நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

கிராமியன்



‘நான்கடவுள்’ – தமிழ்த் திரைப்பட வரலாற்றில் μர் அற்புத நிகழ்வு.
விளிம்புநிலை மனிதர்களைப் பாத்திரங்களாக அடையாளங்காட்டி
வெகுஜனப்படங்களில் விசித்திர வெற்றி காட்டி வந்துள்ள பாலாவின்
‘நான்கடவுள்’ – சுடலைமாடன் மோட்சம் வழ்¢யாகப் ‘புதிய
நம்பிக்கை’யாகத் தமிழில் அறிமுகமாகி ஏழாம் உலகம் சுட்டிய
ஜெயமோகனின் இணைவுடன் பல பரிமாணங்கள் கொண்டதாக படம்
நிகழ்கிறது.
காட்சிப்புலத்தில்விரியும் ‘நான்கடவுள்’விவரிப்பதாகநான்கருதும்
கருத்துப்புலம் குறித்தே இக்கட்டுஉரை அன்பே சிவமா? அறிவே
சிவமா? நன்மை அறிந்து முக்தி அளிப்பதும் தீமை அறிந்து அழிப்பதும்
மட்டுமேசுடலையாண்டி,ருத்ரனாகவெளிப்படுகிறான்.
கட + வுள் ? உள்ளம் கடந்த நிலை. கடவுள் தனித்த பொருளன்று.
உணர்வபனின் உள்ளம் கடந்த நிலை. அகோரி – உள்ளங்கடந்த
(பிரத்யட்ச வாழ்கைகைக்குத் தேவையான மனம் – உள்ளம்)
நிலையிருப்பவன். கோரக்க மூலி என்பதற்குக் ‘கஞ்சா’ என விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி. உணவு, கலாச்சார அறநெறிகளை மீறியதுஉள்ளங்கடந்தநிலை.
சைவமென்றால் இரங்குதல், அனுதாபம் காட்டல், மனிதாபிமானம்
எனப்பிச்சைப்பாத்திரம்ஏற்கும்மனநிலையில்சைவம்நிற்பதைக்காட்டி
சினந்து மனிதர்கள் உருப்படிகளாக பண்டமிடும் போது அந்நியப்பட்டு சரக்காக கையாளப்படுவது, உற்பத்தி, நுகர்வு அடிப்படையில் அகப்பட்டுக் கொண்ட மனிதர்களின் பொருளியல் வலைக்குள் சிக்கும் விளிம்புநிலை மனிதர்களும் பண்டமாக, உருப்படிகளாக மாறுவதைச் சுட்டிஅந்தப் பொருளியல் அடிப்படையில் ஆகும்நீதிபரிபாலனம்,காவல் ஆகியவை இப்பண்டநுகர்வு மற்றும் மதிப்பீடுகளுக்கு வெளியே நிற்கும்
அகோரியைக் கண்டு மிரளுவதை அழகாக வெளிப்படுத்தும் நிகழ்வு
தமிழ்ப்படஉலகின்புதியபரிமாணக்கதையாடல்.

திரைப்படம் எனும் வணிகச் சந்தையில் இப்படம் பண்டமாவதால்
நிகழும்,வணிகம்நீதிபரிபாலனம்,காவல்ஆகியவைபுனைவுக்கதைக்கு
வெளியேநிகழ்பவை.
ஹம்சவள்ளி, ரயிலில் பாடிக்கொண்டு பிச்சையெடுக்கும்
கண்ணில்லாப் பாத்திரம். அன்பை வலியுறுத்திப் பாடிக் கொண்டு வந்த கிறிஸ்துவமும், பிச்சை பாத்திரங்களாக மனித மனங்களை மாற்றுவதாக இருந்தாலும், பெண்ணுரிமை,இசை, திரைப்படப்பரவல், போக்குவரத்துப் பெருக்கம் இவற்றோடு வந்து ஏற்கனவே நிலவிய மனிதாபிமானச் சைவத்தால் உட்கிரகிக்கப்பட்டு ஆணாதிக்கம், ஜாதி ஆதிக்கம்
போன்றவற்றால் அழிந்த தன்மையை அப்பாத்திரத்தின் முக்தியில்
சுட்டுவது உருவகமான பார்வையில்வெளிப்படுகிறது.

புனைகதையாக உருவாக்கபப்ட்டுள்ள இத்திரைபப்டத்தில் காலம்
சுட்டுதல்,இடம்சுட்டுதல்ஆகியனதேடிஅலைக்கழிவதைவிட
‘அகம்பிரம்மாஅஸ்மி’ எனத் தன் உள்ளம் கடந்த நிலை உணர்ந்து உலகம் படைத்தல் உணர்த்தப்படுகிறது.நான் சத்தியமும், வழியும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னும் ஏசுபிரானின்வாசகம்,
நானே தொடக்கம் – நானே முடிவு, நானுரைப்பதுதான் நாட்டின்
சட்டம்என்றுகண்ணணின்குரலாககண்ணதாசன்பாடியது,
நான்யார்?எனதேடிய ரமணரின்கேள்வி, சுயம் உணர்தல் என்னும்ஜெ.கிருஷ்ணமூர்த்தியின்சிந்தனை,புத்த
சமணச் சிந்தைனைள், விவேகானந்தர், பெரியார் ஆகியோரின்
சிந்தனைகளாடும் ஒன்றிபோவதை எண்ணிப்பார்த்துரசிக்கலாம்.
நான் கடவுள் (SYMPATHY Vs EMPATHY) உடல் வேறுபாட்டு
அடையாளங்களே ( நெட்டை Xகுட்டை ) ( கருப்பு X சிவப்பு) (ஆண் X பெண் ) ஏற்றத் தாழ்வுகளாக பின்னிக்கிடக்கும் பிரத்தியட்ச வாழ்கையில்பண்டமாகிப்போனவர்கள்தன்னைஅறிவார்களாக.

ஓம்ஜெயபாலமோகனருத்ராஜி?

Series Navigation

கிராமியன்

கிராமியன்