தேவையான பொருட்கள்
3 நடுத்தர உருளைக்கிழங்குகள்
1 கேரட்
10 வெண்டைக்காய்
10 பீன்ஸ்
5 அவரைக்காய்கள்
3 சிறிய கத்திரிக்காய்கள்
1 சிறிய துண்டு கருணைக்கிழங்கு
1 மேஜைக்கரண்டி கொத்துமல்லி இலைகள் வெட்டியது
1 தேக்கரண்டி பொதினா இலைகள்
1 தேக்கரண்டி இஞ்சி தூளாக நறுக்கியது
5-6 பச்சை மிளகாய்
1 காம்பு கறிவேப்பிலை
1 மேஜைக்கரண்டி புளித்தண்ணீர்
1/2 தேக்கரண்டி வெந்தயம்
1 தேக்கரண்டி ஜீரகம்
1 1/2 மேஜைக்கரண்டி கோதுமை அல்லது கடலை மாவு
1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
மிகச்சிறிதளவு பெருங்காயத்தூள்
1 1/2 தேக்கரண்டி சர்க்கரை
2 மேஜைக்கரண்டி எண்ணெய்
உப்பு ருசிக்கேற்றபடி
செய்முறை
உருளைக்கிழங்குகளை கழுவி சிறிய துண்டுகளாக தோலோடு வெட்டிக்கொள்ளவும்.
கேரட்டை நீள்வாக்கில் வெட்டிக்கொண்டு 2 இஞ்ச் தடிமனுக்கு வெட்டிக்கொள்ளவும். வெண்டைக்காயின் காம்புகளை வெட்டிக்கொள்ளவும்.
கத்தரிக்காயை நீள்வாக்கில் வெட்டிக்கொள்ளவும். கருணைக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 3 பச்சை மிளகாய்களை தூளாக வெட்டிக்கொள்ளவும். உருளைக்கிழங்கையும் கருணைக்கிழங்கையும் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும். பீன்ஸ்களையும் அவரைக்காய்களையும் இரண்டு இஞ்ச் அளவுக்கு வெட்டிக்கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து, ஜீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு வெடிக்க விடவும். இத்தோடு வெட்டிய பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு கலக்கவும். இத்துடன் கடலைமாவு சேர்த்து வேகமாக கலக்கவும். வேண்டுமெனில் இன்னொரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம். மணம் வரும்போது, மிளகாய்த்தூள், மஞ்சள் சேர்க்கவும். 6 கோப்பை வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்கவும். மாவு தண்ணீரோடு முழுக்க கரையும்வரை கலக்கி கொதி வர விடவும். இத்துடன் எல்லா காய்கறிகளையும், உருளைக்கிழங்கு கருணைக்கிழங்குகளையும் சேர்க்கவும். 10 நிமிடம் மெதுவான தீயில் வேகவிடவும். இத்துடன் சர்க்கரை, உப்பு, புளித்தண்ணீர், முழு பச்சை மிளகாய்கள் போன்றவற்றைச் சேர்க்கவும். இது நன்றாக பருப்பு பதம் வரும் வரை வேகவிடவும். இதனை மேலாக புதினாவும் கொத்துமல்லியும் போட்டு இறக்கவும்.
இதனை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்
6-7 ஆட்களுக்கு, நேரம் 1 மணி நேரம்
- புராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்
- எட்டாத தொலைவு
- பனி
- குழவிக் கூடு குவலயம்..
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை
- காஷ்மீர் புலாவ்
- சிந்தி காய்கறி கூட்டு
- கண்ணுக்குள் உடலின் கடிகாரம்
- பாஞ்சாலி ராஜ்யம்
- தேடுகிறேன் தேவதையே !
- விளையாட்டுப் பொம்மை
- மீட்டிங்…
- கொடியேற்றம்
- முகங்கள்
- குளிர்! குளிர்! குளிர்!
- எதற்கும் தயாராகி நிற்போம்!
- தெளிவு
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)
- பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை
- குரு தட்சிணை