இருந்தும் அந்த பதில்.

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

கலாசுரன்


—————————————————-
அந்த கேள்விக்கான பதில்
வருத்தமளிப்பதாகத்தான் இருக்கும்….
இருந்தும்
அந்தக் கேள்வி
பதிலுக்கான வாசலில்
வெகுநேரமாய்க் காத்திருக்கிறது

அந்த பதிலுக்கு
இதயத்தில் இன்னும்
ஈரம் காய்ந்துபோய்விடவில்லை
என்பதனால்
வருத்தமான வலிகளைவிட
காத்திருப்பின் சோம்பலும்
நிதானமின்மையும்
அழகானவை
என்ற முடிவு

காக்கவைப்பத்தின் கடினம்
குறைவதாகத் தெரியும் பட்சத்தில்

அந்தப் பதில்
தன்னைத் தானே சபித்துக்கொண்டு
மௌனித்த வெற்றிடத்தின்
ஆழங்களுக்கு குதித்து
தற்கொலை செய்வதைவிட
அந்தக் கேள்விக்காக
வேறு எதுவும்
செய்யப் போவதில்லை….!
————————————————————–

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்