மறதி

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

இளைய அப்துல்லாஹ்


மறதி எப்பொழுதும் மனிதனை
உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது
மறதிக்கு மருந்து தேடி
ஆலாய்ப்பறக்கிறார்கள்
அது ஞாபகப்படுத்தத் தொடங்கினால்
ஒவ்வொரு மனிதனும்
தினமும் உயிர் விட்டுக்கொண்டே
இருக்க வேண்டியிருக்கும்

மறதி
ஞாபங்களை தன்னுள்ளே
புதைத்து வைத்திருக்கும் வேதாந்தி
சில நேரம் எல்லாவற்றையும்
இடம் தொியாமல்
கிளறி விடும்
எதனை ஞாபகப்படுத்த வேண்டுமோ
அதனை அது மறக்கடித்துவிடும்
மறப்பதற்கு முன்னாலும்
ஞாபகம் கொள்ளுதற்கு முன்னாலும்

மறக்கச் சொல்பவர்களுக்கே
சிலவை கனவாக வந்து வாட்டி விடும்

பத்திாிகைக் காரனுக்கு மறதி வராதாம்
ஏனெனில் அவனது மறதிக் கலங்கள்
எப்பொழுதோ மாண்டு விடுமாம்.
எல்லாம் எப்பொழுதும்
மறக்கச் சொல்லி அடிக்கடி சொல்கிறார்கள்

மறக்காமல் விட்டால்
அடிக்கிறார்கள் – இருட்டில்
மறதி சிலருக்கு ஒரு வரப்பிரசாதம்
நிறத்தைக் கூட மறந்து விடுகிறார்கள்
சில வேளை இது தான் என்று
ஞாபகப் படுத்தினால் தவிர
சிலவற்றை மறந்து விடுவதென்பது இயலாது
எனக்கு முன்னும் பின்னும்
மறதியைக் கூட்டிக் கொண்டே நடக்கின்றேன்.

மறதி எப்பொழுதும் எனக்கு துணைவன் போல

இளைய அப்துல்லாஹ்
லண்டன்
—-
anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்