தலைவனுடைய ஈர்ப்புக்கு மட்டுமே ஆளாகி அவனுடைய அன்பில் கரைந்தும் அவன் வியக்கும்வண்ணம் அவன்மீது தன் அன்பைப் பொழிந்தும் காலத்தை ன்பமயமானதாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு பெண்ணும் சந்திக்கநேரும் சூழலில் உருவாகக்கூடிய மயக்கங்களையும் ஆனந்தங்களையும் தடுமாற்றங்களையும் சோகங்களையும் ஏக்கங்களையும் காவியத்தன்மையுடன் ப்படம் பதிவுசெய்கிறது.

அரும்புகள் முளைவிட்ட தோட்டத்தைப்போல ஏக்கங்கள் முளைவிட்ட மனத்துடனேயே மனிதகுலம் வாழ்ந்துவருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஏக்கம். ஒவ்வொரு விதமான கனவு. ந்த ஏக்கத்தை ஒட்டியே ஒவ்வொருவருடைய மன யக்கமும் நடத்தையும் பழக்கவழக்கங்களும் அமைந்துவிடுகின்றன. அன்புக்காக ஏங்கும் மனம் அடையும் அவஸ்தைகள் ஏராளம். அந்த அன்பைத் தேடி எந்தத் திசையில் செல்வது என்றும் எவர்வழியாக தன் மனத்தின் தாகம் தணியும் என்றும் சிறிதும் அறியாத சூழலில் வழிதெரியாத பயணியைப்போல காலமெல்லாம் அலைந்துஅலைந்து படுகிற துயரங்களைப் பட்டியலிடுவது சிரமம். அன்பை மழையெனப் பொழியும் உயிரை அரும்பாடுபட்டுக் கண்டடையும் ஓர் உயிர் அந்த உயிராலேயே சில கணங்களுக்குள் புறக்கணிக்கப்படும் நிலையில் உருவாகும் துயரங்களின் பட்டியல் மேலும் நீளமானது. வானப்பிரஸ்தம் கதையில் டம்பெறும் குஞ்ஞுக்குட்டனுடைய துயரங்கள் த்தகையவை.

பெற்று ழந்த அன்பு என்பது கண்களைப் பெற்று ழப்பதற்குச் சமமாகும். கண்களைப் பெற்றிருந்தபோது கண்ட காட்சிகளையும் அக்காட்சிகள் வழங்கிய ன்பத்தையும் ஒரு மனத்தால் எப்படி மறக்க முடியும் ? விரட்டப்பட்ட ஆட்டுக்குட்டி மீண்டும்மீண்டும் தோட்டத்து வேலிப்பக்கத்தில் வந்து நிற்பதைப்போல பழைய காட்சிகளை மறுபடியும் பெறுவதற்காக மனத்தில் நிரம்பிவழியும் ஏக்கத்தை எப்படித் தவறு என்று சொல்லமுடியும் ? சருகுகளாலும் செத்தைகளாலும் கட்டப்பட்ட கூட்டைப்போல ஏதோ சில நியாயங்களாலும் கட்டுப்பாடுகளாலும் மரபுகளாலும் சமைக்கப்பட்ட கூடுதான் மனிதமனம். ஆனால் ந்த மண்ணில் உயிர்வாழ்தலுக்கான சாரத்தைப் பறிகொடுத்த மனம் பரிதாபமாகத் தன் கூட்டைத் தானே சிதைத்துக்கொள்கிறது. தொலைந்த சாரத்தைத் தன் உயிரில் மீண்டும் பற்றிப்படர வைத்தால் மட்டுமே தன் மூச்சு நிலைக்கும் என்று நம்பத் தொடங்கிவிடுகிறது. ந்த நம்பிக்கையைச் சரி என்று வாதிடவோ சரியல்ல என்று வாதிடவோ ச்முகத்திடம் ஆயிரம் சான்றுகள் ருக்கலாம். ஆனால் அவை எதனாலும் துாய அன்பைத் தேடி உருக்குலையும் ஒரு மனத்தை எடைபோட முடியாது. மனம் ஒரு மெல்லிய மலரைப்போன்றதுதான். ஆனால் அது எடைபோட முடியாத ஒரு மலர். வாழ்வின் நெருக்கடிகளில் நின்று ந்த உண்மையை மறுபடியும் கண்டடைகிறது வானப்பிரஸ்தம் திரைப்படம்.

திரைப்படத்தில் டம்பெறும் குஞ்ஞுக்குட்டன் ஒரு கதக்களிக் கலைஞன். அக்கலை அவனுக்குப் பெருமையைக் கொண்டுவந்து சேர்க்கிறது. ஆனால் அப்பெருமைகளில் அவன் மனம் நிறைவடையவில்லை. வேலைக்காரியாக ருந்த தாய்க்கும் பணக்கார நம்பூதிரிப் பிராமணன் ஒருவனுக்கும் கள்ள உறவில் பிறந்தவன் அவன். கழுவ முடியாத அந்தக்கறையுடன் வேறொரு சுமையையும் அவன் மனம் சேர்ந்து சுமக்கிறது. அந்த நம்பூதிரியால் அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட திருமணவாழ்வின் சுமை அது. ஒருபுறம் அவமானமான பிறப்பின் சுமை. மறுபுறம் அன்பற்ற ல்லறச்சுமை. ரண்டும் பெரிய பாரங்களாக அவனை அழுத்துகின்றன. அன்புக்காக ஒவ்வொரு கணமும் அவன் ஏங்குகிறான். குழந்தையின் அன்பு சின்ன ஆறுதல் என்றாலும் அடிக்கடி சுடுசொற்கள் வழியாக அக்குழந்தை அவனிடமிருந்து பிரிக்கப்படும் சூழல் அவன் ஏக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.

மகாராஜாவின் முன்னிலையில் கதக்களி ஆடச்சென்ற ஒருநாள் அவருடைய மருமகளான சுபத்திரையைத் தற்செயலாகச் சந்திக்கிறான் அவன். பெண் வே ‘ங்கள் பூண்டு ஆடும் அவன் அர்ஜூனன் வேடம் பூண்டு ஆடவேண்டும் என்று கோருகிறாள் அவள். அவனது அபிநயங்களின் மேன்மையைப்பற்றி அவள் பேசும்போதும் மெச்சும்போதும் அவன் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. வாழ்வில் அவனை ஊக்கப்படுத்தி வெளிப்பட்ட முதல் குரல் அவளுடையது. அவள் விருப்பப்படி அவன் அர்ஜூனன் வேடமிட்டு ஆடுகிறான். சுபத்திரைக்கு அவன் உண்மையான காவிய அர்ஜூனனாகவே தெரிகிறான். அவன் ஏழை அல்ல. வேடமிட்டுப் பாடக்கூடிய கலைஞனும் அல்ல. மகாபாரதத்து அர்ஜூனன். தன்னைக் கடத்திச் செல்லவேண்டிய அர்ஜூனன் ஏன் தன்னைத் தனியே விட்டுச் செல்கிறானோ என்று தவிக்கிறாள் சுபத்திரை. மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து அவனை அர்ஜூனனாகவே ஆடச் சொல்கிறாள். சுபத்திரை கடத்தப்பட்டது தொடர்பாக தான் எழுதி வைத்திருக்கும் நாடகத்தை அவன் நடிக்கவேண்டும் என்பது அவள் விருப்பம். கையெழுத்துப் பிரதியையும் தருகிறாள். அர்ஜூனனாக ஆடிப் பெருமிதத்துடன் உலவிய ஒருநாள் ரவில் ஒப்பனைகளைக் கலைக்காத நிலையில் அவனைத் தன் அறைக்குள் அழைத்துச் செல்கிறாள். அவனுடன் கொண்ட உறவு அவளுக்கு அர்ஜூனனுடன் கொண்ட உறவாகவே தோன்றுகிறது. தன் வயிற்றில் உருவாகும் கரு அபிமன்யுவே என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

த்தருணத்தில்தான் துரதிருஷ்டம் அவர்கள் கனவைப் பொசுக்குகிறது. சுபத்திரையின் கணவன் விமான விபத்தில் றக்கிறான். சுபத்திரை விதவையாகிறாள். அவள் மனவானில் படர்ந்திருந்த கனவென்னும் மேகங்கள் கலைந்துவிடுகின்றன. எதார்தத்தின் வெப்பம் அவளைத் தகிக்கிறது. கலைஞனுடனான உறவைத் தொடர விருப்பமின்றித் துண்டித்துக்கொள்கிறாள் சுபத்திரை. துண்டிக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள யலாமல் பைத்தியம் பிடித்தவனைப் போல அலையத் தொடங்குகிறான் கலைஞன். அவளது அன்பைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டே ருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது அவன் மனம். எப்படியாவது அவள் அன்பை மறுபடியும் பெறவேண்டும் என ஏராளமான மடல்களை எழுதுகிறான். பதில் ல்லை. நேரில் சந்திக்கச் செல்கிறான். அனுமதி கிடைப்பதில்லை. காலமெல்லாம் ழிவுகளிலும் வலிகளிலும் திளைத்துக் கிடந்தவன் டையில் கிடைத்த சிறு மனஅமைதியைத் தொலைத்துவிட்டு மீண்டும் ழிவுகளும் வலிகளும் நிறைந்த உலகுக்குத் திரும்பவேண்டியதாக ருக்கிறது.

ஆண்டுகள் கரைந்தாலும் அவன் வலி கரையவில்லை. அவன் ஏக்கமும் குறையவில்லை. சிறுமியாக ருந்த மகள் பெரியவளாகிக் கதக்களி கற்கிறாள். அவளுடைய முதல் அரங்கேற்றம் தான் நிகழ்த்தும் நிகழ்ச்சி வழியாகவே அமையவேண்டும் என்பது அவன் விருப்பமாகும். எதிர்பாராத விதமாக அவன் மனத்தில் ஒரு திட்டம் உதிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சுபத்திரை மூலமாகக் கிடைத்த நாடகப்பிரதியை அரங்கேற்றத் திட்டமிடுகிறான். நாடகத்தில் மகளே சுபத்திரை. தந்தையே அர்ஜூனன். மகளின் ஒப்பனைக்குள் ஒளிந்திருக்கும் சுபத்திரைப் பாத்திரத்தின் வழியாக தன்னை அணைத்துத் தன்மீது அன்பைப்பொழிந்த சுபத்திரையைக் காண்கிறான் அவன். அவளே தன்னருகில் வந்து நிற்பதுபோன்ற நிறைவு ஏற்படுகிறது அவனுக்கு. அவளுடைய மூச்சுக்காற்று அவன்மீது மோதுகிறது. மகளைத் தழுவித்தான் அந்த நிறைவை அவன் அடைய நேரிடுகிறது. அதே மேடையில் அவன் மரணமும் ஏற்படுகிறது. சுபத்திரையின் காதலனாக தன் உயிர் பிரியவேண்டும் என்கிற வேகம் அந்த முடிவைநோக்கி அவனைத் தள்ளுகிறது. யல்பான அர்த்தத்தில் வானப்பிரஸ்தம் என்பது எல்லாவற்றையும் துறப்பதற்கு முன்னர் தன்னைத்தானே தயார்ப்படுத்திக்கொள்ள எடுத்துக்கொள்ளும் வாழ்க்கைக்கட்டத்தின் ஒரு பகுதி. குஞ்ஞுக்குட்டனுடைய வானப்பிரஸ்தம் ஒருவகையில் தன்னைத்தானே மரணத்துக்குத் தயார்ப்படுத்திக்கொள்வதாக அமைந்துவிடுகிறது.

திரைப்படத்தில் சுபத்திரையின் பாத்திரம் மிக அழகாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் கதக்களியின்மீது அதீத நாட்டம் கொண்ட ளம்பெண் அவள். நடனமிடும் பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிப்பவள். நடன முத்திரைகள் வழியாகவே உரையாடும் ஆற்றல் வாய்க்கப்பெற்றவள். புனைவையும் எதார்த்தத்தையும் பிரித்துப் பார்க்க விரும்பாதவள். அவனை அடைந்ததை அர்ஜூனனை அடைந்ததாகவே எண்ணி அவள் மனம் ஆனந்தத்தில் திளைக்கிறது. ஆனால் விதவையான மறுகணமே அவள் மனம் புனைவுகளை உதறி எதார்த்தத்தில் கால் பதிக்கிறது. அவள் மனத்தின் எல்லாக் கதவுகளும் ஒவ்வொன்றாகத் தாழிடப்பட்டுக்கொண்டே வருகின்றன. ந்த ரண்டு வேறுபாடுகளையும் யக்குநர் உணர்த்தும் விதம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. முற்பகுதியில் சுபத்திரை எல்லா டங்களிலும் நேரிடையாகவே வெளிப்படுகிறாள். பிற்பகுதியில் அவள் ஒவ்வொரு காட்சியிலும் ஏதேனும் ஒரு கதவுக்குப் பின்னால் அல்லது திரைக்குப் பின்னால் மட்டுமே வெளிப்படுகிறாள். முற்பகுதியில் அவள் தன் மனம் செலுத்தும் திசையில் தயக்கமின்றி நடக்கிறாள். பிற்பகுதியில் அவளால் அவ்விதமாகச் சிறகுவிரித்துப் பறக்க முடியாதவளாகப் போகிறாள். மனயக்கம் சூட்சுமமான வேறொரு விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட ஒன்றாக மாறியிருப்பதை ஒருவித துக்கத்தோடும் யலாமையோடும் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக ருக்கிறது.

மாறுபட்ட மனயக்கமுறைக்குச் சுபத்திரை கட்டுப்பட்டுச் செல்வதற்குக் காரணம் அவளுக்கு ருக்கிற சமூகமதிப்பு. அதைச் சற்றும் பொருட்படுத்தாதவனாக குஞ்ஞுக்குட்டன் மீண்டும்மீண்டும் சுபத்திரையின் அன்பை யாசித்து வந்து நிற்பதற்குக் காரணம் சமூகமதிப்பில்லாத அவன் வாழ்க்கை. அவன் பிறப்பும் வளர்ப்புமே அதற்குக் காரணங்கள்.

றுதிக்காட்சியில் மகளைக் காதலியாக நினைத்துத் தழுவியவண்ணம் நிற்கும் குஞ்ஞுக்குட்டனுடைய கண்கள் அருவியாகக் கண்ணீரைப் பெருக்கியபடி ருக்கிறது. வழியும் அக்கண்ணீர்த் துளிகள் சொல்லும் சங்கதிகள் ஏராளம். குற்ற உணர்வுக்கும் அன்பின் ஏக்கத்துக்கும் யலாமைக்கும் டையே தவிக்கும் அக்கண்களிடையே மிதக்கும் கனவின் துளியைக் காணமுடிகிறது. அந்த ஒரு காட்சி எதைஎதையோ சொல்லவும் பேசவும் துாண்டியபடி ருக்கிறது.

———————————

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்