சுயமில்லாதவன்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

வே பிச்சுமணி


வாழ்வில் வந்தாய் அமைதியாய்

வீட்டில் தனியே என்றாய்

அருகிலேயே இருந்தான்

அவன் நட்புகள் காணாமல்

அலைந்து சேவை

நேரம் ஒதுக்கவில்லை என்றாய்

சேவையினை ஒதுக்கினான்

நம்பிள்ளை நம் குடும்பமென்றாய்

தாய்தந்தை மறந்து குடும்ப நலமானான்

இன்றோ புதிய நட்புகள் பாராட்டி

உதவி உபத்திரவம் செய்கிறாய்

மகளிர் சேவையாய் செல்கிறாய்

உன் குடும்பம். அவன் குடும்பமென்கிறாய்

அவன் சேவை மனப்பான்மை

உன் சேவையை தடுக்க மறுக்கிறது

உன் நட்புக்கு உதவி செய்கிறது

அவன் தாராள மனம்

உன் குடும்பத்தையும் ஆராதிக்கிறது

தென்னை சுற்றி வளரும்

மணி பிளாண்ட் செடி

அழகுதான் என்றாலும்

மண்ணில் சத்து ஊறியும் வரை

நியாயம் ஆனாலும்

தென்னையையே ஊறிஞ்சால்

அது அநியாயம்

நன்றாக படர்ந்தபின்

தென்னை வெளியே

தெரிவதில்லை

அவனுள்ளமும் வெளியே

தெரிவதில்லை


Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி