இலக்கு

This entry is part of 42 in the series 20110508_Issue

பி.பகவதி செல்வம்மீண்டும் மீண்டும் என்னை
துரத்தி கொண்டு வருகிறாய்
ஏதோ ஒரு முறை என்னை
வீழ்த்தி விட்டாய் என்பதற்காக
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் மாட்டிக்கொள்வேன் என்று
மதம் கொண்ட யானையாய்
என்னை துரத்துகிறாய்
நானும் ஓடிகொண்டிருக்கின்றேன்
என் பின்னல் துரத்தும் உனக்கு பயந்தல்ல
என் முன்னால் எதிர்படும்
என் இலக்கை நோக்கி ….!

– பி.பகவதி செல்வம்

Series Navigation