புற்று நோய்க்கு எதிராக வயாகரா

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

துக்காராம் கோபால்ராவ்


ஸிடனா·பில் போன்ற வீரியகுறைவுக்கு மருந்தாக இருக்கும் பொருட்கள் ரத்த குழாய்களை விரிக்கும் ஒரு வேதிப்பொருளை உற்பத்தி செய்ய தூண்டி ஆண்மைக்குறைவுக்கு மாற்றாக இருக்கின்றன. அதே பொருட்கள் இன்று புற்றுநோய் செல்களை மனிதரின் நோயெதிர்ப்பு அமைப்பு அடையாளம் காணவும், அந்த புற்றுநோய் செல்களை தாக்கவும் உதவுகின்றன என்பதை ஜான் ஹாப்கின்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.

எலிகளில் கோலன் மற்றும் மார்பகப்புற்றுநோய் கட்டிகளை உருவாக்கி அந்த எலிகளுக்கு ஸிடனாபில் கொடுத்தால், அந்த எலிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு இந்த புற்றுநோய் கட்டிகள் குறைந்துவிட்டன (ஸிடனாபில் கொடுக்காத எலிகளை ஒப்பிடும்போது) என்று கண்டறிந்துள்ளார்கள். நோயெதிர்ப்பு நீக்கப்பட்ட எலிகளில் ஸிடனாபில் கொடுப்பது புற்றுநோய் கட்டிகளை குறைக்கவில்லை. இதன் மூலம் ஸிடனாபில் கொடுப்பது நோயெதிர்ப்பு உடலமைப்புக்கு உதவி செய்கிறது என்பதை அறிந்துள்ளார்கள்.

பரிசோதனை மருத்துவத்துக்கான நவம்பர் 27ஆம் தேதியிட்ட இதழில் இந்த அறிக்கை பிரசுரமாகியுள்ளது. நம் உடலில் இருக்கும் சில விசேட செல்கள் நோயெதிர்ப்பு மூலக்கூறுகளை புற்றுநோய் செல்களுக்கு போகாமல் தடுக்கின்றன். ஸிடெனாபில் உருவாக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு அப்படிப்பட்ட விசேட செல்களது வீரியத்தை குறைத்து நோயெதிர்ப்பு மூலக்கூறுகள் புற்றுநோய் செல்களை தாக்க உதவுகின்றன. புற்றுநோய் செல்களை தாக்கும் டி-செல்களை புற்றுநோய் கட்டிகள் இருக்கும் இடங்களுக்கு அனுப்புகின்றன.

பரிசோதனை குழாயில் உருவாக்கப்பட்ட புற்றுநோய் செல்களில் ஸிடனா·பில் சேர்த்தாலும் இதே விஷயம் நடப்பது தெரிகிறது.

ஸிடனெ·பில் வயாகரா என்ற பெயரில் சந்தையில் விற்கப்படுகிறது. இது ஆண்மை குறைவுக்காக விற்பனை செய்யப்படுகிறது. இது நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தி செய்வதையும், அது ரத்தத்திலும் ரத்த பொருட்களிலும் நடத்தும் மாறுதல்களை சமீபகாலமாக பரிசோதனைச் சாலைகள் ஆராய்ச்சி செய்துவருகின்றன.

புற்றுநோய் செல்கள் தங்களை டி-செல்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக பல உபாயங்களை கடைபிடிக்கின்றன. உடலில் இருக்கும் சில அமைப்புகளையே தனக்கு சாதகமாக பயன்படுத்துகொள்கின்றன.

நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் டி-செல்களையே உபயோகித்து அதனை ஒரு புகைபோல வைத்து தங்களை மறைத்துக்கொள்கின்றன என்று கண்டறிந்துள்ளார்கள்.

myeloid-derived suppressor cells (MDSCs), என்னும் இந்த செல்கள் நைட்ரிக் ஆக்ஸைடைக்கொண்டு ஒரு தாக்குதல் நடந்ததும் அந்த டி செல்களை வேலை நிறுத்தம் செய்ய வைக்க உபயோக்கின்றன.

ஆண்மைக்குறைவு மருந்துகள் இந்த வழிமுறையை திருப்புகின்றன. myeloid-derived suppressor cells (MDSCs), செல்கள் உற்பத்தி செய்யும் நைட்ரிக் ஆக்சைடை குறைத்து டி செல்கள் புற்றுநோய் செல்களை பார்ககவும் அவற்றை தாக்கவும் அனுமதிக்கின்றன. என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்மைக்குறைவு மருந்துகள் புற்றுநோயை குணப்படுத்தாது. ஆனால், மற்ற கீமோதெரபி மற்றும் இம்மியூனோ தெரபி மருந்துகளோடு கூட உபயோகப்படுத்த கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த வருடம் மனித உடலில் இந்த மருந்தினைக்கொண்டு பரிசோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Johns Hopkins
http://www.hopkinsmedicine.org/

Series Navigation

துக்காராம் கோபால்ராவ்

துக்காராம் கோபால்ராவ்