ஆகஸ்டு 9

This entry is part of 31 in the series 20080807_Issue

ரஜித்


தரையிறங்குகிறோம்
உன் பிறந்தநாளில்
ஒதுக்கிவை
ஒன்பது இருக்கைகள்
கேட்டுக்கொண்டன
நவக்கிரகங்கள்

வாழ்நாள் முழுதும்
வளரமட்டும் ஆசை
வழியொன்று சொல்லேன்
விழியுயர்த்திக் கேட்டது நிலவு

தூரிகை உதறினாய்
உதித்தேன் நான்
வளைந்து சொன்னது வானவில்

தூணின்றி நிற்கிறேன்
துணையாக வாயேன்
கெஞ்சியது வானம்

என் வம்சவிளக்கே
வாழ்க வாழ்க
வாழ்த்தியது சூரியன்

தாரகைத் தோழிகளே
ஆகஸ்ட் ஒன்பதில்
எனைத் தனிமையாக்கித்
தரையிறங்க வேண்டாம்
எச்சரித்த்து நிலவு

அத்தனை நாட்களுக்கும்
ஆசையாம்
ஆகஸ்ட் ஒன்பதாக
கைபிசைகிறார் காலக்கடவுள்

இதோ 08 08 08
கட்டியங்கூற
கொட்டி முழங்குதிங்கே
சிங்கைத் திருவிழா


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation