நினைவிருக்கிறதா ?

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

பனசை நடராஜன்


வைகறைத் துயிலெழுந்து – என்னை
வரவேற்றான் தமிழன் அன்று!

நள்ளிரவுக் கொண்டாட்டத்தில்
‘ஹேப்பி நியூ இயர் ‘ கூச்சலில்
தன்னையும், ‘தமிழ்ப் புத்தாண்டு ‘
என்னையும் மறந்தான் இன்று!

‘சித்திரை முதல்நாள் ‘ மாறி
‘ஏப்ரல் பதினான்கு ‘ ஆனேன்-புது
சினிமாக்கள் வெளியாகின்ற
திருநாளில் ஒன்றாகிப் போனேன்!

தமிழனாக ஒருநாளேனும்
உணர்வு பெற்று எழுவீரென்று,
ஆண்டுதோறும் நம்பிக்கையுடன்
அனிச்சையாய் வந்து போகும்

‘தமிழ்ப் புத்தாண்டு ‘ நான்தான்!!

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –
– (feenix75@yahoo.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்