தாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு !

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


விதி முடிவு யாதெனத்
தேடிட என்னை ஏன்
தேர்ந்தெடுத்தாய் ?
வாழ்வுக்கு அதிபதியே !
எனது இரவெல்லாம்,
எனது பகலெல்லாம்,
எனது பணியெல்லாம்,
என் மகிழ்வெல்லாம்
உன் ஏகாந்த பீடத்தை
உன்னத மாக்க நீ
கவனம் செலுத்துவாயா ?

வசந்த காலத்திலும்,
அடைமழைக் காலத்திலும்,
இலையுதிர் காலத்திலும்,
குளிர் காலத்திலும்,
எதிரொலித்தன
கானங்கள்
என் உள்ளத்தின் உள்ளே !
ஏகாந்த ஆசனத்தில்
அமர்ந் திருப்பவனே !
பெரிய எழுத்துக்
கீதங்கள் எல்லாம் உன்
காதில் கேட்டனவா ?

ஆசைப் பூக்களைச் சேர்த்து
அவற்றை எல்லாம் நூலில்
ஆரமாய்க் கோத்து
உன் கழுத்தில் அணிந்து
ஒப்பனை செய்ய வில்லையா ?
ஏகாந்தமாய்த் திரிந்து
என்னிளமைக் காலத்து
வனாந்திரத்தில்
பின்னிக் கொண்டு
என்ன இன்பத்தைக்
கண்டாய் நீ ?

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 14, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா