கூவத்தமிழன் கூவுகிறேன்!

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

அத்திவெட்டி ஜோதிபாரதி


அழுக்குகளின் வாசம்

அவலங்களின் குரல்

கொசுக்களின் இசை முரசும்

கொடுக்காமல் குருதி உறிஞ்சும்

படித்து உரை இல் பிறக்கும் குழந்தை

பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை

சிங்காரச் சென்னை எல்லாம் வெறும் போதை -நாங்கள்

சிரமாட்டி கேட்டுக்கொள்ளும் பேதை

சுத்த குடிநீர் இல்லாமல் தவிக்கும் -இந்த

கோலத்தை எந்த நாய் பார்க்கும்

கண் குருடாக இருந்தாலும் தெரியும் -நாற்றம்

கண நேரத்தில் நாசியை பிளக்கும்

தொழிற்சாலை சாரம் இங்கு வடியும்

தூக்கம் இன்றி வாழ எப்படி முடியும்

எட்டிப்பார்த்தால் எல்லாம் மாளிகை

எட்டடி குடிசையில் ஏழைகளின் வாழ்க்கை

சாக்கடை சகதி

அதுதான் எங்கள் வசதி

இந்த வாழ்க்கையே பழகிப்போச்சு

இந்த வாசமே வாழ்க்கையாச்சு

Email : jothibharathi@yahoo.com

Series Navigation

அத்திவெட்டி ஜோதிபாரதி

அத்திவெட்டி ஜோதிபாரதி