கே ஆர் மணி.

This entry is part of 35 in the series 20100305_Issue

கே ஆர் மணி.


mani@techopt.com

நம்பிக்கைகள் அறுந்த பொழுதுகளில்
வசித்து பாருங்கள்.

இருக்கலாம்
இல்லாமலிருக்கலாம்
இருந்தால் என்ன செய்ய
இல்லாவிட்டால் என்ன செய்ய
எதுவும் நிகழப்போவதில்லை என தெரிந்தும்
சமன்பாடுகளை தயாரிக்கும்

கீழே படரும் வலையை காட்டி
நம்பிக்கை ஊட்டி
நீ பற என சிறகுகளில் உயிர் மூட்டி
கயிறை கால் விடுத்த ஸண கணத்தில்
வலையை மாயாமாக்கி
உணர்ந்து கொண்டே இறக்கும்

கணங்கள்

தலை தரை தொடுவதற்குள்

யாராவது எதுவாவது
சொல்லுங்களேன் ஆறுதலாய்

யாரும் எதுவும் சுடுமாறு
சொல்லிவிடக்கூடாதே

எதையோ யோசித்து, எங்கேயோ நின்று
எதையோ செய்து
காலியாகா முழுக்கோப்பையாய்

எடையிழந்து மெல்லியதாகும்
பேசி பேசியே பேசாமல் போகும்

அற்ப, அற்புத, வார்த்தை பய
கணங்கள்

வா, புத்தா
கண்டிப்பாய் கொல்ல மாட்டேன்

Series Navigation