ஆத்மார்த்தமாய்க் கொடு

This entry is part of 35 in the series 20080904_Issue

கவிதா நோர்வே


ஆத்மார்த்தமாய்க் கொடு

கலைக்கப்படாத தவம்

ஆட்கொள் என்ற மந்திரம்

சுருண்டுகிடக்கும் அமைதி

தனிமையின் கருவறை

எந்த அறிகுறியும் இல்லாமல்

வருடக்கணக்கில் காத்திருப்பு

சுவாசிக்க முடிகிறது

உணவும் கிடைக்கிறது

என்பதற்கான வாழ்தல்

கலைக்கப்படாத என் தவத்தில்

கடவுள் வரப்போவதில்லை…

நன்றானத் தெரிந்த பின்தான்

நான் என் மனதின் அமைதியில்

குவியல் செய்து புதைந்துகிடக்கிறேன்

ஊட்டுக்குள் தெரியும்

சின்ன உலகத்தில்

மீளப்பிறப்பதில் சம்மதமில்லை!

ஆத்மார்த்தமாய் ஆட்கொள்

என்ற மந்திரத்தின்

பயன் கிடைக்கப் பெறாவிடில்…


kavithai1@hotmail.com

Series Navigation