சி. ஜெயபாரதன், கனடா
புத்தாண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாரதக் குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் போது, அண்டை நாடான பங்களா தேச மக்கள் தம் தேசிய கீதமாகப் பாடிவரும் ஓர் உயர்ந்த பண்பாடு இந்தியராகிய நமக்குப் பாடம் கற்பிக்க வல்லது. பாரதத்தில் “வந்தே மாதரம்” என்று பிறந்த தாயகத்தை வாழ்த்தி, நேசித்து, வணக்கம் சொல்வது, மதத்துக்கும், மற்றவர் கலாச்சாரத்துக்கும் பாதகம் செய்வது என்று கருதும் சில இந்தியர் கீழே உள்ள தேசிய கீதத்தைப் படித்துப் பாருங்கள்.
பொன்னான என் வங்காளம்
கவியோகி: இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.
பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த காலத்தில், கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் “தங்கமான என் வங்காளம்” என்று வர்ணித்து உள்ளத்தைத் தொடும்படி எழுதிய உன்னத நாட்டுக் கவிதை இது! பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையை மறக்காமல், பங்களா தேசத்தின் இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, பாராட்டுவதற்கு உரியது.
பொன்னான என் வங்காள நாடே!
உன்னை நான் நேசிக்கிறேன்.
வானளாவிய நின் தென்றல் காற்று
என் நெஞ்சைப்
புல்லாங்குழல் ஆக்கி
எப்போதும் இசைமீட்டும்!
வசந்த காலத்தில்
என்னரும் தாயகமே! நின்
வனாந்திர மாந்தோப்பு மணம்
உல்லாசம் அளித்தென்னைத் தாலாட்டும்!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
இலையுதிர் காலத்தில்
என்னரும் தாயகமே!
முற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்
புன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்!
என்னரும் தாயகமே!
என்னே உந்தன் எழில்மயம்!
என்னே உந்தன் வண்ணமயம்!
என்னே உந்தன் அருமை!
என்னே உந்தன் மென்மை!
ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
என்னரும் தாயகமே!
உன்னிதழ்கள் உதிர்க்கும் மொழிகள்
தேனாய் இனிக்குமென் செவியினிலே!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
என்னரும் தாயகமே!
நின்முகத்தில் சோக நிழல் படியும் போது
என் கண்களில் பொங்கி எழும்
நீர்த்துளிகள்!
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com] Jan 1, 2007 [R-1]
- யாரிந்த நீதிபதிகள் ?
- சதாம்
- நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…
- நீர்வலை (5)
- திண்ணை ஏழு ஆண்டுகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)
- ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்…
- படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…
- சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா?
- காதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி !
- மடியில் நெருப்பு – 19
- தாயகமே உன்னை நேசிக்கிறேன்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி
- புதிய காற்று
- ஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்
- விடாது துரத்தும் ஜின்
- யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்
- ஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்
- Limp scholarship and Nadar bashing
- திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு
- அம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா
- பிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்
- பசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்
- ஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 18
- நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”
- இன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்
- ஒரு செம்பு சுடு தண்ணீர்.
- பொய் – திரைப்பட விமர்சனம்
- உராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை
- கடித இலக்கியம் – 39
- திருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு
- இலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்
- பேய்மழை
- புத்தக அலமாரி
- * ஒற்றை சிறகு *
- விறைத்துப்போன மௌனங்கள்
- பெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- உடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்
- மீசை