தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மூலையிலே அமர்ந்து நண்பரிடம்
என் கதையைச் சொல்வதில்
மூழ்கிப் போனேன் !
வீட்டுச் சம்பவங்களை
முற்றப் படிகளில் நின்று நான்
பகிர்ந்து கொண்டேன் !

என் வாக்கு மொழிகளைச்
சுட்டெரித்து,
கண்ணீரில் மூழ்க்கித் தோய்த்து
ஓட விட்டுத் தூய்மை
ஆக்கினாய் நீ !
தெரியாத திறமையுடன்
புதிதொரு தோற்றத்தை
உருவாக்கினாய்
உன் வடிவுக்கு ஒப்பாய் !

ஒளி இழந்து போன
புதியதோர் தாளநயம்
துரிதமாய்ப் பரவி
பொங்கிடும் எந்தன் பூரிப்பு !
சுரந்திடும் அதிலொரு புது வலி
அரியதோர்
இன்னிசைக் கீதத்தை
நிரப்பி !

எண்ணாத எண்ண மெல்லாம்
சொல்லிட
என்னால் முடிகிறது !
எனக்குத் தெரியாத
ஏதோ ஓர் வலி
விழிப்பது போல் தெரிகிறது !
யாரனுப்பிய தகவல் அது வென
நானறியேன் !
யாரிடம் பேச வந்துளேன்
அதனை ?

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 26, 2007]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா