சிநேகப் பொழுதுகள்!

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

ரசிகன்



தொலைதூர மௌனங்கள்
நம்மை சடலங்கலாகவே பாவித்து
சுமார் மூன்றரை ஆண்டுகள்!

ஒன்றும் புதியதாய் சொல்வதற்கில்லை.,
சராசரி ஆண் பெண் நட்புதான்
எனினும்
கொஞ்சம் கூடுதலாகவே
கவனிக்கப்பட்டிருக்கிறோம் நம் வட்டத்தில்!

குறைந்தபட்ச நம் வாழ்வை
சுறுக்கமாய் சொல்வதென்றால்….
வகுப்புகள் திருடி
சாலையோரம் வைத்தோம்…
நேரங்கள் கழிக்க
சண்டையிட்டே தொலைத்தோம்…
அதிகபட்ச விளைவு நட்பு!

காதலெனும் காந்தப்பறவை
உன்னை கவர்ந்து தூக்கிப்போக
உலகப்பார்வையில் நான் வேற்றுகிரக வாசி!

இடைவெளிகளும் களைத்துப்போக
தாமாகவே முன்வந்தாய்
ஒரு மன்னிப்போடு
ஒரு நலம் விசாரிப்போடு!

அரைமணி நேர உரையாடல்
நீ முடித்துப்போக
நான் மீண்டுமொரு முறை வாசிக்கிறேன்…
உன் அம்மாவின் காரக்குழம்பு
என் நாவை இனித்துப்போவதை
மறுப்பதற்கில்லை!

Series Navigation

ரசிகன்

ரசிகன்