முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


பயாஸ்கோப்பும் ஃபிலிமும்டாக்டர்.எம். வேதசகாயகுமார், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரி

http://www.thinnai.com/ar0822031.html

என்ற கட்டுரையை முன்வைத்து நான் இதை எழுதுகிறேன். இக்கட்டுரை மூலம் சில கருத்துக்கள், கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

நான் வேதசகாயகுமார் திண்ணை கடிதங்கள் பகுதியில் எழுதியிருந்த கடிதங்கள் குறித்து அதே பகுதியில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.அவர் எழுதிய கட்டுரை(கள்) குறித்து திண்ணையில் நான் கருத்து தெரிவிக்கவில்லை.ஜயமோகன் எழுதியவை குறித்து திண்ணையில் எழுதியிருக்கிறேன். இதற்கு முன் திண்ணையில் கட்டுரைகள் எழுதிய போதும்,கடிதங்கள் எழுதிய போதும் பெயருக்கு முன் டாக்டர் என்றும், பெயருக்குப்பின் முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் என்றும் போட்டு எழுதாதவர் இந்தக் கட்டுரையில் மட்டும் அவற்றை போட்டுக்கொள்வது ஏன்.நான் யார் தெரியுமா என்ற தொனியிலா, இல்லை எனக்கு பதில் அளிப்பவர் சாதரண ஜீவி அல்ல, முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் என்பதை வாசகர்களுக்கு சுட்டிக்காட்டவா.நாச்சார் மட விவகாரம் சிறுகதை இந்தப் பேராசிரிய பட்டத்துடன் வெளியடபட்டுள்ளதா ? இல்லை அதில் இந்த தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளனவா ?.

திண்ணையில் அவ்வப்போது எழுதும் எழுத்தாளர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றவர்.ஆனால் அவர் அதை பெயருக்கு முன் போட்டுக்கொண்டு திண்ணையில் எழுதுவதில்லை.முன்பு திண்ணை விவாத களத்திலும், இப்போது வேறொரு விவாதக்களத்தில் கருத்துக்களை தெரிவித்து வரும் ஒரு அன்பர் முனைவர் பட்டம் பெற்றவர், இத்தாலியிலும், பிரான்சிலும் ஆய்வு செய்தவர்.அவர் தன் பெயருக்கு முன் டாக்டர் என்று போட்டுக்கொள்வதில்லை.கடிதங்கள் எழுதும் போதும்,முன்பு கட்டுரை எழுதும் போதும் வெறும் வேதசகாய குமார் என்ற பெயரில் அவை வெளியான போது, தான் டாக்டர் பட்டம் பெற்றவர், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் , எனவே இவற்றை முறையே பெயருக்கும் முன்னும், பின்னும் இடம் பெற வேண்டும் என்று தெரிவிக்காதவர், இக்கட்டுரையில் மட்டும் அவற்றை தெரிவிப்பது ஏன், அதுவும் கட்டுரையாசிரியர் பெயருடன்.கட்டுரையின் துவக்கத்தில் அல்லது இறுதியில் கூட கட்டுரையாசிரியர் டாக்டர் பட்டம் பெற்றவர்,பேராசிரியர் எனக் குறிப்பிட்டிருக்கலாம். இனி எழுதும் எல்லாக் கட்டுரைகளும் இந்த டாக்டர், பேராசிரியர் என்ற அடைமொழிகளுடன்தான் வெளியாகுமா ?. இப்படி அடைமொழிகளுடன் அவர் எழுதுவது எனக்கு செளகரியமானதுதான்.

இந்த டாக்டரின் ஆய்வு குறித்து திண்ணையில் ஜெயமோகன் கூறுகிறார்

க.நா.சுப்ரமணியம் தன் எல்லா விமரிசனங்களையும் போகிறபோக்கில்தான் சொல்லியிருக்கிறார். அவரை இலக்கிய விமரிசகர் என்று சொல்லக் கூடாது, இலக்கிய சிபாரிசுக்காரர் என்று சொல்லவேண்டும் என்று சொன்ன சுந்தர ராமசாமி [க.நா.சுவின் விமரிசன முகம்] ஆங்காங்கே உதிர்க்கப்பட்ட ஒற்றைவரிகள் மூலமே ஜெயகாந்தனை ஒதுக்கிவிட்டிருக்கிறார். ஆனால் ஜெயகாந்தன் மீது இன்று சொல்லப்படும் விமரிசனங்கள் சுந்தர ராமசாமியின் வரிகளின் நீட்சிகளே. நேர் பேச்சில் அவர் தொடர்ந்து முன்வைத்த கருத்துக்களின் அடுத்த கட்ட நிலைகள் அவை. ஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக

இன்னொரு வாசகர் எழுதுகிறார்

எம்.வேத சகாயகுமார் புதுமைப்பித்தனை தூக்கும் பொது ‘கட்டளைக்கு ஏற்ப ‘ ஜெயகாந்தனை கீழிறக்கியது வருந்ததக்கதே . இப்பிழைக்ல் நாளடைவில் இங்கே களையப்படுமென எண்ணுகிறென். காலம் எவர் பக்கமும் நின்றுவிடுவதில்லை

சண்முகம் shanmukam1951

http://www.thinnai.com/pl0815032.html

டாக்டர் பட்டம் அசலான/தனித்துவம் மிக்க வேறுவார்த்தைகளில் சொல்வதானால் original contribution என்று கருதத்தக்க ஆய்விற்கு தரப்படுவது. முனைவர் பட்டம் ஆய்வேடு, அவர் எழுதிய கட்டுரைகள் பல பெருமளவிற்கு சுந்தர ராமசாமியின் கருத்துக்களின் எதிரொலிகள், அவற்றை அடியொற்றி எழுதப்பட்டவை.இதை நான் சொல்லவில்லை.ஜெயமோகன் சொல்கிறார்.ஆகவே வேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார்- ஜெயமோகனா இல்லை குமாரா ?

மேலும் ஜெயமோகன் கூறுகிறார்

‘அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன. ‘ இதன் அடிப்படையில் பார்த்தால் அவரது ஆய்வேட்டில் சுந்தர ராமசாமியின் கருத்துகளே முக்கியத்துவம் பெற்றுள்ளன என்று கூறுவது மிகையாகாது எனலாம். ஒரு ஆய்வேட்டினை ‘அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன ‘ என்று சொல்வது அது சுயமான ஆய்வுழைப்பில் உருவான ஆய்வேடே அல்ல, பெருமளவிற்கு இன்னொருவர் சொற்களின் தொகுப்பு என்று கருதத்தக்கது என்பதற்கு நிகரானது.ஒருவர் கருத்துக்களை இன்னொருவர் முழுக்க ஏற்று அதற்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதலாம்.ஆனால் முனைவர் பட்டய ஆய்வேடு என்பது அத்தகைய கட்டுரைகளின் தொகுப்பாக இருக்குமானால் அதில் ஆய்வாளரின் சுயமான கோணம்,பார்வை, பிறர் கூறாத கருத்துக்கள், ஆய்வாளர் தன் அறிவாற்ற்லைப் பயன்படுத்தி கண்டடைந்தது என்ன போன்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு ஆய்வாளரின் முனைவர் பட்டத்திற்கான உழைப்பில் தகவல் திரட்டல், ஆதாரங்களை திரட்டல் ஆகியவை முக்கியமானவை.ஆனால் அதற்காக மட்டும் முனைவர் பட்டம் தரப்படுவதில்லை.

மாறாக ஆய்வாளர் முன்வைக்கும் அசலான கருத்துகள், அதற்கு அவர் காட்டும் தக்க சான்றுகள், எடுத்துக் கொள்ளப்பட்ட ஆய்வுக்கேள்வி கையாளப்பட்டவிதம்,முன் வைக்கும் வாதங்களின் பொருத்தம், ஆய்வின் தரம் போன்றவற்றை கருத்தில் கொண்டே ஒரு ஆய்வேடு மதிப்பிடப்படுகிறது.ஜெயமோகன் எழுதியுள்ளதன் அடிப்படையில் மேற்கூறிய கேள்விகளை எதிர்கொண்டால் வே.ச.குமாரின் ஆய்வு இன்னொருவர் கருத்தின் பிரதிபலிப்புத்தான் , அதில் அவரது சுயமான பங்களிப்பு மிகக் குறைவே என்ற முடிவிற்குத்தான் நாம் வரவேண்டும்.இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. பொதுவாக முனைவர் பட்டய ஆய்வுகள் நூலாக வெளிவரும் போது அவை பல மாற்றங்களுடன் வெளிவரும்.ஆய்வாளர்கள் வாசகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மாறுதல் செய்வதுண்டு, சிலவற்றை சேர்ப்பதும், சிலவற்றை தவிர்ப்பதும் உண்டு.தன்னுடைய புரிதல்/நிலைப்பாட்டில் மாறுதல் இருந்தால் அதையும் குறிப்பிடுவதுண்டு. ஆய்வு முடிந்து பல ஆண்டுகள் கழித்து நூல் வெளிவரும் போது இடைப்பட்ட காலத்தில் எழுந்த விவாதங்கள், முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்,புதிய ஆதாரங்கள் குறித்து தன் நிலைப்பாட்டினை நூலில் பொருத்தமான பகுதிகளில் சேர்க்கலாம்,அல்லது தனியாக நூலின் இறுதியில் குறிப்பிடலாம்.(1)

குமார் இவ்வாறு செய்துள்ளாரா என்று எனக்குத் தெரியாது.ஆனால் ஜெயமோகன் நூலாக வெளியான ஆய்வேட்டில் உள்ளதைப் பற்றி எழுதியுள்ளதன் அடிப்படையில் நூலிற்கும், ஆய்வேட்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை என்றே கருதத்தோன்றுகிறது. மேலும் ஜெயமோகன் எழுதுகிறார்

‘தமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது. அப்படி ஒரு நிராகரிப்புக்கு இடமில்லை என்று நான் சொல்லவில்லை. அது நவீனத்துவ அழகியலின் கோணம் என்ற முறையில் முக்கியமானதும், தவிர்க்க முடியாததும்தான். ஆனால் ஜெயகாந்தனை ஆக்கிய அழகியல், அரசியல் கூறுகளை கணக்கில் கொண்டபிறகு அந்த நிரகாரிப்பை நிகழ்த்தியிருந்தால் அது சிறப்பான விமரிசனமாக இருந்திருக்கும். ‘

இவற்றின் அடிப்படையில் பார்த்தால் அவரது முனைவர் பட்டய ஆய்வேடு குறைகள் மிக்கது, இன்னொருவர் கருத்துக்களையே ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட பிழையான பார்வையை முன்வைக்கும் ஆய்வு அது. எனவே அது சிறப்பான, காத்திரமான ஆய்வேடு அல்ல என்ற முடிபிற்கே நாம் வரவேண்டியுள்ளது.நூலில் குமார் தன் பட்ட ஆய்வேட்டில் உள்ள கருத்துக்களை கடந்து வந்துவிட்டேன் என்று குறிப்பிட்டு,தன் தற்போதைய நிலைப்பாடுகள் என்ன என்பதை எழுதியுள்ளாரா என்று எனக்குத் தெரியாது.அது குறித்து ஜெயமோகன் ஒன்றும் குறிப்பிடாத போது அப்படி ஏதும் இல்லை என்றே நான் அனுமானிக்கிறேன்.மேலும் இந்த முடிபுகளை ஜெயமோகன் எழுதியதின் அடிப்படையிலேயே நான் முன்வைக்கிறேன். ஜெயமோகன் எழுதியுள்ளது அவருக்கு உடன்படான ஒன்றா ?அதிலிருந்து நான் முன்வைக்கும் முடிபுகள் பற்றி அவர் என்ன கருதுகிறார்.

ஒரு ஆய்வாளனுக்கு முனவைர் பட்ட ஏடு முக்கியமானது.அது அவனது முக்கியமான பங்களிப்பிற்க்கு ஒரு சான்று.அறிவுத்துறையில் உள்ள ஒருவரது முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீது சந்தேகம் எழுப்படுமானால் அது குறித்து ஆய்வாளர் பதில் தர மறுக்க முடியாது.அதுவும் ஒரு ஆய்வாளரின் அறிவார்ந்த நேர்மை மீது சந்தேகம் எழுப்பும் வகையில் இன்னொருவர் எழுதினால் அதை ஆய்வாளர் எதிர் கொண்டேயாக வேண்டும். மேலும் தன்னுடைய அசலான, தனித்துவ மிக்க கருத்துக்கள்/பார்வைகள் கொண்ட பங்களிப்பு என்றுதான் தன் ஆய்வேடு கருதப்பட வேண்டும் என்றே ஒரு ஆய்வாளன் விரும்புவார்.அப்படியிருக்கையில் ஜெயமோகன் எழுதியுள்ளவை சில கேள்விகளை எழுப்பபியுள்ளன. வாசகர் எழுதியுள்ள கடிதமும் அவர் நடுநிலையில் நின்று ஆய்வு செய்யவில்லை, மாறாக பிறர் ஆணைகளின் அடிப்படையில் முடிபுகளை முன்வைத்தார் என்று கூறுகிறது. மேலும் ஒரு நேர்மையான ஆய்வாளர் இலக்கிய அரசியலுக்கு அப்பாற்பட்டு தன் ஆய்வுகளைச் செய்ய வேண்டும், ஒரு பக்க சார்பாக , ஏற்கனவே உள்ள முன்முடிபுகளை, பிறர் கருத்தினை நிலைநாட்ட,அதன் பிரதிபலிப்பாக தன் ஆய்வினை மாற்றக் கூடாது.அப்படி செய்தால் அதில் அவரது அசலான பங்களிப்பு இல்லை அல்லது அத்தகைய பங்களிப்பு குறைவு என்றே கூறலாம்.

எனவே இலக்கிய அரசியலில் உள்ள ஒரு குறிப்பிட்ட கருத்தினை நிலைநிறுத்த பாரபட்சமான முறையில் ஆய்வினை பயன்படுத்துவது தார்மீக ரீதியில் சரியான செயலா என்ற கேள்வி எழுகிறது. அது சரியல்ல என்பதை ஒருவர் ஒப்புக்கொண்டால் குறைந்த பட்சம் ஒரு பகிரங்க மன்னிப்பை அவர் கோருவதே சரியாகும், குறிப்பாக சம்பந்தப்பட்ட படைப்பாளியிடம்.

தன் ஆய்வேடு குறித்தும், ஜெயமோகன் எழுதியவை போன்ற விமர்சனங்கள் குறித்தும் குமார் முன்பு எழுதியுள்ளாரா , இல்லையா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் திண்ணையில் விவாதம் எழும்போது அவர் விளக்கம் தருவது தவிர்க்க இயலாதது. தன் மீதான இந்தக் கருத்துக்களுக்கு, ஜயமோகன்,சண்முகம் எழுதியவை குறித்து ஏன் எதுவும் எழுதவில்லை.அதே சமயம் அவர் அரவிந்தன் கட்டுரை குறித்து கடிதங்கள் பகுதியில் எழுதியுள்ளார் என்பதை வாசகர் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.அதில் அவர் எழுதியது

‘அரவிந்தன் எழுதிய ஜெயகாந்தன் விமரிசனத்துமேலான விவாதங்கள் என் கவனத்துக்கு வந்தன. அக்கட்டுரை என்னுடைய ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்டது. ஆனால் என் பெயர் சொல்லப்படவில்லை. டால்ஸ்டாயைப்பற்றிய வரி ஜெயமோகனின் நாவல் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது அதுவும் பெயர்சுட்டப்படவில்லை .என் கருத்துக்கள் சற்று கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன. நான் ஜெயகாந்தனின் முக்கியத்துவத்தை மறுததவனல்ல. அவரது கருத்தியல் தாக்கத்தை ஏற்றுக் கொண்டவன் தான் தமிழின் சிகர சாதனையாளனாக நான் அக்ருதும் புதுமைப்பித்தனுடந்தான் ஜெயகாந்தனை ஒப்பிட்டிருக்கிறேன். ஜெயகாந்தனின் முக்கியமான படைப்புகளை ஒன்றுவிடாமல் சொல்லியிருக்கிறேன். விமரிசிக்கவே தகுதி இல்லாதவர் என்ற அசட்டுவரியெல்லாம் நான் எழுதவில்லை எம் வேதசகாயகுமார் ‘

அரவிந்தன் எழுதியுள்ளது திண்ணையில் விவாதிக்கப்பட்டுள்ளது, ஜெயமோகனும் ஜெயாகாந்தனின் எழுத்துக்கள் குறித்து எழுதியுள்ளார். குமார் தன் தரப்பு கருத்தை முன்வைத்துள்ளார்.அரவிந்தன் கருத்துக்களுக்கு தன் நூல் ஆதாரம் என்கிறார்.

ஜெயமோகன் எழுதியது

தமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது. அப்படி ஒரு நிராகரிப்புக்கு இடமில்லை என்று நான் சொல்லவில்லை. அது நவீனத்துவ அழகியலின் கோணம் என்ற முறையில் முக்கியமானதும், தவிர்க்க முடியாததும்தான். ஆனால் ஜெயகாந்தனை ஆக்கிய அழகியல், அரசியல் கூறுகளை கணக்கில் கொண்டபிறகு அந்த நிரகாரிப்பை நிகழ்த்தியிருந்தால் அது சிறப்பான விமரிசனமாக இருந்திருக்கும்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு வாசகர்கள் சில முடிபுகளுக்கு வரமுடியும்.

இலக்கிய அரசியலில் side kick ஆக, சீடனாக,உப கிரகமாக இருப்பது ஒருவரது தெரிவு. நேற்று ஒருவரின் நிழலாக, இன்று இன்னொருவரின் நிழலாக ஒருவர் இருக்கலாம், பின் தொடரும் நிழலாகவும் இருக்கலாம்,எதிரொலியாகவும் இருக்கலாம்.இங்கு நான் நிழல் என்பதை யங்கிய உளவியல் கருத்தான shadow என்ற பொருளில் பயன்படுத்தவில்லை.சாதரணப் பொருளிலேயே பயன்படுத்துகிறேன்.ஆனால் ஒரு ஆய்வாளர் தன் ஆய்வுகளை இந்த அடிப்படையில் ,அதாவது, ,side kick ஆக, சீடனாக,ஒருவரின் நிழலாக,எதிரொலியாக, ஆய்வு செய்தால் அவரை ஆய்வாளர் என்று சொல்வது பொருத்தமாக இராது.

குமார் திண்ணையில் எழுதியது

‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ ‘ எனும் எனது ஆய்வு 1975 -80 கால அளவில் முதுபெரும் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு முனைவர் பட்டத்துக்காக நடத்தப்பட்டது.1980 ல் ஆய்வு முழுமைபட்ட போதிலும் 1991 ல் தான் கேரள பல்கலி கழகத்துக்கு சமர்ப்பிக்கபட்டது. 1992 ல் கேரள பல்கலைகழகம் இதற்கு முனைவர் பட்டம் அளித்தது.ஆய்வினை துவக்கும் போது ஓர் ஆய்வாளன் மனதில் சதாகாலமும் எரிந்து கொண்டிருக்கும் இலட்சிய வெறிக்கும் ஆய்வின் முடிவில் அவன் அடையும் நடைமுறை வெற்றிக்கும் இடையேயான இடைவெளியே இந்த தாமததுக்கு காரணம பல்கலை சார் ஆய்வுகளில் தர மதிப்பீடுகளுக்கு இடமில்லை என்ற கணிப்பு வலுவாக இருந்தது ,இருக்கிறது. இந்நிலையில் தர மதிப்பீட்டையே அடிப்படையாக கொண்ட என் ஆய்வை அனுமதித்து சுதந்திரமாக என் சிந்தனைகளை வளர்க்க அனுமதி தந்த பேராசிரியர் ஜேசுதாசன் என்றும் என் நன்றிக்கு உரியவர்.

http://www.thinnai.com/ar0610011.html

1991 ல் ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டு, கிட்டதட்ட 10 ஆண்டுகள் கழித்து அது நூலாக வெளிவந்துள்ளது. 2003 ல் திண்ணையில் ஜெயகாந்தன் படைப்புகள் குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது.இதில் ஒரு கடிதம் தவிர வேறேதையும் அவர் எழுதவில்லை.ஆனால் அவர் எழுதிய கட்டுரைகள் குறித்து நான் எதுவும் எழுதாத போதிலும் நான் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் குறித்து எழுதியதது குறித்து மட்டும் அவர் ஏன் எழுதுகிறார். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் குறித்து ஆராய்ந்தவர் இந்த விவாதத்தில் பங்கெடுத்து ஜெயமோகன்,அரவிந்தன் எழுதியவை குறித்த தன் கருத்துக்களை பதிவு செய்ய தயங்குகிறாரா ?.ஜெயமோகன் முன்வைத்துள்ள கருத்துக்களுடன் தான் ஒத்துப்போகும் இடங்கள், முரண்படும் இடங்கள், தன் தரப்புக் கருத்துக்கள் என அவர் விரிவாக எழுதியிருக்க வேண்டும். குமார் குறிப்பிடும் இந்த ‘தர மதிப்பீடு ‘ குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளதையும் வாசகர்கள் திண்ணையில் படித்திருப்பார்கள்.பூண்ி.அம்ச்றூழூீத்ஊண்ீந்ுவ்ி டூத்ஞ்ிச்ுந்ச்ிச்வ்ண்ீவ் ம்ஈம் சூத்ித என்று ஜெயமோகன் குமாரின் வடிவ ஆய்வை வர்ணிக்கிறார் என்பதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

எனவே தன் தரப்பு வாதங்களை,நியாயங்களை முன்வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.அவர் அவ்வாறு செய்யாத போது, வாசகர்கள் நான் எழுப்பியுள்ள கேள்விகளின் அடிப்படையில் சில முடிபுகளுக்கு வர முடியும்.

(1) hardcover பதிப்பு வெளியிடப்பட்ட சில ஆண்டுகள் கழித்து paperback பதிப்பு வெளியாகும் போது பிண்இணைப்பாக இடைப்பட்ட காலத்து நிகழ்வுகள்,மாற்றங்கள் குறித்து தன் கருத்தினைத் தெரிவித்தும், தகவல்களை update செய்தும் எழுதுவது உண்டு. உதாரணமாக சிவ வைத்தியனாதன் எழுதிய நூல் 2001 NewYork University Press வெளியீடாக hardcover பதிப்பாக வெளியானது.அதே பதிப்பகம் 2003 ல் அதை paperback பதிப்பாக வெளியிட்டது.இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள், தீர்ப்புகள்,விவாதங்கள் போன்றவற்றை தொகுத்து தன் கருத்துக்களுடன் ஒரு பின்னுரை எழுதியுள்ளார் சிவ வைத்தியனாதன்.இது வாசகனுக்கும், ஆய்வாளனுக்கும் பயன் தரும்.தான் இந்த இரண்டு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைப்பட்டியலை மட்டும் அவர் கொடுத்திருக்கலாம்.ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்ல்லை. அந்நூலை நான் hardcover பதிப்பில் படித்திருக்கிறேன்.அதற்குப் பின் அவர் எழுதிய கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். அந்தப் பின்னுரை சிறப்பாக இருந்தது. 5 அல்லது 6 ஆண்டுகள் ஒரு ஆய்வினைக் செய்துவிட்டு, பின் சில பத்தாண்டுகள் .அரைத்த மாவையே அரைப்பது போல் பல கட்டுரைகளை எழுதுபவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கமுடியும், அவர்களிடமிருந்து புதிதாய் என்ன தெரிந்து கொள்ள முடியும்.

ravisrinivas@rediffmail.com

Series Navigation