பாரினைக் காக்கும் பசுமை

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

திருமதி.பாரதி மூர்த்தியப்பன் – சிங்கப்பூர்


இருமருங்கும் தலையசைத்து

வரவேற்ற தென்னைமரங்கள்

சின்னதாய் தேங்கிய மழைநீரில்

சிறகு விரித்துக் குளித்த சிட்டுக்குருவி

கையால் கோதி முகம் கழுவிய

கிணற்றுத் தண்ணீர்

பேருந்துக்காக காத்திருந்தபோது

என் தலை முழுவதும்

இலை உதிர்த்த அரசமரம்

தெற்கு பிள்ளையார்

உட்காந்து கனவு கண்ட வண்ணாத்திப்பாறை

நணபர்களிடம் பெருமையாக காட்டிய குளம்

நனைந்து கொண்டே காய்ந்த சாரல்மழை

எப்போதும் ஈரமாய் இருந்த மண்வாசனை

குளியலறை சோப்பு தின்று

வாந்தியெடுத்த குரங்குக்கூட்டம்

அத்தனையையும் மொத்தமாய் துடைத்து விட்டு

அணிலாடும் முன்றிலாய் என் ஊர்

சின்ன சோளத்தட்டை காத்தாடிப் போய்

ஊர் எங்கும் முளைத்து விட்ட மின் கற்றாலைகள்

பனங்காடுகளை அழித்துவிட்டு ஒற்றையாய்

உயர்ந்த தொலைத் தொடர்புக் கோபுரங்கள்

வெறிச்சோடிய தெருக்கள்

பெருமூச்சு செறிந்து நிமிர்ந்த போது இடிகள்

என்னுள் மெல்ல இறங்கின!

சொட்டை விழுந்த மேற்குத் தொடர்ச்சி மலை

இப்போதும்

பாரினைக் காக்கும் பசுமை

என்னுள் பசுமையாய்.


bm7981875@gmail.com

Series Navigation

திருமதி.பாரதி மூர்த்தியப்பன் - சிங்கப்பூர்

திருமதி.பாரதி மூர்த்தியப்பன் - சிங்கப்பூர்