பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

நிக்கலஸ் வேட்

மனித ஜீன் ஆராய்ச்சி குறிப்பிடுவதுபோல, மனித மனமும், உடலும் சில ஜீன்களால் உருவாக்கப்பட்டிருந்தால், உயிர்தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்காலத்தில் இவை இரண்டையும் மாற்றக்கூடிய வலிமையோடு, சரியாக வார்க்கப்படாத மனிதக்களிமண்ணை சரிப்படுத்தும் முயற்சியில் மனித இயற்கையையே மாற்றுவார்கள்.

அப்படிப்பட்ட எதிர்காலம், பல மக்களை கவலைகொள்ளச் செய்ய வேண்டும். அரசியல் சிந்தனையாளரான ஃப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் பார்வையில், ‘மனிதத் தேவைகளுக்கு எந்த சமூகம் சிறப்பாக பொருந்திவரும் ? ‘ என்ற வரலாற்றின் மையக்கேள்விக்கு, மனித இயற்கையை அதன் குறைபாடுகளையும் சேர்த்து ஒப்புக் கொண்டால் தான் தீர்வு நோக்கி நகர முடியும்.

வாஷிங்டனின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இப்போது இருக்கும் டாக்டர் ஃபுகுயாமா, பெர்லின் சுவர் விழுந்து சில வருடங்கள் கழித்து 1992இல் வெளிவந்த தன்னுடைய ‘வரலாற்றின் முடிவும், இறுதி மனிதனும் ‘ என்ற புத்தகம் காரணமாகப் பரவலாகப் பேசப்பட்டவர். அந்தப் புத்தகத்தில், கம்யூனிஸம் அழிந்ததும், அகில உலகத்திலும் எதிர்ப்பு இல்லாத சிறந்த அரசியலமைப்பாக ‘தாராளவாத ஜனநாயகம் ‘ முன்னுக்கு வந்துவிட்டது என்று வாதிட்டார். இந்தப் புத்தகத்துக்கு இருந்த பல எதிர்ப்பாளர்களில், ‘உலகத்தின் பெரும் கலாச்சார குழுக்களுக்கிடையே நடக்கும் போர்கள், பின்-கம்யூனிஸ உலகத்தில் முக்கியமானதாக இருக்கும் ‘ என்று வாதிட்ட ஹார்வர்டைச் சேர்ந்த சாமுவல் ஹண்டிங்டன்-அவர்களும் அடக்கம்.

செம்டம்பர் 11- தாக்குதல்களுக்குப் பிறகும், டாக்டர் ஃபுகுயாமா அவர்கள் தன்னுடைய விமர்சகர்களுக்கு மிகச்சிறிதளவே இடம் அளித்தார். மற்றவர்களது விமர்சனத்தில் அவர் ஒப்புக்கொண்டது ஒரே ஒரு விஷயம் தான். அது, ‘அறிவியலின் முடிவுதான் வரலாற்றின் முடிவும். அதாவது மனித குணத்தை மாற்றக்கூடிய அறிவியல் ‘ என்பதுதான் அது. தன்னுடைய புதிய புத்தகமான ‘நமது பின்-மனித எதிர்காலம் (Our Posthuman Future) ‘ இல், எவ்வாறு பயோடெக்னாலஜி என்னும் உயிர்தொழில்நுட்பம் நமது மனித அடிப்படையையே மாற்றும் வழிகளைக் கொண்டிருக்கிறது என்று ஆராய்கிறார். வரலாற்றை திரும்ப நிகழ்த்துவதற்கு எந்தவிதமான ஆர்வமும் ஃபுகுயாமாவிடம் இல்லை. பின்மனித எதிர்காலத்தை நாம் தவிர்க்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.

செயல்தளத்திற்கு மிகவும் அருகில் உள்ளவர்கள் ( அதாவது அறிவியலாளர்களும், உயிர்-ஒழுக்கவியலாளர்களும் bioethicists ), இவருடைய பார்வையில், ஆபத்தை விளக்க இயலாதவர்களாக இருப்பதால், ஆபத்து இன்னும் அதிகம் என்று கூறுகிறார். அறிவியலாளர்கள் இயற்கையை வெற்றிகொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். உயிர்-ஒழுக்கவியலாளர்களோ ‘அறிவியலாளர் சமூகம் செய்ய விரும்புவதை நியாயப்படுத்த அறிவியலாளர்கள் வைத்திருக்கும் படித்த கும்பல் ‘ என்று கூறுகிறார். இவரது குரல் வெறும் பல்கலைக்கழகத்துக்குள்ளிருந்து வரும் வார்த்தை அல்ல. வெள்ளை மாளிகை அங்கீகரித்திருக்கும் உயிர்-ஒழுக்கவியலாளர் குழுமத்தில் இவர் உறுப்பினராக இருக்கிறார்.

இவரது பார்வையில், மனித மரபணுவில் மரபணு தொழில்நுட்பம் செய்வதும், விந்துவிலும் முட்டையிலும் நிரந்தர மரபணு மாறுதல்களைச் செய்வதும், மனித இயற்கைக்கு நேரடி பயமுறுத்தலாக வருகிறது என்று கூறுகிறார். மனித மனத்தை மாற்றும் மருந்துகள் பரவலாக மக்களால் உண்ணப்பட்டால், சமூகத்தை வெகுவாக மாற்றிவிடும் என்றும் கருதுகிறார். சீசரோ நெப்பொலியனோ அவ்வப்போது ப்ரோஸாக்( மனதின் அலைபாய்தலைத் தடுத்து சமனப் படுத்தும் மருந்து – மொ பெ) சாப்பிடவாய்ப்பிருந்தால், அவர்கள் ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் தேவையை உணர்ந்திருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறி என்றும் கூறுகிறார்.

மனித வாழும்நாள் பெருமளவு அதிகரிப்பதும், சமூகத்தை தீவிரமாறுதல்களுக்கு உட்படுத்தும் என்று கருதுகிறார். ‘வாழ்நாள் அதிகரிப்பது வயதானவர்களை மதிக்கும் சமூக நிலைமைகளை தீவிரமாகப் பாதிக்கும். ‘ வயதான சர்வாதிகாரிகள் இருக்கும் தேசங்களிலும், மற்ற சமூகங்களிலும் புதுக்கண்டுபிடிப்புகளையும் வராமல் தடுத்து சமூக மாற்றங்களை தள்ளிப்போடும் என்று கருதுகிறார்.

மனித இயற்கையில் இருக்கும் முரணான குணங்களில் இருக்கும் சிறப்பான சமநிலையை, மரபணு தொழில்நுட்பம், தெரிந்தோ தெரியாமலோ மாற்றிவிடலாம். இது மனித சமூகங்களின் சமநிலைக்கே மிகவும் தீவிரமான ஆபத்து.

‘நீதி, ஒழுக்கம், நல்ல வாழ்க்கை பற்றிய நமது சிந்தனைகளுக்கு மிகவும் அடிப்படையாக இருப்பது நம் மனித இயற்கையே ‘ என்று டாக்டர் ஃபுகுயாமா வாதிக்கிறார்.

மக்கள் விரும்பும் குணங்களான வலிமையான உடல், தீட்டப்பட்ட புத்திசாலித்தனம் போன்றவைகளுக்காக மனித மரபணுவில் மாறுதல்களைச் செய்வது என்பது, ‘நம் மனித இயற்கையையே, நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் என்ற நம் உணர்வில் அடிக்கோடு இட்டிருக்கும் அடிப்படை குணாம்சத்தையே மாற்றிவிட காரணமாகலாம் ‘. அறிவியலுக்கு பல விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஆனால் டாக்டர் ஃபுகுயாமாவின் எச்சரிக்கைகள் வரும் திசை வேறானது. அவரது தகப்பனார், யோஷியோ ஒரு ஜப்பானிய வம்சாவளி அமெரிக்கர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ஜப்பானியர்கள் சிறைப்படுத்தப்பட்டபோது சிறைப்படாதவர். பிரான்ஸிஸ் நியூயார்க்கில் ஜப்பானிய கலாச்சாரத்துக்கு தொடர்பின்றி வளர்ந்தவர். கோர்னல் பல்கலைக்கழகத்தில் செவ்வியல் இலக்கியங்களையும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலையும் படித்தவர்.

சோவியத் ஆராய்ச்சியாளராக ராண்ட் கார்பரேஷனில் பணியாற்றிவிட்டு, பிறகு அமெரிக்க உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்திருக்கிறார்.

சோவியத் ஜனாதிபதியான மிகயீல் கோர்பச்சேவ் அவர்களது ஒரு பேச்சை கேட்டபோது டாக்டர் ஃபுகுயாமாவுக்கு தன்னுடைய முதலாவது புத்தகத்தை எழுத கரு கிடைத்தது. 19ஆம் நூற்றாண்டு ஜெர்மன் தத்துவவியலாளரான ஹெகல் வரலாறு சட்டரீதியான அரசில் ( constitutional state) முடிவு பெறும் என்று கருதினார். இந்த சட்டரீதியான அரசுக்கு நவீன வார்த்தைகளில் தாராளவாத ஜனநாயகம் என சொல்லலாம். மார்க்ஸ், வரலாறு ரீதியான முடிவாக கம்யூனிஸ அரசை பார்த்தார். கோர்பசேவ் ஆச்சரியகரமாக தன்னுடைய பேச்சில், சோசலிஸத்தின் அடிப்படை குணாம்சம் போட்டி தான் என்று கூறுவதைக் கேட்டு, டாக்டர் புகுயாமா ஒரு நேர்காணலில், ‘என்னுடைய நண்பனைக் கூப்பிட்டுச் சொன்னேன். கோர்பச்சேவே இதை சொல்வதென்றால், இதுதான் வரலாற்றின் முடிவு. என்று சொன்னேன் ‘ அதாவது ஹெகலின் ஜோதிடம் மார்க்ஸின் ஜோதிடத்தை வென்றுவிட்டது.

என்னுடைய நண்பர்களை கொஞ்சம் சிரிக்கவைக்கலாம் என்பதுதான் நான் புத்தகம் எழுதியதன் நோக்கம் என்று கூறுகிறார் புகுயாமா. ஆனால், அவரது ‘வரலாற்றின் முடிவு ‘ புத்தகம், பின்-கம்யூனிஸ உலகத்துக்கு, மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும், ஆயிற்று.

வரலாறு வெறும் பொருளற்ற சுழற்சி அல்ல என்றும், நவீன அறிவியலின் பகுத்தறிவு அடிப்படை கொடுக்கும் திசை நோக்கி அது நகர்கிறது என்றும் அதில் வாதிடுகிறார். இது ‘அகில உலகப் பரிணாம திசையில், முதலாளித்துவ திசையில் நகர்கிறது ‘ என்று கூறுகிறார். அறிவியலும் தொழில்நுட்பமும் கொடுக்கும் வாய்ப்பினால், தேர்ச்சி பெற்ற தொழில் நுட்பம் கொண்ட தொழிற்சாலை மயமாக்கம், கட்டாயம் அரசியல் சுதந்திரத்துக்கு இட்டுச்செல்லும் எனக்கூற முடியாது என்றாலும், வரலாற்றின் அடிப்படை சக்தியாக ஹெகல் சொன்ன விஷயமான ‘தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்கவேண்டும் என்ற மனித ஆர்வம் ‘, தாராளவாத ஜனநாயகத்திலேயே நிறைவேறுகிறது என்று புகுயாமா கூறுகிறார்.

அவரை விமர்சிப்பவர்களுக்கு பதில் கூறுகையில், கலாச்சாரம் முக்கியமானதுதான், ஆனால், டாக்டர் ஹண்டிங்டன் கூறிய ஏழு கலாச்சார சமூகங்களுக்கு இடையே இருக்கும் அகழிகள் நிரந்தரமானவை என புகுயாமா கருதுவதில்லை. தாரளவாத ஜனநாயகம், மனிதர்களின் தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஒத்துப்போகிறபடியால் அகில உலக அளவில் பரந்து விரும்பப்படுகிறது. இது மேற்கு ஐரோப்பாவில்தான் பரிணமித்தது. ஆனால் இது ஐரோப்பிய சொத்து இல்லை. நவீன அறிவியலைப்போல எல்லோருக்கும் பொதுவானது.

‘மேற்கத்திய நவீனத்துவப் பங்களிப்பில் எல்லோரும் விரும்பும் வாழ்க்கைத்தரத்துக்கான வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது ‘ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். ‘அந்தப் பங்களிப்பு மொத்தமாக எல்லோருக்கும் வேண்டாம். அவர்களுக்கு வேலை வேண்டும். ஆனால் ஹாலிவுட் வேண்டாம். ஆனால் நவீனத்துவத்தில் ஒரு அடிப்படை கருத்தாக்கம் இருக்கிறது. உதாரணமாக, உங்களுக்கு டிவி வேண்டுமென்றால், சில நிறுவனங்கள் வேண்டும், சட்டரீதியான ஆட்சிமுறையும் சேர்த்துத்தான் ‘

மதமும் கலாச்சாரமும் நவீனத்துவத்துக்கு இடையூறாக வந்தாலும், இஸ்லாமிய மற்றும் இதர சமூகங்கள் அவர்களது பாணியில் ஒரு தாராளவாத ஜனநாயகத்தை அமைத்துக்கொள்ளாது எனக்கருத எந்த காரணமும் இல்லை என்று கூறுகிறார். ‘உலக அரசியலின் அடிப்படை அமைப்பு, மேற்கு முன்னெடுத்துச் சென்ற நவீனத்துவத்துக்கான தேரோட்டம்தான் ‘ என்று கூறுகிறார்.

‘வரலாற்றின் முடிவு ‘ புத்தகத்தில் இருக்கும் நல்ல எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, ‘நம் பின்-மனித எதிர்காலம் ‘ புத்தகத்தில் சுவடே காணாமல் கிடக்கிறது. விஞ்ஞானிகள் தம்மைக் கட்டுப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்றாலும், உயிர் தொழில் நுட்பத் தொழிலுடன் விஞ்ஞானிகள் கொண்டுள்ள உறவு ஆரோக்கியமானதாய் இல்லை என்கிறார். கடந்த 500 வருடங்களில் விஞ்ஞான வளர்ச்சி பொறுப்புடன் தான் செயல்பட்டது என்றாலும் தொடர்ந்து அதே போல் தெளிவு உயிரியல் தொழில் நுட்பத்தில் கிடைக்கப் பெறுவது சந்தேகமே என்று சொல்கிறார்.

மனிதர்களைப் பிரதி செய்யும் முறையை, ஆய்வைத் தடை செய்ய வேண்டும் என்பது அவர் கோரிக்கை. இது பல மோசமான உயிர்த்தொழில் நுட்பத்தின் திறவுகோலாகி, மரபணு முறையில் மனிதக் குணாம்சங்களை மாற்ற முயற்சிகள் நடக்கலாம் என்று கருதுகிறார். இவர் உயிரியல் ஆய்வின் ஒழுக்கம் பற்றிய அமெரிக்க அரசுக் குழுவில் அங்கம் வகித்தாலும், இது போன்ற குழுக்கள் இந்தப் பிரசினையைத் தீர்க்க வல்லது என்று நம்பவில்லை. இப்படிக் குழுக்களுக்குப் பதிலாகச் சட்டம் இயற்றுவதே சிறந்த வழி என்று கருதுகிறார்.

அடுத்த சில வருடங்களில் புகுயாமா எப்படி உயிர்தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவது என்பது பற்றி ஆய்வு செய்ய இருக்கிறார். இப்போது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் என்ற அமெரிக்க அரசுத் துறை இப்படிப்பட்ட விஷயங்களைஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அது போதாது என்கிறார்.

வரலாறு முடிந்திருக்கலாம், ஆனால் அதை முடிந்ததாகவே வைத்திருக்க பல முயற்சிகள் தேவை போலிருக்கிறது.

(நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து, ஏப்ரல் 2, 2002)

Series Navigation