உயிர் வாழ்தல் என்பது

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

இளைய அப்துல்லாஹ்


ஓரு இயத்தின் அளவு தான் உயிரும்
இருந்தபோதிலும்
ஒவ்வொரு உயிரும்
இப்பூவுலகில் வாழவே ஆசைப்படுகின்றன.

உயிாின் ஒவ்வொரு துடிப்பும்
மிக அவதானமாகவே நகருகின்றது
யாரும் தன்னைத் துன்புறுத்தாதபடிக்கு
யாரும் தன்னை நோவினை செய்யாத படிக்கு

துன்புறுத்துபவர்களும் சாக்காட்டுபவர்களும்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்

உணர்ச்சிையையும் உயிரையும் உதறிவிட்டு
கொன்று குவிக்கிறது இயற்கையும்

சுனாமிச்சுவாலையில் இருந்து மீள முதல்
இன்னும் இருபதாயிரம் பிரதேங்களை
புதைக்கறோம் எமது கைகளினாலேயே

தொண்டைக்குள் இன்னும் விக்கித்து நிற்கிறது சோகம்
மரணம் துரத்தும் உலகில் வாழுகிறோம்
துப்பாக்கி சுடும் அல்லது குண்டு எறியும் அல்லது சுனாமி வரும்
இல்லையென்றால் பூகம்பம் வந்து உயிர் எடுக்கும்

கொத்துக் கொத்தாய் பிரேதங்களைப்
புதைக்கவா இப்பூவுலகில் பிறந்தோம்
ஒவ்வொரு உயிரும் வாழவே ஆசைப்படுகின்றன.
வாழவே வேண்டும்

(பாகிஸ்தான் இந்திய பூகம்பத்தில் இருபதாயிரத்திற்கும்
மேற்பட்ட உியர்கள் பலியான போது)

இளைய அப்துல்லாஹ்
லணடன்

—-
anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்