சத்தமில்லா பூகம்பம்

This entry is part of 40 in the series 20110206_Issue

ஷம்மி முத்துவேல்மமதையின் மடிப்புகளில்
உட்சொருகிய எண்ணங்கள்
முன் பின்னிழுத்தன

தேக்கியது
உரையாடலில் வீரியம்
வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி
பகுதிகளாய் பிரித்து
நிறம் சேர்த்துக் கோர்த்தது

நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச் சிலவும்
அமிலம் தோய்த்து பச்சையாய்ச் சிலவும்

அழகாய் மிளிர்ந்தன
இனிப்புப் பூச்சுக்கள் அலங்கரித்திட

நாவின் நாண் பூட்டி ஏவப்பட
நரம்பு வழி சென்று
இதயம் தைத்திடும்
ஆயுதங்கள் இவை

நிகழ்ந்ததோர் சத்தமில்லா
பூகம்பம்

Series Navigation