சொல்லெறி

This entry is part of 43 in the series 20110117_Issue

ஹேமா சுவிஸ்


இளக்காரம்…
கேலி…
நக்கல்…
சுற்றிலும்
ஏக‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளால்
நிர‌ம்பி மன‌ம் வழிய
நம்ப மறுக்கும் மனம்
குறுகிச் சுருங்க
ச‌ரியாய் நேர்மையாய்
உண்மையாய் வாழ்வ‌தாய்
நினைத்திருந்த
பூச்சடித்த மாய‌முக‌ம்
குற்ற‌ச்சாட்டுக‌ளால் துளைபட
நொடித்த‌ நொடியில்
நொடித்து
நானாய் இருந்த “நான்”
அத‌ழ‌பாதாள‌த்துள் கவிழ்ந்து புரள
கூசி அருவ‌ருக்கும்
காறித் துப்பிய
எச்சில் நாற்ற‌த்தோடு
ஈயம் பூசிய இரும்புத் தகரமாய்
கனமேறிய
கண்ணீர்த் துளிகளோடு
தண்டக்காரனின்
ஆழ்ம‌ன நோண்டலால்
நொடிச்சாவில்
தேக‌ம்
உயிரோடு கையில்
பிடிசாம்பலாய்!!!

Series Navigation