தாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் !

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நில மண்ணில் உன்னோடு என்னைக்
கலந்து விடு !
வானுலகின் உச்சிக்கு என்னை
ஏந்திச் செல் !
யுக யுகமாய், எண்ணிலாப்
பகல் இரவு களாய்
கம்பீரமாய்க்
களைக்காமல் என்னோடு
திரிகிறாய்
பரிதி மண்டலப் பாதையிலே
சுற்றிக் கொண்டு !

என்னை நடுவிலே வைத்துச்
சுற்றிலும்
உன் புல்லிலைகளை
விதைத்தாய் !
உனது பூக்களை மலரவிட்டுக்
குவித்தாய்
கொத்துக் கொத்தாக !
வரிசையில் அணி அணியாய் நிற்கும்
மரங்களின் இலைகள்
கனிகள், மலர்கள்,
நறுமண மகரந்தத் தூள்கள்,
தெளிக்கப் பட்டுள்ளன
பூதளத்தில் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 11, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா