தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பூ மாலை இல்லை இது !
ஆயினும் கிடைத்தது
எனக்கு
உனது உடைவாள் !
இடி இடித்து
மின்னல்கள் வெட்டித்
தீப்பற்றி
எரிவது போல்
தெரிகிறது உனது
உடைவாள் !

இந்த அகண்ட உலகத்தில்
இன்று முதல் நான்
எந்த பயத்தையும் போக்குவேன் !
ஆதலால்
எனது முயற்சிகள்
அனைத்திலும் வெற்றி உனக்குத்தான் !
எனது பயத்தையும் நீக்குவேன் !
எனக்குத் துணையாய்
என் இல்லத்தில் நீ
மரணத்தை விட்டுச் சென்றாய் !
வரவேற்பேன் நானதை
வாழ்க்கையுடன்
பிணைத்துக் கொண்டு !
உனது உடைவாள் வெட்டில்
எனது பந்தம் யாவும்
அறுந்து போகும் !
அச்சம் எனக்கில்லை
இனிமேல் !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Ocotber 6, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா