அமிழ்து

This entry is part of 23 in the series 20050609_Issue

பவளமணி பிரகாசம்


முன்னிரவு நேரம்
மொட்டை மாடி ஓரம்
பணிவாய் நிற்கும் காற்று
உயரத்திலோர் வட்ட விளக்கு
உறுத்தாத வெள்ளை ஒளியை
உமிழுது வெள்ளித் துகளாய்
வானமுகம் முழுதும்
பொடி பூசி முடித்து
மீதியை வீணாக்காமல்
தென்னங்கீற்று விளிம்பில்
தூவித் தீர்த்திருக்க
நிலவுப்பொடி பூசிய
நீல வான முகத்திற்கு
வைரப் பொட்டுக்களை
வைத்து மெருகூட்டி
அழகு பார்க்கும் வேளையில்
அலைகடலாய் ர்ப்பரித்து
நுரைக்கின்ற மனமதுவும்
அமைதிக்குளம் னதுவே
மந்திரக்கோல் தொட்டது போல்
பரவசமானதோர் மோனத்திலே
வசியம் போன்ற தியானத்திலே
அமிழ்த்துகின்ற யோகம் புதிது
பழக்கத்தில் புளிக்காத அமிழ்து

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation