நாவடிமை (கண்ணிகள்)

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

சு.சா.அரவிந்தன்



1 நாவடிமை சொல்லடிமை யன்றி உணவுச்
சுவையடிமை ஆதலே ஆகும்;

2 அறுசுவை உண்டி தவிர்த்து ஒருசுவையில்
துய்த்தல் சுவைக்கடி மை

3 பசிக்காய் புசிப்பதை விட்டு சுவைக்காய்
புசித்தல் பழகிய தால்

4 உடற்பொருக்க மட்டுமே மருந்தாகா யென்று
திடமாக எண்ணிய தால்

5 சுவைக்கடிமை ஆதல் சினந்தூண்டும் மெய்கெடுக்கும்
சுற்றம் அவதி யுறம்

6 நாவடிமை நீங்கல் உயிர்வளர்க்கும்; நோய்தடுக்கும்
நல்ல மனிதராக் கும்

7 சுவைக்குமிழ் இன்றேல் சுவையில்லை உண்டுதீர்த்தால்
நிற்குமோ குமிழின் பயன்

8 ஒருசுவையில் துய்ப்பார் பிறசுவையைக் காணார்
சிற்ந்தது என்றெணும் மூடர்

9 நாவடிமை ஆனவன் பஞ்சமா பாதகன்
நாநசுங்க உண்பான் புலால்

10 புகழ்மாட் சிக்குரியோர் உணவாவர் உலகிற்கு
இகழ்ச்சியாம் உணவுண் பவர்


aranss@myway.com

Series Navigation

சு.சா.அரவிந்தன்

சு.சா.அரவிந்தன்