விநாயகர் துதி!

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

ஆதிராஜ்


பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தரவா? கூலிக்கு
மாடாய் உழைத்து மடியும் மனிதன் நான்!
பாடாய்ப் படுத்தாதே பார்!

ஞாலம் வலம் வந்து நல்ல பழம் உண்பதற்கு
வேலன் மயில்மீது விரைந்தும் – ஆலமுண்ட
அப்பனைச் சுற்றி வந்தே அப்பழத்தைப் பெற்றவனே
எப்படி நான் கற்பேன் இதை!

சுருக்கு வழியொன்றைச் சூட்சுமமாய்ச் சொன்னால்
பருக்கைக் கலைகின்ற பாவியேன் – சுருக்கமாய்
உந்தன் வழியில் உடல் வளர்த்துப் பேசிடுவேன்
கந்தன் ஏமாந்த கதை.

– ஆதிராஜ்.


Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்