எனக்கென்று ஒரு கை

This entry is part of 42 in the series 20071213_Issue

கவிதா, நோர்வே


மழை துளி
தெறித்து உடைந்து விழும்
என் ஜன்னல் ஓரம்

ஒரு கை மெல்ல
என் தலை வருடும்

கன்னத்தில் முத்தம் ஒன்று
ஈரமாகி உடன் காயும்.

போர்வைக்குள் சூடாகி
திரும்பிப் படுக்கையிலே
ஏக்கத்துடனே
கலைந்து போகுமென்
காலைக் கனவுகள்!

இலையுதிர்காலம் 2007


kavithai1@hotmail.com

Series Navigation