ஒப்பனை உறவுகள்

This entry is part of 45 in the series 20080501_Issue

கண்டனூர் சசிகுமார்நான் மட்டுமல்ல
நம்மில் பலரும்
நம்மோடு சிலரும்
ஒப்பனையாகவே
உலாவிக்கொண்டிருக்கிறோம்

இதயத்தில் பெருவலி
இருமுறையான போதும்
இருக்கின்ற ஒருமகளை
இணைகரம் சேர்த்திடவே
ஒப்பனையாய் உதடுகளில்
ஒன்றுமில்லை நலம்தான்….!!!!

நாளுக்கு நாள்மாறும்
நாகரீகச் சாக்கடையில்
இதயத்தைக்கிழிக்கும்
இன்பத்தை மறைத்து –(மனதில்)
கொண்டவளை தோழியென
உறவுக்குச்சொல்லிவிட்டு
உறவான உறவுகள்
எத்தனை ??? எத்தனை ???
நான் மட்டுமல்ல
நம்மில் பலரும்
நம்மோடு சிலரும்….

ஒத்தையான ஒருமகளின்
ஒத்தைக் கல்காதணியும்
அடமானம் ஆகிடாது
அடிவயிற்றுப் பெருவலியை
அடைகாத்(த)து கோழிபோல
ஒப்பனையாய் உதடுகளில்
ஒன்றுமில்லை நலம்தான்….!!!!

இப்படியாக சிலபேர்….
இன்னும் பலபேர்….


kandanursasikumar@yahoo.com

Series Navigation