எனக்கானவளே!

This entry is part of 43 in the series 20070125_Issue

நீ “தீ”


எனக்காக காத்திருக்கிறாய்

அந்தி சாயும் நேரத்தில்

தொய்ந்த முகமாய்

கதவோரம் காய்ந்து நின்று…

நள்ளிரவு வரை

து}ங்க விடுவதில்லை

நண்டூற நரிஊற

என்னவோ கதைத்து

எல்லாம் தெரிந்தவளாய் விளையாடுகிறாய்

ஈடு கொடுக்க முடியாததால்

உன்னைப் போல் உருமாற்ற

என்னையும் முயற்சிக்கிறாய்

என் மார்பில் தலைவைத்து

எப்பொழு து}ங்குவாயோ

களைத்துப் போன உன்னை

கலைந்தழுதிடாமல் சரிசெய்ய

துயில் கொள்ளும் உன்னழகு

துன்புறுத்தவே செய்கிறது

அதிகாலை அவசரத்தில்

உன்னை கவனிக்காமல்

என்னென்னவோ செய்துவிட்டு

அலுவலகம் போகும்போது

விழித்த உன்முகம் பார்க்க

தவமிருக்கிறேன்

செல்லச் சிணுங்களாய்

இருள் விலக்கி இமைபிரித்து

வெள்ளை சூரியன்

உன் கண்னை கூச

கலங்கிய விழியுடன்

விடைகொடுக்கிறாய்

கையில் முத்தமிட்டு

காற்று வழி து}து அனுப்பி

எப்ப வருவ

சாயங்காலம் சாக்லெட் கொண்டா

டாட்டா ப்பா…………….

என – நீ

சொல்லும் தருணத்தில்தான்

என் முழு நாளும்

முழுமையடைகிறது.


hsnlife@yahoo.com

Series Navigation