காஷ்மீர் புலாவ்

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue


தேவையான பொருட்கள்

2 கோப்பை பாஸ்மதி அரிசி

2 கோப்பை பால்

1/2 கோப்பை கிரீம் (அல்லது சுண்டவைத்த பால்)

1 தேக்கரண்டி சர்க்கரை

உப்பு தேவையான அளவு

1/2 தேக்கரண்டி ஜீரகம்

3 கிராம்பு

1 பட்டை

3 ஏலக்காய்கள்

1 பிரியாணி இலை

2 மேஜைக்கரண்டி நெய்

1 கோப்பை வெட்டிய பழங்கள் (காய்ந்த திராட்சை, செர்ரிப்பழங்கள், முந்திரிப்பருப்பு, ஆப்பிள் துண்டுகள், அன்னாசிப்பழத்துண்டுகள், மாம்பழத்துண்டுகள் போன்றவைகளில் இருப்பவற்றை போட்டுக்கொள்ளலாம்)

2 அல்லது 3 சாப்பிடக்கூடிய ரோஜா இதழ்கள்

செய்முறை

அரிசியைக்கழுவி 15 அல்லது 20 நிமிடம் ஊறவைக்கவும்.

பால், கிரீம், சர்க்கரை, உப்பு போன்றவற்றைக் கலந்து கொள்ளவும்.

அரிசியை இறுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.

நெய்யை தனியே ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும். இத்துடன் ஜீரகம், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும்.

இத்துடன் அரிசியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும். இத்துடன் பால், கிரீம், சர்க்கரை கலவையை சேர்த்து 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும், மூடி, மெதுவான தீயில் அரிசி வேகும்வரை விடவும்.

ஒவ்வொரு அரிசியும் சாதமாக வெந்திருக்கவேண்டும், ஆனால் தனித்தனியாக இருக்க வேண்டும். இத்துடன் பழக்கூட்டை சேர்த்து மெதுவாக பிறட்டவும். இதன் மீது ரோஜா இதழ்களை தெளித்து பறிமாறவும்.

**

4 பேருக்கு, செய்யும் நேரம் 45 நிமிஷங்கள்

Series Navigation