தாயின் உயிர்க்கொடிகள்

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

கண்ணப்பு நட்ராஜ்


காற்றில்
நீந்தும்
கனத்த
பூமி போர்த்த
மேகசமுத்திரமே..
இந்த பூமி பூத்த
பூவையர்கள்,
ஒளிமலர்கள் கொண்டு
பிரபஞ்சப் பூசை நடத்தக் கண்மூடி ,
உம்மைத் தம்
தாய்மைப் போர்வையால்
இழுத்து மூடி,
சூரிய முகங்களுக்குச்
சோதி கொடுக்க சேர்ந்திருக்கின்றனர்…
கண்வளராய் நட்சத்திரங்களே…
தான் தவமிருந்து
தாலாட்டுப்பாடும்
தாயின் உயிர்க்கொடிகள்
உயர்கின்றன..
விண்ணே மண்ணே சாந்தி சாந்தி…

yknataraj@wanadoo.nl

Series Navigation

கண்ணப்பு நட்ராஜ்

கண்ணப்பு நட்ராஜ்