ஷார்ல் பொதலேர் (Charles Baudelaire) – 1821 -1867

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Correspondances ( Les Fleurs du mal – IV) – Charles Baudelaire

பாரீஸில் ஏப்ரல் 9ல் 1821ம் ண்டு பிறந்தவர். சிறுவயதிலேலேயே தந்தையை இழந்து, தாய் மறுமணம் செய்துகொள்ள, அநாதையாக்கப்பட்டவர். தந்தைவழியில் ஏராளமாகச் சொத்து. மைனர்வாழ்க்கைவாழ்ந்து 1841ல் பிரெஞ்சு திக்கத்திலிருந்த பூர்போன் தீவுக்குச் (இப்போதைய பெயர் la Reunion) சென்றார். அங்கே ‘கறுப்பு வீனஸ் ‘ எண்றழைக்கபட்ட நடிகை ‘ழான்ன் துய்வால் ‘ (Jeanne Duvaal) இடம் ஏற்பட்ட காதலினால் எழுதிய பாடல்கள் அதிகம். பிரெஞ்சு புதுக் கவிதைகளின் தந்தை. இவரது முதல் தொகுப்பு 1859ல் வெளிவந்தபோது ‘ ‘வேதனைகளின் மலர் ‘ ( Les Fleurs du mal)பிரான்சு முகம் சுளித்தது. அவரது கவிதைகள் மிகவும் பாசம் எனத் தொடையைத் தட்டினார்கள். பிரெஞ்சு கலாச்சாரத்தைக் கெடுக்க வந்தவர் எனக் கூறி தண்டிக்கபட்டவர். ‘வேதனைகளின் மலர் ‘ இரண்டாவதுத் தொகுப்பு கூடுதலாக 35 கவிதைகளுடன் 1860ல் மீண்டும் வந்தது. Correspondances – பந்தம், அவற்றுள் ஒரு முக்கியமான கவிதை.

பந்தம்

இ யற்கை லயத்தின்

உயிர்த்தூண்கள்

எப்போதேனும் எழுப்பும்

குழப்பக் குரல்கள்

தனது ஊடாக

இயற்கையை எட்டிப் பார்க்கும்

மனிதத்திடம்

சினேகப் பார்வையுடன்

கானகம்

சுகந்தமும், ஓசையும், வண்ணமும்

எல்லைகளற்ற இரவாய், பகலாய்

விரிந்து

எங்கும் எதிர்வார்த்தையாடிடும்

எங்கேயோவோர் ழ்ந்த ஒருமையில்

இருளில், நீண்ட எதிரொலியாய்

நின்று முடிந்திடும்

இங்கே

பச்சைக் குழந்தைகளின் பரிமளம்

இனிமைக்குக் குழலோசை

ஈரமனத்திற்குப் பசும்புல்வெளிகள்

முரணாக

குற்றம், பணம், சாதனையென

முற்றுப் பெறாத குணங்கள்

மனமும் உணர்வும் சுமப்பதைக்காண

அத்தரும், ஜவ்வாதும்

அகிற்புகையும், கஸ்தூரியும்

கானம் பாடிடும்

– Charles Baudelaire

‘பந்தம் ‘ அல்லது உறவுகள் இசைந்து போகக்கூடியவை – ஒன்றோடொன்று பொருந்தக்கூடியவை. இரு பொருள்களுக்கிடையே அல்லது இ ரு உயிர்களுக்கிடையே அல்லது ஒரு பொருளுக்கும் உயிருக்குமிடையே ஏதோவொரு தேவையை நி றைவேற்றக்கூடிய மையப் புள்ளி, ஓர் ஒற்றுமை பந்தத்திற்குக் காரணமாகிறது. நம்பிக்கையும் கற்பனையும்தரும் அனுமதியின்பேரில் வெற்றிடங்களைக்கூட பந்தத்தால் நிரப்ப முடியும். அவ்வுறவுகள் மரங்களுக்கும் காடுகளுக்குமானதாகவிருக்கலாம். தூண்களுக்கும் மண்டபத்துக்குமானதாகவிருக்கலாம். இயற்கைக்குக்கும் உயிர்களுக்குமாகக்கூடவிருக்கலாம்.. இயற்கையை கோவிலென்றழைத்து தூண்களையும் மரங்களையும் பார்வை ஒப்புமைக்கு வைக்கின்ற கவிஞன் ன்மீக ஒப்புமைக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றான். இயற்கையின் க்கமோ அழிவோ, எழுச்சியோ சிதைவோ முழுச் சுதந்திரச் சூழலில் மனித மனங்களில் பந்தங்களாக இசைந்து அவனது ஐம்புலன்களையும் ட்டுவிக்கின்றது.

பொதலெர் ஓர் இயற்கை உபாசகன். ஒரு கவிஞன் மட்டுமே இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலே மத்தியஸ்தனாகவிருக்கமுடியும் என்பதற்கு இவனும் விதி விலக்கல்ல. காரணம் கவிஞன் மட்டுமே அடையாளபடுத்தக்கூடிய, அறிமுகப்படுத்தக்கூடிய முகம், இயற்கையின் முகம். அதன் நவரச முகமும் அவனுக்கு மட்டுமே பரிச்சயமானவை. இயற்கையின் சிதைவுகளைக் கூட க்கமென்பதாக அவதானிக்கின்ற மனம் அவனுக்கு மட்டுமே உண்டு. இயற்கையின் குணங்கள் ஏதோவொருவகையில் உறவுச் சங்கிலிகளாய்- ஒன்றோடு மற்றொன்று இசைந்த பந்தமாய் தொடர்வதென்பது உண்மை. இதனூடே மரணத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் மனிதம். முடிவாக, உலகமனைத்தும் ஒரே பொருள் என்பதை விளக்குகின்ற பந்தம்:

மீசைகவிஞனும் இதைத்தான் வழிமொழிகின்றான்:

இவ்வுலகம் ஒன்று

ண், பெண், மனிதர், தேவர்

பாம்பு, பறவை, காற்று, கடல்

உயிர், இறப்பு – இவையனைத்தும் ஒன்றே

ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலையருவி,

குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே

இன்பம், துன்பம், பாட்டு,

வண்ணான், குருவி

மின்னல், பருத்தி

இதெல்லாம் ஒன்று

மூடன், புலவன்

இரும்பு, வெட்டுக்கிளி,

இவை ஒரு பொருள்,

வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்

இவை ஒரு பொருளின் பல தோற்றம்

உள்ளதெல்லாம் ஒரே பொருள்

இந்த ஒன்றின் பெயர்தான் த்மா!

– பாரதி ( வசனகவிதை – இன்பம்)

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா