ஷேப்டு சாலன்

This entry is part of 25 in the series 20010924_Issue


சிக்கன் –1/2கிலோ

தேங்காய் –1/2மூடி

மிளகாய்த்தூள் –2டாஸ்பூன்

மிளகுத்தூள் –2டாஸ்பூன்

மஞ்சள்தூள் –1/2டாஸ்பூன்

கார்ன் ஃப்ளார் –1டேபிள் ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் –1/2டாஸ்பூன்

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்யவும்.

தேங்காயைத் துருவி பாலெடுத்து கார்ன் ஃப்ளார் சேர்த்து கரைத்து வைக்கவும்.

சிக்கன் துண்டுகளில் மிளகுத்தூள், காரத்தூள், மஞ்சள் தூள் பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் தேவையான அளவு விட்டு, காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து, (எண்ணெய் அதிகமாக இருந்தால் வடித்து எடுத்துவிடவும்) இதில் கார்ன் ஃப்ளார் கரைத்த தேங்காய்ப்பால், கரம்மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி வேக வைக்கவும்.

இளந்தீயில் பதினைந்து நிமிட நேரம் வேகவைத்து இறக்கவும். ஷேப்டு சாலன் எனப்படும் இந்த குழம்பு வகை வித்தியாச ருசியுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Series Navigation